Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் தூத்துக்குடி, நெல்லையில் ரூ372 கோடி திட்டப்பணிகள்

Print PDF

தினகரன் 05.08.2010

துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் தூத்துக்குடி, நெல்லையில் ரூ372 கோடி திட்டப்பணிகள்

நெல்லை, ஆக. 5:தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்க ளில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் பல் வேறு நிகழ்ச்சிகளில் ரூ.372 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிட திறப்பு விழா, சிறப்பு பொருளாதார மண் டலம் அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று தூத்துக் குடி வந்தார்.

மாவட்ட திமுக செயலாளர் பெரிய சாமி தலைமையில் துணை முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்பிக் விருந்தினர் மாளிகை யில் தங்கினார்.

இன்று காலை காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் ஆயி ரம் மெகாவாட் புதிய மின் நிலைய கட்டுமானப் பணி களை பார்வையிடுகிறார். முத்தையாபுரத்தில் காலை 11 மணிக்கு 5 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா வில் பங்கேற்கிறார்.

மாலை 3.30 மணிக்கு தருவைகுளத்தில் புதிய சமத்துவபுரம், 4.30 மணிக்கு மாப்பிள்ளையூரணியில் ரூ.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 941 சுனாமி குடியிருப்புகள், 5 மணிக்கு ரூ.5 கோடி யில¢ புதிதாக கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். 5.30 மணிக்கு தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.171.95 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

இரவு 7.30 மணிக்கு வடக்குகாரசேரி கிராமத்தில் ரூ.500 கோடியில் நிறைவேற்றப்பட உள்ள உணவு பொருள் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் கார் மூலம் நெல்லை வரும் துணை முதல்வருக்கு நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் பாளை. சாரதா கல்லூரி அருகே வர வேற்பு அளிக்கப்படுகிறது.

ஆக.6ம் தேதி காலை 9 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பின¢னர் டக்கரம்மாள்புரத்தில் அம்பை. ஆறுமுகத்தின் புதிய இல் லத்தை திறந்து வைக்கி றார்.

இதைத் தொடர்ந்து வீரவநல்லூரில் ரூ.3 கோடியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள மயோ பதிதசைச்சிதைவு சிகிச்சை மையத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார். கல்லிடைக்குறிச்சி பஸ் ஸ்டாண்டை திறந்து வைக் கும் துணை முதல்வர் அந்த பகுதியில் திமுக ஏற்பாடு செய்துள்ள கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் நடக்கும் அரசு விழாவில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, வி.கே.புரம், மணிமுத்தாறு குடிநீர்த் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 2 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார். விழாவில் ரூ.123.37 கோடி மதிப்பிலான பணி களை துவக்கி வைக்கிறார்.

மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள¢ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் ரூ.21 கோடியில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம், அச்சன்புதூரில் 110 கே.வி., துணை மின்நிலையம் ஆகிய பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட ரூ202 கோடி

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் அரசு விழாக்களில் ரூ.78.80 கோடி செலவில் நிறைவடைந்த 447 அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.97.68 கோடி மதிப்பிலான 123 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26.22 கோடியில் 40 ஆயிரத்து 161 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தம் ரூ.202.69 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.

3 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம் விழாவில் ரூ.60.79 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.

7ம் தேதி காலை சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் களப்பாகுளத்தில் நடக்கும் அரசு விழாவில் ரூ.1.68 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகி றார். விழாவில் ரு.18.53 கோடி மதிப்பிலான திட்டங் களை துவக்கி வைக்கிறார்.

மாலை 4 மணிக்கு நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் முதல் பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

விழாவில் ரூ.7.44 கோடியில் அண்ணா பல்கலைக்கழக புதிய கட்டிடம், தூத்துக்குடி, நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.19.50 கோடியில் புதிய கட்டிட பணி ஆகியவற்றிற்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இத்துடன் நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டு செல¢கிறார்.

