Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

43வது வார்டில் 1.92 கோடி வளர்ச்சிப்பணி : பொன்மலை கோட்டத்தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 20.08.2010

43வது வார்டில் 1.92 கோடி வளர்ச்சிப்பணி : பொன்மலை கோட்டத்தலைவர் தகவல்

திருச்சி: ""நான்கு ஆண்டுகளில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு வளர்ச்சிப் பணிகள் தனது வார்டில் நடைபெற்றுள்ளது,'' என்று 43வது வார்டு கவுன்சிலரும், பொன்மலை கோட்டத் தலைவருமான பாலமுருகன் தெரிவித்தார்.

மொத்தம் 60 வார்டு கொண்ட மாநகராட்சியில் 42வது வார்டு கவுன்சிலராக மூன்றாவது முறையாக தி.மு..,வைச் சேர்ந்த பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், தனது வார்டு, பொன்மலை கோட்டத்துக்காக பல்வேறு பணிகளை மாநகராட்சி மற்றும் பல்வேறு நிதி மூலம் செய்துள்ளார்.

கடந்த நான்காண்டில் இவரது வார்டில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப்பணி நடந்துள்ளது. இதில், சாலை, வடிகால், கட்டிடம், குடிநீர் வழங்கல் உள்பட பல்வேறு பணிகள் அடங்கும்.

பொன்மலை கோட்டத் தலைவர் பாலமுருகன் கூறியதாவது: நான் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட 43வது வார்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிக்காக நாள்தோறும் உழைத்து வருகிறேன். வார்டு மக்கள் மட்டுமின்றி கோட்டத்தலைவர் என்ற முறையில் எனது கோட்டத்துக்குட்பட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். பல கோடி மதிப்பிலான பணிகளை பொன்மலை கோட்டத்துக்கு பெற்றுத்தந்துள்ளேன்.

எனது வார்டில் இதுவரை ஒரு கோடியே 92 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணி மாநகராட்சி நிதி மூலம் செய்துள்ளேன். ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் 7,050 மீட்டர் சாலைப்பணி நடந்துள்ளது. ஏழு கட்டிடம் 42 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் வழங்கும் பணி நடந்துள்ளது.

மாநகராட்சி பொதுநிதி, எம்.எல்.., சாலை அபிவிருத்தி பணி, எம்.பி., 12வது நிதிக்குழு, காப்பீடு மற்றும் பங்கீட்டு நிதி, மாநகராட்சி மேயர் நிதி போன்ற பல்வேறு நிதி மூலம் இப்பணிகள் நடந்துள்ளது. நிதியுதவி தந்த மேயர், துணைமேயர், எம்.எல்.., எம்.பி., குறிப்பாக அமைச்சர் நேருவுக்கும் நன்றி.

திருச்சி மாநகராட்சி வளர்ச்சிக்காக 481.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித் தந்த முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு மக்களுடன் இணைந்த நன்றி. இவ்வாறு அவர் கூறினார

 

ஈரோடு தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணி

Print PDF

தினமலர் 20.08.2010

ஈரோடு தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணி

ஈரோடு: ""ஈரோடு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடக்கிறது,'' என்று, ஈரோடு எம்.எல்.., ராஜா கூறினார்.

நசியனூர் அருகே 300 கோடி ரூபாய் திட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க பணிகள் நடக்கின்றன. நேதாஜி ரோட்டில் 1.87 கோடியில் வணிக வளாகம், தினசரி மார்க்கெட்டில் 64 லட்சம் ரூபாயில் வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் தளம் மற்றும் வடிகால் அமைத்தல் மற்றும் சின்னமுத்து வீதியில் புதை வடிகால் அமைத்தல் பணி 2.50 கோடி ரூபாயில் பணி நடக்கிறது.

ஈரோடு நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட 15 குடிசை பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 454 பேருக்கு புது வீடுகள் கட்டுதல் மற்றும் அடிப்படை வசதி செய்வதற்கு ஐந்து கோடியே 45 லட்சம் ரூபாய் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மானியம் பெறப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது. சூரியம்பாளையத்தில் 500 குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படவுள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெண்டிபாளையம் உரக்கிடங்கில் 59 லட்சம் ரூபாயில் நடக்கின்றன. வெண்டிபாளையம் அருகே காவிரியாற்றின் குறுக்கே கதவணை பணிகள் நடந்து வருகிறது. ரிங் ரோடு அமைக்கும் பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மணிக்கூண்டு அருகே 1.87 கோடி ரூபாயில் வணிக வளாகம் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேட்டூர் ரோட்டில் 19 லட்சம் ரூபாயில் இரும்பு பாலம் கட்டப்படவுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பணி 25 கோடி ரூபாயில் நடக்கிறது. காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலக்காமல் தடுக்க ஏழு கோடி ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே 12 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. தொட்டம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் பத்து கிராம பஞ்சாயத்துகள் பயன்படும் வகையில் எட்டு கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவுற்றுள்ளது.

ஈரோடு எம்.எல்.., ராஜா மேலும் கூறியதாவது:ஈரோடு தொகுதியில் 2006 முதல் 2009 வரை 258 பணிகள் 12 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. 191 பணிகள் 23 கோடியே 11 லட்சம் செலவில் நடந்து வருகிறது. காவிரி சாலை நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய பள்ளி கட்டிடம் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளியில் 48 லட்சம் ரூபாயில் கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாமன்றக்கூடம் மற்றும் கூடுதல் அலுவலக கட்டிடம் ஐந்து கோடி ரூபாயில் நடக்கிறது.

காசிபாளையம் நகராட்சியில் 468 பணிகள் எட்டு கோடியே 66 லட்சம் ரூபாய், வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 308 பணிகள் 17 கோடி ரூபாய், பெரியசேமூர் நகராட்சியில் 106 பணிகள் இரண்டு கோடியே 52 லட்சம் ரூபாய், சூரம்பட்டியில்127 பணிகள் மூன்று கோடியே 61 லட்சம் ரூபாய், சூரியம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் பகுதியில் 107 பணி இரண்டு கோடியே 88 லட்சம் ரூபாய், சித்தோடு டவுன் பஞ்சாயத்து பகுதியில் 40 பணி 77 லட்சம் ரூபாய், பெரிய அக்ரஹாரத்தில் 63 பணி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய், ஈரோடு யூனியனில் 1,000 பணிகள் 10 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

மகாலைச் சுற்றி அழகுபடுத்த ரூ.1.35 கோடியில் திட்டம்

Print PDF

தினமலர் 20.08.2010

மகாலைச் சுற்றி அழகுபடுத்த ரூ.1.35 கோடியில் திட்டம்

மதுரை:மதுரை திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றி, 1.35 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மகாலின் முன்புறத்தில், 11.50 லட்சம் ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் சிலையைச் சுற்றிலும் புல்வெளி அமைத்து, நடைபாதையை அழகுபடுத்துதல், மகாலின் முன்புற திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் 12.90 லட்சம் ரூபாய் செலவில் "பேவர் பிளாக்' அமைத்தல், மகால் பகுதியில் உள்ள துளசிராம் பூங்காவில் 20.50 லட்சம் ரூபாய் செலவில் நீரூற்று, கிரானைட் பெஞ்ச், பெயர் பலகை, மின் விளக்கு வசதிகள் செய்தல், திருமலை நாயக்கர் அரண்மனையைச் சுற்றிலும் 84.40 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை, மின் விளக்கு அமைத்தல் உள்பட மொத்தம் 1.35 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப் படுவதற்கான தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 


Page 57 of 160