Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு இடம் புதுப்பொலிவு பெறுகிறது வஉசி பூங்கா ரூ.30 லட்சத்தில் நடைபாதை, புல்தரை அமைக்க திட்டம்

Print PDF

தினகரன் 03.08.2010

மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு இடம் புதுப்பொலிவு பெறுகிறது வஉசி பூங்கா ரூ.30 லட்சத்தில் நடைபாதை, புல்தரை அமைக்க திட்டம்

ஈரோடு, ஆக. 3:ஈரோடு வ..சி. பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடை பாதை மற்றும் புல்தரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் கூடுதலாக இந்த பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த பூங்கா புதுப்பொலிவு பெறுகிறது.

ஈரோடு மாநகராட்சி சார்பில் வ..சி. பூங்கா 1927ம் ஆண்டு முதல் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஈரோடு மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா இருந்து வருகிறது. இந்த பூங்காவில் புல்வெளியில் இந்தியா வரைபடம், செயற்கை நீரூற்று மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம், புலி, மான்கள், மயில், அரியவகை குரங்கினங்கள் என்று பல்வேறு வனவிலங்கு சரணாயலமும், குழந்தைகளை கவரும் வகையில் சிறுவர்கள் ரயிலும் இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில் உரிய முறையில் பராமரிக்காததால் இங்கிருந்த விலங்குகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுகள் வெறிச்சோடியது. மேலும் சிறுவர் ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனது. மாநகராட்சி சார்பில் இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாத நிலை இருந்து வந்தது.

இங்குள்ள செயற்கை நீருற்றும் செயல்இழந்து போனது. பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்த இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி போனது. பகல் நேரங்களில் போதையில் பலர் பூங்காவில் படுத்து கிடப்பதை காணலாம்.

இந்த பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து மாநகராட்சி சார்பில் பூங்காவை மேம்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்து அழகாக காட்சி தருகிறது. தற்போது புல்வெளி அமைக்கும் பணி நடக்கிறது.

 

1.2 கி.மீ., நீளத்திற்கு பூங்கா

Print PDF

தினமலர் 03.08.2010

1.2 கி.மீ., நீளத்திற்கு பூங்கா

சென்னை : ""கூவம் சீரமைப்பு பணியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைப்பார்,'' என மேயர் சுப்ரமணியன் கூறினார்.புதுப்பேட்டையில் பூங்கா சீரமைக்கும் பணியை நேற்று பார்வையிட்ட மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: கூவம் சீரமைப்பு பணியின் கீழ் புதுப்பேட்டை, லாங்க்ஸ் கார்டன் சாலையில், கூவம் ஆற்றங்கரையில் மேற்கு பகுதியில் 730 மீட்டர் நீளத்திற்கு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சுற்றுச்சுவர் அழகிய புல் தரை, பூஞ்செடிகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் பூங்காவை நாளை திறந்து வைப்பார். அது போல் சுவாமி சிவானந்தா சாலையில் கூவம் ஆற்றங்கரை ஓரம் 86 லட்ச ரூபாய் செலவில், 1.2 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Tuesday, 03 August 2010 06:05
 

கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்

Print PDF

தினமணி 02.08.2010

கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்

கொடைக்கானல், ஆக. 1: சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், கொடைக்கானலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.வள்ளலார் தெரிவித்தார்.

கொடைக்கானல் நகராட்சியும், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினரும் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி, கொடைக்கானல் நகர்மன்ற அரங்கில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் ராஜன் வரவேற்றார்.

இதில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அப்துல்கனி ராஜா பேசியதாவது:

கொடைக்கானலில் 3 மாத சீசன் காலங்களில் மட்டும் வருவாய் கிடைக்கிறது. இதனை வைத்தே அடுத்த 9 மாத காலத்திற்கு செயல்பட வேண்டிய சூழ்நிலை.

நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் லாட்ஜ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அனுமதியற்ற விடுதிகள் இருந்து வருகின்றன. இதனால் உரிமம் பெற்று நடத்தி வரும் காட்டேஜ்கள், ஹோட்டல்கள் பாதிக்கப்படுகின்றன. லாட்ஜ்களுக்கு வரி விதிப்பை வரைமுறைப்படுத்த வேண்டும். சுற்றுலா வழிகாட்டிகளுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து நகர்மன்றத் தலைவர் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலிலுள்ள ஹோட்டல்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டதை எதிர்த்து 32 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.1.88 கோடி வரி பாக்கி உள்ளது.

வரி வசூல் மூலமாகவே மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் பகிரங்க முறையில்தான் ஏலம் விடப்பட்டன. அதனையும் எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால், அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தையும், வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள காதி கிராப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் பெற்று அதில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டும்.

பள்ளங்கி கிராமம் வழியாக பழனிக்கு சாலை அமைக்க வேண்டும் என்றார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

கொடைக்கானல் நகரில் அனுமதியில்லாத காட்டேஜ்கள் மீது கடந்த ஆண்டு ரூ.1.25 கோடி வரை வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹோட்டல்களில் இலைகளில் மட்டுமே உணவு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஹோட்டல் உரிமையாளர்கள் உதவி செய்ய வேண்டும். ஹோட்டல்களில் விலைப்பட்டியலை கட்டாயமாக வைக்க வேண்டும்.

ஹோட்டல் உரிமையாளர்களின் வரியை குறைப்பது குறித்து லோக் அதாலத் முறையில் பேச்சு வார்த்தை நடக்க முன் வரவேண்டும்.

பிரையண்ட் பூங்காவில் ரூ.1.25 கோடி செலவில் ரோஜா தோட்டம் அமைக்கப்படும். அண்ணா சிலையை சுற்றி இசை நடன நீரூற்று, லேசர் ஷோ, ஆட்டுப் பண்ணைப் பகுதியில் பாரா கிளைடிங், யானை சவாரி, வனத்திற்குள் நடைப் பயிற்சி, பேட்டரியால் இயங்கும் கார்கள், பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன என்றார் ஆட்சியர். கூட்டத்தில் ஆர்.டி.. வீரபாண்டியன், வட்டாட்சியர் உதயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 68 of 160