Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நேருஜி சிறுவர் பூங்காவில் ரூ.22 கோடியில் ஓட்டல், ஷாப்பிங் மால், கண்காட்சி அரங்கு வசதி

Print PDF

தினமலர் 19.08.2010

நேருஜி சிறுவர் பூங்காவில் ரூ.22 கோடியில் ஓட்டல், ஷாப்பிங் மால், கண்காட்சி அரங்கு வசதி

திருநெல்வேலி: பாளை நேருஜி சிறுவர் பூங்காவில் 22 கோடியில் ஓட்டல், ஷாப்பிங் மால் மற்றும் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட உள்ளது. பாளை நேருஜி சிறுவர் பூங்காவில் பல்நோக்கு கலையரங்கம் மற்றும் வணிக வளாகம் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் மானிய நிதி அல்லது திட்ட உருவாக்கல் மானிய நிதியில் இருந்து ஒரு வணிக நடவடிக்கைகளின் ஆலோசகரை நியமித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த இடத்தை ஆய்வு செய்து ஒருங்கிணைந்த ஓட்டல், ஷாப்பிங் மால் மற்றும் கண்காட்சி மையம் 22 கோடியில் அமைக்கலாம் என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு விருப்பம் தெரிவிக்கும் நிறுவனத்தை மாநில மற்றும் இந்திய அளவில் தேர்வு செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Last Updated on Thursday, 19 August 2010 08:39
 

பழுதடைந்த சாலைகளால் மக்கள் அவதி; ரூ.33 கோடியில் 143 பணிகள்

Print PDF

தினமலர் 19.08.2010

பழுதடைந்த சாலைகளால் மக்கள் அவதி; ரூ.33 கோடியில் 143 பணிகள்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள் 33 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சியில் 2010-11ம் ஆண்டிற்கு சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் பஸ்கள் செல்லும் சாலைகள், புராதன நகர சாலைகள், வழிபாட்டு தலங்களுக்கான சாலைகள், சுற்றுலா தலங்களுக்கான சாலைகள், கல்வி நிலையங்களுக்கு செல்லும் சாலைகள், தொழிற்கூடம் மற்றும் சந்தை பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் ஆகிய சாலைகளை அமைப்பதற்கு அதற்கான மதிப்பீடுகளை தயாரிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் மொத்தம் 123 பணிகளுக்கு 2,913.52 லட்சம் மதிப்பில் சாலைகளை அமைக்க மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கூடுதல் ஒதுக்கீடு கோரவும் முடிவு செய்யப்பட்டு மொத்தம் 20 பணிகள் 404.10 லட்சம் செலவில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று (19ம் தேதி) நடக்கும் மாநகராட்சி அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் மொத்தம் 33 கோடி ரூபாயில் 143 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை கவுன்சிலர்கள் பெரிதும் வரவேற்கும் சூழ்நிலையில் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.

Last Updated on Thursday, 19 August 2010 08:39
 

மதுரையில் விடுபட்ட திட்டங்கள் 2012ல் நிறைவேறும்?

Print PDF

தினமலர் 18.08.2010

மதுரையில் விடுபட்ட திட்டங்கள் 2012ல் நிறைவேறும்?

மதுரை:மதுரை மாநகராட்சியில் இந்த ஆண்டு, விடுபட்டுப்போன, பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் திட் டங்கள், 2012ம் ஆண்டில், மத்திய அரசின் நிதி உதவியின் கீழ், நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், மதுரையில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இவற்றை பார்வையிட, கும்பகோணம் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மதுரை வந்திருந்தனர்.

அவர்களிடம் தலைமை பொறியாளர் சக்திவேல் கூறியதாவது:மதுரையின் வளர்ச்சி பணிக்காக, மத்திய மாநில அரசுகள் 2005ம் ஆண்டு 2496 கோடி ரூபாய், நிதி வழங்க ஒப்புதல் அளித்து, அதில் 931 கோடி ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடக் கிறது. குறிப்பாக, வைகை இரண்டாவது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், வைகையின் குறுக்கே மேலக்கால் மற்றும் மணலூர் பகுதிக ளில் தடுப்பணைகள், குடிசைகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுதல், மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்தல் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, சில பணிகள் முடிந்துள்ளன.

வெள்ளக்கல் மற்றும் சக்கிமங்கலம் பகுதிகளில் நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கப்படுகிறது. 2012ம் ஆண்டு, இதே திட்டத்தின் கீழ், பாலங்கள், சாலைகள், சுரங்கப் பாதைகள், வைகை கரையோரம் சாலைகள் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

 


Page 58 of 160