 

துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் கூவம் சீரமைப்பு6 ஆண்டுகளில் முடியும்

Print PDF
தினகரன் 05.08.2010

துணை முதல்வர் ஸ்டாலின் தகவல் கூவம் சீரமைப்பு6 ஆண்டுகளில் முடியும்

சென்னை, ஆக.5: கூவம் நதி ஆறு ஆண்டுகளில் முழுமையாக சீரமைக்கப்படும். இதற்காக ரூ1,200 கோடி செலவிடப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் ரோட்டிலுள்ள கூவம் நதிக் கரையிலும், புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் கூவம் நதிக் கரையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா புதுப்பேட்டையில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை முதல்வர் மு..ஸ்டாலின் பங்கேற்று பூங்காக்களை திறந்து வைத்தார்.

பின்னர், நிருபர்களிடம் மு..ஸ்டாலின் கூறியதாவது: லாங்ஸ் கார்டன் பகுதியில் கூவம் கரையில் ரூ1 கோடியே 35 லட்சம் செலவிலும் சிவானந்தா சாலையில் கூவம் நதிக்கரையில் ரூ86 லட்சம் செலவிலும் உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கூவம் நதியை முதலிலும், பின்னர் சென்னை நகரின் பிற முக்கிய நீர் வழித்தடங்களையும் சேர்த்து சீரமைக்கும் நோக்கத்துக்காக, அடையாறு பூங்கா அறக்கட்டளை என்பது, ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைஎன கடந்த ஜனவரி 22ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.

சென்னை நீர்வழித்தடங்களை சீரமைக்கவும், திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தியபின் அவற்றை கண்காணிக்கவும் எனது தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூவத்தை சீரமைக்க, ‘சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துடன்சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை கடந்த மார்ச் மாதம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ1,200 கோடியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூர் நதியை சீரமைக்க 10 ஆண்டுகள் ஆனது. கூவம் நதி ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் சீரமைக்கப்படும்.

இவ்வாறு துணை முதல்வர் கூறினார். நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, பொதுப்பணித்துறை முதன்மை செயலர் ராமசுந்தரம், துணை முதல்வரின் முதன்மை செயலாளர் கே.தீனபந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் செயலர் பணிந்திர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 1200 தொழிற்கூடம் ஆப்பூருக்கு மாற்றம்

 

ஒகேனக்கல்லில் ரூ.2.3 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் தகவல்

Print PDF

தினமலர் 05.08.2010

ஒகேனக்கல்லில் ரூ.2.3 கோடியில் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் தகவல்

பென்னாகரம்: ""ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வளர்ச்சி பணிக்கு 2 கோடியே 3 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,''என கலெக்டர் தெரிவித்தார். ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆடிப்பெருக்கு விழாவுக்கு கலெக்டர் அமுதா தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அலுவலர் தண்டபாணி வரவேற்றார். எம்.எல்.., இன்பசேகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் ஸ்டான்லி முருகேசன், யூனியன் சேர்மன் திரவுபதி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆறுமுகம், அமுதா, தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் கவிதா சம்பத், கவுன்சிலர் முருகன், தாசில்தார் ஜீனத்பீவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி, தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை, வனத்துறை மகளிர் மேம்பாட்டுக்குழு, கதர் துறை சார்பில் கண்காட்டி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. நிறைவு நாளையொட்டிகரகாட்டம், தெம்மாங்கு பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, பரதநாட்டியம் ஆகியவை நடந்தது.

கலெக்டர் அமுதா பேசியதாவது: ஒகேனக்கல் சுற்றுலாதளத்தை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கவுள்ளது. இசைக்கேற்ப நடனமாடும் நீர் ஊற்று அமைக்கும் பணி, காவிரி கரையோரம் சுற்றுலா பயணிகள் பயமின்றி குளிக்க படிக்கட்டுகள், சுற்றுலா பயணிகளின் உடமைகளை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டக வசதி ஆகிய பணிக்கு 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலை பண்ணையை மேம்படுத்த 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மசாஜ் தொழிலாளர்களுக்கு ஆயுர்வேத பயிற்சி அளிக்க கேரளாவில் இருந்து மசாஜ் நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். பரிசல் ஓட்டிகள் 2 மணி நேரத்திற்கு கூடுதலாக பரிசல் ஓட்டினால் பயணிகளிடம் 100 ரூபாய் வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் 85 நபர்களுக்கு பரிசல் ஒட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Last Updated on Thursday, 05 August 2010 05:42
 


Page 65 of 160