Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ஒசூர் நகராட்சி எல்லை விரிவாக்கம்: ஆதரவும்,​​ எதிர்ப்பும்

Print PDF

தினமணி 22.09.2010

ஒசூர் நகராட்சி எல்லை விரிவாக்கம்: ஆதரவும்,​​ எதிர்ப்பும்

ஒசூர்,​​ செப்.​ 21:​ ஒசூர் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு ஊராட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ​ ஒசூர் நகராட்சியுடன் சூசூவாடி,​​ ஆவலப்பள்ளி,​​ மூக்கண்டப்பள்ளி,​​ சென்னத்தூர் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகிய 5 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து ​ மாநகராட்சியாகத் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ​ இதனை வரவேற்று ஒசூர் நகரமன்றக் கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ இணைப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.​ திமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் இணைக்கும் முடிவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னத்தூர்,​​ ஆவளப்பள்ளி,​​ மூக்கண்டப்பள்ளி,​​ சூசூவாடி ஊராட்சி மன்றக் கூட்டங்களில் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 22 September 2010 11:42
 

கிழக்கு மண்டலத்தில் ரூ 8.75 கோடி பணிகள் துரிதப்படுத்த உத்தரவு

Print PDF

தினகரன் 22.09.2010

கிழக்கு மண்டலத்தில் ரூ 8.75 கோடி பணிகள் துரிதப்படுத்த உத்தரவு

கோவை, செப். 22: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர் சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 6வது வார்டில் ரூ8.75 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது.

6வது வார்டிற்குட்பட்ட நொய்ல் நகர் பகுதியில் ரூ75 லட்சத்தில் பிரதான மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்ணாரி அம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், காந்திநகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவை மொத்தம்

ரூ8.75 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இப்பணிகளை நேற்று சென்று ஆய்வு மேற் கொண்ட மாநகராட்சி துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர் சாமி ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

 

பேரூராட்சியில் தீர்மானம் மாங்காடு பகுதியில் ரூ1.20கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினகரன் 21.09.2010

பேரூராட்சியில் தீர்மானம் மாங்காடு பகுதியில் ரூ1.20கோடியில் வளர்ச்சிப் பணிகள்

பூந்தமல்லி, செப் 21: புவி வெப்பமயமாவதை தடு க்கும் வகையில் தெரு க்களில் சிஎப்எல் பல்புகள் பொருத்துவது உட்பட ரூ1 கோடியே 20 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்ய மாங்காடு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாங்காடு பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ஜபருல்லா முன்னிலை வகித்தார்.

எல்லா வார்டுகளிலும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க தலா ரூ2லட்சம் ஒதுக்கீடு செய்தல், சிவானந்தா நகர், மீனாட்சி நகர் உட்பட 5 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், புவி வெப்ப மயமாவதை தடுக்கும் வகையில், எல்லா தெருக்களிலும் சிஎப்எல் பல்புகள் பொருத்துதல், நூலகம் அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், சிமென்ட் சாலைகள் அமைத்தல் உட்பட ரூ1 கோடியே 20 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயல் அலுவலர் மகராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 48 of 160