Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருப்பூருடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இணையுமா? எல்லையை விரிவுபடுத்த திட்டம்

Print PDF

தினமலர் 14.09.2010

திருப்பூருடன் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இணையுமா? எல்லையை விரிவுபடுத்த திட்டம்

திருப்பூர் : வரும் 2011ல் திருப்பூர் மாநகராட்சியுடன் அருகில் உள்ள நல்லூர், 15 வேலம் பாளையம் நகராட்சிகள், எட்டு ஊராட்சிகள் இணைய உள்ளன. விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சி பகுதி யுடன், திருமுருகன்பூண்டி பேரூராட்சியையும் இணைக்க அரசாணை வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியுடன் 15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சி, செட்டிபாளையம், மண்ணரை, தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், நெருப் பெரிச்சல், முத்தணம்பாளையம் ஊராட்சிகளை இணைக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதி களின் பதவிக்காலம் 2011ல் நிறைவடைந்த பின், விரிவுபடுத் தப்பட்ட மாநகராட்சியை அமைக் கலாம் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், "மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதற் காக, அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை சேர்க்க வேண்டியிருந்தால், அதற்கான கருத்துருக்களை அனுப்பலாம்' என, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.உடனே, திருமுருகன்பூண்டி பேரூராட்சியை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கலாம் என அப்பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி யின் தற்போதைய பரப்பளவு 14.76 சதுர கி.மீ.,; 2001ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 18 ஆயிரத்து 557 மக்கள் வசிக்கின்றனர். இடைக் கால மக்கள் தொகை 22 ஆயிரத்து 292 பேர். 2009-10ம் ஆண்டு வருவாய் 2.11 கோடி ரூபாய்.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி இணைக்கப்பட்டால், விரிவு படுத்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி யின் பரப்பளவு 174.11 .கி.மீ., ஆக இருக்கும். எதிர்பார்க்கப்படும் ஆண்டு வருவாய் 80.24 கோடி ரூபாயாக உயரும்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, திருப்பூர்-அவிநாசி பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாலும், இணைக்கப்பட உள்ள வேலம்பாளையம் நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள தாலும்; வேகமாக நகர்மயமாகும் பேரூராட்சியாக இருப்பதாலும்; தொழில் நிறுவனங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதாலும்; மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ள வேண்டியுள்ளது.

மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டால், தேவையான உள் கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். எனவே, இணைக்கப்பட உள்ள 10 உள்ளாட்சி அமைப்புகளுடன் திரு முருகன்பூண்டி பேரூராட்சியை யும் இணைத்து, மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்த அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு மாநகராட்சி பரிந்துரைக்க உள்ளது. இதுதொடர்பாக இன்று நடக்கும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட உள்ளது. அத் தீர்மானம் அரசின் உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை : அவசர கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 14.09.2010

கரூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை : அவசர கூட்டத்தில் தீர்மானம்

கரூர்: கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி, மாநில அரசுக்கு கருத்துரு அனுப்ப, அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கரூர் நகராட்சி அவசர கூட்டம் பெத்தாச்சி மன்றத்தில், தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாபதி, துணை தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உயர்த்துதல், சேர்த்தல் தொடர்பான நடைமுறைகள் பற்றிய அரசு ஆணையில், "ஒரு நகராட்சியை முழுவதாகவோ, அதன் ஒரு பகுதியையோ, அருகில் உள்ள நகராட்சி, பஞ்சாயத்துகளையோ இணைத்து மாநகராட்சியாக உருவாக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு முடிவெடுக்கும்போது தற்போது பதவி வகிக்கும் உறுப்பினர்கள், தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பாதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நகராட்சிகளின் தரம் உயர்த்தல் குறித்து அரசுக்கு செயற்குறிப்பு அளிக்க கலெக்டர் மூலமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட உள்ளாட்சியில் மக்கள் தொகை அடர்த்தி, தனிநபர் வருவாய், விவசாயிகளின் சதவீதம், உள்ளாட்சி ஆண்டு வருமானம் கணக்கிட்டு, இணைக்க வேண்டிய உள்ளாட்சி குறித்தும் கோரப்பட்டிருந்தது. இனாம் கரூர் நகராட்சி (தேர்வு நிலை) 13.5 சதுர கி.மீ., தாந்தோணி நகராட்சி (முதல்நிலை) 26.63 சதுர கி.மீ., சணப்பிரட்டி பஞ்சாயத்து 5.58 சதுர கி.மீ., ஆகியவற்றை கரூர் நகராட்சியுடன் இணைத்து, கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசுக்கு செயற்குறிப்பு அளிக்க அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கவுன்சிலர் வடிவேல்(தி.மு.க.,): அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சிளுடன் காதப்பாறை மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் மற்றும் துணைமுதல்வருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முத்துசாமி, கமலா, நெடுஞ்செழியன், வளர்மதி ஆகியோர், தலைவர் இருக்கை முன் எதிர்த்து கோஷமிட்டனர். தொடர்ந்து, தி.மு.க., -அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே காரசாரமான வாக்குவாதம் எழுந்தது.

.தி.மு.., கவுன்சிலர்கள் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த சட்டசபையில் கரூர் எம்.எல்.., செந்தல்பாலாஜி கோரிக்கை விடுத்துவருகிறார். இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவிக்கப்படவில்லை. கரூர் மாநகராட்சியாக தரம் உயர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேசமயம், பகுதி மக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த நடவடிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

ரூ.335 கோடியில் முடிந்த பணிகள் திறப்பு: நலத்திட்டம் உதவி முதல்வர் வழங்கல்

Print PDF

தினமலர் 09.09.2010

ரூ.335 கோடியில் முடிந்த பணிகள் திறப்பு: நலத்திட்டம் உதவி முதல்வர் வழங்கல்

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், 335.73 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்து, 194.66 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 12.66 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கு பயனாளிகளுக்கு முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

திறப்பு விழா கட்டிடங்கள் விபரம்: 12.01 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட புதிய கலெக்டர் அவலக கட்டிடம், 1.54 கோடி ரூபாய் மதிப்பில் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் உட்பட வருவாய், கல்வி, பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலன், கலை பண்பாட்டுத் துறை, முன்னாள் படை வீரர் நலன், போலீஸ், மாநகராட்சி, நெடுஞ்சாலை, தாட்கோ உள்ளிட்ட துறைகளில் அமைக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் திறக்கப்பட்டன.

மாநகராட்சியில் 143 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், வெள்ளத்தடுப்பு உள்பட 335.73 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட 715 பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.

அரசின் வீட்டுவசதித் திட்டத்தில், 63.35 கோடி ரூபாய் மதிப்பில், 8,447 கான்கீரிட் வீடுகள், முசிறி ஒன்றியம் காட்டுகுளத்தில் சமத்துவரம் உள்பட 194.66 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 13 ஆயிரத்து 426 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், 12.66 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டுமனைப்பட்டா, மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சுழல்நிதி, மாற்றுத் திறனாளிக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வானங்கள், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, சலவைப் பெட்டி, தையல் எந்திரம், கதிரடிக்கும் இயந்திரம் உள்பட 7,797 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், மத்திய இணையமைச்சர் நெப்போலியன், மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி, எம்.எல்..,ககள் பெரியசாமி, சேகரன், ராஜசேகரன், ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 51 of 160