Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகளில்மீண்டும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

Print PDF

தினமலர் 03.09.2010

மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகளில்மீண்டும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியுடன் இணைய உள்ள நகராட்சிகள், ஊராட்சிகளிடம் இருந்து தற்போதைய மக்கள் தொகையை பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.திருப்பூர் மாநகராட்சியுடன் நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சிகள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், தொட்டிய மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.அதற்கான அரசாணை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன் பின், "மங்கலம், இடுவாய் மற்றும் முதலிபாளையம் ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்' என, மக்கள் பிரநிதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நகராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகளின் புள்ளிவிவரங்களை கடந்தாண்டு சேகரிக்கும் போது, முதலிபாளையம், மங்கலம், இடுவாய் ஊராட்சிகளிடமும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. மாநகராட்சி வார்டு பிரிக்கப்படும்போது, கூடுதல் தேவை ஏற்படும்போது, பயன்படுத்திக் கொள்வதற்காக, கூடுதலாக அவ்வூராட்சிகளில் பெறப்பட்டது.

இந்நிலையில், ஊத்துக்குளி ஒன்றியம் சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சி, பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி, அவிநாசி ஒன்றியம் கணியாம்பூண்டி ஊராட்சிகளில் இருந்தும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ள எட்டு ஊராட்சிகள், ஏற்கனவே நகரத்துக்கு ஈடாக வளர்ச்சி பெற்ற பகுதிகளாக உள்ளன. இதனால், அடுத்துள்ள ஊராட்சிகளிலும் அதிக மக்கள் வசிக்கின்றனர். ஒருங்கிணைந்த மாநகராட்சியாக அறிவிக்கப்படும் போது, மேலும் சில பகுதிகளை இணைக்க நேரிடும் என்பதால், கூடுதலான ஊராட்சிகளில் புள்ளிவிவரங்களை பெற்று தயாராக வைத்திருக்க வேண்டும் என தனி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். அதற்காக, 2001 மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகை, மொத்த பரப்பளவு விவரங்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,' என்றார்.

Last Updated on Friday, 03 September 2010 09:38
 

அறந்தாங்கி நகராட்சியில் எல்லா வார்டுகளிலும் ரூ3 கோடியில் பணிகள் நகர்மன்ற கூட்டத்தில் தேர்வு

Print PDF

தினகரன் 31.08.2010

அறந்தாங்கி நகராட்சியில் எல்லா வார்டுகளிலும் ரூ3 கோடியில் பணிகள் நகர்மன்ற கூட்டத்தில் தேர்வு

அறந்தாங்கி, ஆக.31: அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் ரூ.3கோடி மதிப்பில் பணிகள் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறந்தாங்கி நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

துணை தலைவர் கச்சு முகமது, ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். தலைவர் பேசும்போது, சிறப்பு சாலைகள் திட்டம் 2010&11ன் கீழ் இயற்கை இடர்பாடுகள் மற்றும் குடிநீர் திட்டங்களில் பழுதடைந்துள்ள சாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் 25 கிமீ நீளத்திற்கு சாலைகள் சீரமைத்து புதுப்பித்ததற்கு மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 27 வார்டுகளிலும் ரூ.3 கோடி 13 லட்சம் மதிப்பில் 46 வேலைகள் தேர்வு செய்யப்பட்டு மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு பல கவுன்சிலர் எதிப்பு தெரிவித்து இதனை முன்கூட்டியே ஏன் தெரியப்படுத்தவில்லை.

சம்மந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்களை கேட்காமல் நீங்களாக எப்படி வேலைகளை எப்படி தேர்வு செய்தீர்கள் என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை நகராட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்து இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய உள்ள தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்தும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நகர் மேம்பாட்டு திட்டம் ரூ1000 கோடிக்கு எதிர்பார்ப்பு

Print PDF

தினகரன் 30.08.2010

நகர் மேம்பாட்டு திட்டம் ரூ1000 கோடிக்கு எதிர்பார்ப்பு

கோவை, ஆக. 30: கோவை மாநகராட்சியின் நகர் மேம்பாட்டு திட்ட பணிகளுக்காக கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் 3186 கோடி ரூபாய்க்கு திட்ட பணிகள் துவங்கி நடக்கிறது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் துவங்கிய இந்த பணிகள், 5வது ஆண்டை எட்டிவிட்டது. ஆனாலும் திட்ட பணிகள் முழுமையாக முடியவில்லை. நகரில் 8 குளங்களை மேம்படுத்துதல், 24 மணி நேர குடிநீர் சப்ளை திட்டம், அடுக்குமாடி கார் பார்க்கிங் திட்டங்கள் இன்னும் துவக்கப்படவில்லை. மிக பிரமாண்டமான, நகரின் ஒட்டு மொத்த கட்டமைப்பையே மாற்றும் வகையிலான போக்குவரத்து மேம்பாட்டு திட்ட பணி துவக்க மாநகராட்சி இன்னும் ஆயத்தமாகவில்லை. போக்குவரத்து மேம்பாட்டிற்கு 1,149 கோடி ரூபாய்க்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்த 234 கோடி ரூபாய், 92.50 கோடி ரூபாய்க்கு சாலை கீழ் மற்றும் மேல் மட்ட மேம்பாலங்கள், 26.50 கோடி ரூபாய்க்கு சுரங்க நடைபாதை, 211 கோடி ரூபாய்க்கு ரயில்வே மேம்பாலங்கள், 585 கோடி ரூபாய்க்கு இணைப்பு சாலைகள், 57 கோடி ரூபாய்க்கு சாலை தர மேம்பாடு, 21 கோடி ரூபாய்க்கு இருசக்கர வாகன டிராக், நடைபாதை, 30 கோடி ரூபாய்க்கு போக்குவரத்து மேலாண்மை, 383 கோடி ரூபாய்க்கு பஸ் ரோடு டிரான்ஸ்போர்ட் சிஸ்டம், 478 கோடி ரூபாய்க்கு ரிங் ரோடு, 65 கோடி ரூபாய்க்கு பஸ் டெர்மினல், 36 கோடி ரூபாய்க்கு டிராக் டெர்மினல், 200 கோடி ரூபாய்க்கு வாகன நிறுத்துமிடம் என திட்டம் தயாரிக்கப்பட்டது.

சாலை மேம்பாட்டுக்கான இத்திட்டத்தில் ஸ்கை பஸ், மோனோ பஸ், எக்ஸ்பிரஸ் பாதை என பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மிக பெரிய தொகையில் அமைந்துள்ள இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட ஆயத்த வேலைகள் துவக்கப்படவில்லை. மாநகராட்சி, நெடுஞ்சாலை துறைகள் சார்பில் நடக்கும் இதர சாலை பணிகள் மட்டுமே நடக்கிறது. நகர் மேம்பாட்டு திட்டத்தின், கனவு சாலைகள் இன்னும் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை. குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடக்கும் நிலையில், சாலை பணிகளை படிப்படியாக துவங்கினால் தான், அனைத்து பிரதான, குறுக்கு சாலைகளையும் சீரமைக்க முடியும். மேம்பாலம், நடைபாதை, ரிங் ரோடு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும். ஆனால், மாநகராட்சியின் நிதி சுமையால், அதிக தொகையிலான திட்டங்கள் தாமதமாகி வருவதாக தெரிகிறது. புதிய திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும். இந்த தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நகர் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறுகையில், " கூடுதல் தொகை எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகார பூர்வ உத்தரவு கிடைக்கவில்லை, " என்றனர்.

 


Page 53 of 160