Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வெள்ளகோவில் நகராட்சியில் ரூ. 1.82 கோடிக்கு வளர்ச்சி பணி

Print PDF

தினமலர் 27.08.2010

வெள்ளகோவில் நகராட்சியில் ரூ. 1.82 கோடிக்கு வளர்ச்சி பணி

வெள்ளகோவில்: ""வெள்ளகோவில் நகராட்சியில் 1.82 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன,'' என, நகராட்சித் தலைவர் சாந்தி கந்தசாமி கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது:மாநில நிதிக்குழு நிதி 85 லட்சம் ரூபாயில் 2008-09ல் வளர்ச்சி பணி, 2009-19ல் பகுதி இரண்டு திட்டத்தில் 10 லட்சம் ரூபாயிலும் வளர்ச்சி பணி நடந்ததுள்ளது.எம்.எல்.., தொகுதி வளர்ச்சி நிதி 40 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. காமராஜபுரம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி சத்துணவு மையக் கட்டிடம், சீரங்கராயக் கவுண்டன்வலசு முதல் கோவை - திருச்சி ரோடு வரை ரோடு மேம்பாடு, உப்புப்பாளையத்தில் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திராநகர் வடக்கு, உப்புபாளையம் காலனி, தண்ணீர்பந்தல் வடக்கு, எம்.ஜி.ஆர்., நகர், சாமிநாதன் நகர், அகலரைபாளையம் புதூர், ராஜிவ் நகர், சொரியங்கிணத்துப்பாளையம், தீத்தாம்பாளையம் காலனி ஆகிய இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குமாரவலசு, காந்திநகர், குட்டக்காட்டு புதூர், சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியில் ரோடு மேம்பாடு நடந்துள்ளது.

காந்திநகர், குட்டக்காட்டுப்புதூரில், உப்புப்பாளையம் பகுதியில் தார்சாலை புதுப்பித்தல், பழைய உரக்கிடங்கு சுற்றுச்சுவர் ஆகிய பணிகள் 12வது நிதிக்குழு மானிய நிதி 7.50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டன.
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 20 லட்சம் ரூபாயில், கரட்டுப்பாளையம் ஆழ்குழாய், வெள்ளகோவில் எல்.கே.சி.,நகரில் எரிவாயு தகன மேடை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுவர்ண ஜெயந்தி திட்டத்தில் 2009-2010ல், நடேசன்நகர் சமுதாயக்கூடம், அம்மன்கோவில் முதல் கச்சேரிவலசு வரை வடிகால் பணி நடந்தது.பொது நிதியில் அம்மன் கோவில் வீதி, கரட்டுபாளையம், மூலனூர் ரோடு, குமாரவலசு ரோடு மேற்கு பள்ளி, ரெட்டிவலசில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, நாச்சியப்பகவுண்டன்வலசு பொது கிணற்றில் மின் மோட்டார் பொருத்துதல், கரட்டுப்பாளையம் () பகுதியில் பாலம், ஆகிய பணிகள் நடந்துள்ளன. மொத்தம் 1.82 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

ரூ.54.50 லட்சத்தில் பெரும்பாக்கம் சாலைகள், பூங்கா சீரமைக்க முடிவு

Print PDF

தினமலர் 27.08.2010

ரூ.54.50 லட்சத்தில் பெரும்பாக்கம் சாலைகள், பூங்கா சீரமைக்க முடிவு

பெரும்பாக்கம்: பெரும்பாக்கத்தில் சாலைகள் மற்றும் ராதா நகர் பூங்கா சீரமைக்க 54.50 லட்ச ரூபாயை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கியுள்ளது.

பெரும்பாக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல்வேறு காரணங்களுக்காக அப்பகுதி மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திரா நகரில் உள்ள ஏழு தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி..,) 22.5 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், 90 சதவீதம் சி.எம்.டி..,வும், 10 சதவீதம் ஊராட்சியும் பங்களிக்கும். பெரும்பாக்கத்தில் குப்பைகள் எடுப்பதற்காக 7 லட்ச ரூபாய் செலவில் டிராக்டர் வாங்க நிதி ஒதுக்கியுள்ளது. அதேபோல, ராதா நகர் பூங்காவை சீரமைத்து சுற்றுச்சுவர், நடைபாதை ஆகியவை உருவாக்க 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், 80 சதவீதம் சி.எம்.டி..,வும், தலா 10 சதவீதம் ஊராட்சி மற்றும் பொதுமக்களும் பங்களிக்கின்றனர். இதற்கான பணிகள் அடுத்து சில நாட்களில் துவக்கப்படவுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற, சமுதாயநலக் கூட சுற்றுசுவர் ஆகியவை 9.44 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளன. இதில், 33.5 சதவீதம் பொதுமக்கள் நிதி மூலம் கட்டட்படவுள்ளது. இத்தகவலை ஊராட்சி மன்ற தலைவர் சுஹாசினி ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் தெரிவித்தனர்.

 

மேயர் தகவல் வார்டு வளர்ச்சி பணிக்கு கவுன்சிலருக்கு நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 27.08.2010

மேயர் தகவல் வார்டு வளர்ச்சி பணிக்கு கவுன்சிலருக்கு நிதி ஒதுக்கீடு

பெங்களூர், ஆக. 27: பெங்களூர் மாநகராட்சி வார்டுகளில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வு பார்க்க மாட்டேன் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.

மாநகராட்சியின் நாகபுரா வார்ட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு மையம், உடற்பயிற்சி நிலையம், நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: வார்டுகளில் சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வசதியாக ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் என்ற பேதம் பார்ப்பதில்லை. மொத்ததில் மாநகரில் மக்கள் தேவைகள் சந்திக்கும் வகையில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைத்து கவுன்சிலர்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் என் மீது யாரும் சந்தேக பார்வை பார்க்க வேண்டாம் என்றார்.

 


Page 54 of 160