Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் கோரிக்கை

Print PDF

தினகரன் 09.08.2010

பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக. 9: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை நகரத்தில் 16 வீதிகள் அழகிய நகரமாக விளங்கியதை பல்வேறு புத்தகங்கள், கட்டுரைகள் மூலம் தெரியப்படுகிறது. மன்னர் காலத்தில் வீதிகளில் வலம் வரும்போது அவரை மக்கள் வேடிக்கை பார்த்து வணங்குவது வழக்கமாக இருந்து வந்தது. புதுக்கோட்டை நகரத்தை நவீனப்படுத்த பாதாள சாக்கடை திட்டத் தை அரசு கொண்டு வந்துள் ளது.

ஆனால் பல்வேறு வீதி களில் சாக்கடை திட்டம் நிறைவேற்றுவதற்கு வீதிகளில் உள்ள சாக்கடைகள் மற்றும் சாலைகள் இடிக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்படும் பணி தொடர் ந்து நடைபெற்று வருகிறது. இது பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது. சில இடங்களில் இடையூறுகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் பல வீதிகளில் மேடு, பள்ளங்களாக, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று பொதுமக்கள், வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை திட்டம் வரவேற்கக்கூடியது என்றாலும், திட்டத்தை உடனே முடிக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கோரிக்கை.

குறிப்பாக ஆலங்குடி சாலையில் பாதாள சாக் கடை திட்டத்திற்கு சாலை யில் இடிக்கப்பட்டு குழாய் கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல பல்வேறு இடங்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. தேக்கம் இல்லாமல் பணிகளை உடனே முடிக்க நகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 09.08.2010

பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேனி: தேனியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னமாயன், மாவட்ட பொருளாளர் மாயாண்டி, விவசாய அணி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்றார். மாநில பொது செயலாளர் இசக்கிமுத்து, தலைமை நிலைய செயலாளர் குருசாமி, மாநில துணை தலைவர் பெருமாள் உட்பட பலர் பேசினர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றிய அ.தி.மு.., பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.., கூட்டணி வெற்றிக்கு பணியாற்றுவது. முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த வேண்டும். தேனியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். புதிய பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைவு படுத்தவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

Print PDF

தினமணி 06.08.2010

துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

திருநெல்வேலி, ஆக. 5: திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தமது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் இரண்டு அரசு விழாக்களில் பங்கேற்கிறார்.

இந்த விழாக்களில் அவர் திறந்து வைக்கும் பணிகள், அடிக்கல் நாட்டும் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பு ரூ. 184 கோடி ஆகும்.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வண்ணார்பேட்டையில் ரூ.14 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார்.

பின்னர், வீரவநல்லூரில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள "மயோபதி' தசைத்திறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.

காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை மேம்பாலம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் குடிநீர்த் திட்டம் உள்பட ரூ. 47.89 கோடி மதிப்புள்ள 354 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் ரூ.25 கோடியில் மேம்பாலம் உள்பட ரூ. 55.50 கோடி மதிப்புள்ள 40 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், 2,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி உள்பட ரூ.18.98 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 34,087 பேருக்கு துணை முதல்வர் வழங்குகிறார்.

மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், ரூ. 39.22 கோடி மதிப்புள்ள 73 பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். தென்காசி, செங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.20.66 கோடி மதிப்பிலான 66 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். 1,654 பேருக்கு ரூ.90 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் வழங்குகிறார்.

சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் களப்பாகுளத்தில் நடைபெறும் விழாவில், அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இம் மாவட்டத்தின் 8-வது சமத்துவபுரத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையையும் துணை முதல்வர் திறந்துவைக்கிறார். இங்கு மொத்தம் ரூ.10.24 லட்சம் மதிப்பிலான 27 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். மேலும் ரூ. 2.95 கோடி மதிப்புள்ள 10 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 4,420 பேருக்கு ரூ.5.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.

பட்டமளிப்பு விழா: சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார் துணை முதல்வர். அங்கு ரூ. 47 கோடி செலவில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

 


Page 63 of 160