Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கூகலூரில் ரூ.1.70 கோடியில் வளர்ச்சிப்பணிகள்

Print PDF

தினமலர் 02.08.2010

கூகலூரில் ரூ.1.70 கோடியில் வளர்ச்சிப்பணிகள்

கோபிசெட்டிபாளையம்: ""கூகலூர் டவுன் பஞ்சாயத்தில் ஓராண்டில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்புலான வளர்ச்சி பணி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,'' என, தலைவர் நஞ்சப்ப கவுண்டர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மக்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீர் வசதி, பாதை, கான்கிரீட் தளம், தெருவிளக்கு பராமரிப்பு, சாக்கடை வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2008-09ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய தார் ரோடுகள், சமுதாயக் கூடம் கட்டுதல், சாக்கடை, கான்கிரீட் தளம் மற்றும் ரோடுகள், குளம் பராமரிப்பு, வணிக வளாகம், மயான மேம்பாடு ஆகிய பணிகள் செய்யப்பட்டுள்ளன. 2009-10ல் 12வது மான்யம் முதல் மற்றும் இரண்டாவது தவணை திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஐந்து லட்சத்து 75 ஆயிரம் செலவில் புதிய டிராக்டர் மற்றும் டிரைலர் வாங்கப்பட்டுள்ளது.

வார்டு எண் 7ல் விநாயகா கோவில் வீதி சந்து பகுதியில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி, ஆறாவது வார்டு பழனி வீதியில் 60 ஆயிரம் ரூபாய் செலவில் வடிகால் மற்றும் கல்வெட்டுகள், வார்டு 12ல் மாலா கோவில் வீதியில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை வசதி, பெருங்கம்மாள் வீதியில் 75 ஆயிரம் செலவில் வடிகால் கட்டும் பணியும் செய்யப்பட்டுள்ளன. 2009-10 நபார்டு திட்டத்தின் கீழ் 18 லட்ச ரூபாய் செலவில் தாழக்கொம்புதூர் முதல் சக்கராப்பாளையம் வாய்க்கால்புதூர் செல்லும் சாலை, 17 லட்ச ரூபாய் செலவில் சாணர்பாளையம் மெயின் ரோடு முதல் புதுக்கரைபுதூர் பொலவகாளிப்பாளையம் மெயின் சாலை, கூகலூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் செல்லும் சாலை மேம்பாடு செய்து புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது.நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் திட்டத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் கூகலூர் டவுன் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

தாழக்கொம்புதூர்- ஓடத்துறை மெயின் ரோட்டில் 23 லட்சத்து 20 ஆயிரம் செலவில் வடிகால் கட்டுதல், ஆறு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாரதி நகர் காலனியில் வடிகால் பணிகள், மூன்று லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பாரதி நகர் காலனி மெயின் மற்றும் குறுக்கு வீதிகளில் தார் சாலை அமைக்கப்பட உள்ளன. கவுண்டன்புதூர் காலனி நான்காவது வீதியில் 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வடிகால் வசதி, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 58 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 65 பேருக்கு புதிய வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.கூகலூர் டவுன் பஞ்சாயத்து செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்து வரும் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குநர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆறுமுகம் உடனிருந்தார்.

 

8 குளங்கள் சீரமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 30.07.2010

8 குளங்கள் சீரமைக்க மாநகராட்சி திட்டம்

கோவை, ஜூலை 30: கோவை யில் தனியார் பங்களிப்புடன் 8 குளங்களை சீரமை க்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது. இதற்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை நகர எல்லைக் குள் நரசாம்பதி, கிருஷ்ணாம் பதி, செல்வாம்பதி, குமார சாமி குளம், செல்வசிந்தா மணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் இருக்கிறது. இந்த குளங்களை, மாநகராட்சி நிர்வாகம் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் தூர் வாரி சீரமைக்க முடிவு எடுத்தது. 125 கோடி ரூபாய் செலவில், 8 குளங் களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குள வாய்க்கால் மட்டும் 62 கோடி ரூபாய் செலவில் அமைக் கப்படும். குளம் சீரமைப்பு தொடர் பாக 3 ஆண்டுகளுக்கு முன் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை யில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன், மாநகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னையில் டுபிசெல் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. இதில் தொழில் நுட்ப ரீதியில் திட்டத்தில் பல்வேறு மாறுதல் தெரிவிக்கப்பட்டது.

ஸீ 125 கோடி செலவாகும் கோவை நகர எல்லைக் குள் நரசாம்பதி, கிருஷ்ணாம் பதி, செல்வாம்பதி, குமார சாமி குளம், செல்வசிந்தா மணி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் இருக்கிறது. இந்த குளங்களை, மாநகராட்சி நிர்வாகம் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் தூர் வாரி சீரமைக்க முடிவு எடுத்தது. 125 கோடி ரூபாய் செலவில், 8 குளங் களை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குள வாய்க்கால் மட்டும் 62 கோடி ரூபாய் செலவில் அமைக் கப்படும். குளம் சீரமைப்பு தொடர் பாக 3 ஆண்டுகளுக்கு முன் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை யில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன், மாநகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னையில் டுபிசெல் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. இதில் தொழில் நுட்ப ரீதியில் திட்டத்தில் பல்வேறு மாறுதல் தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இதில், உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் படகு மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குளத்தின் ஒரு பகுதி யில் மிதக்கும் வகையில் படகு துறை செயல்படும். படகு சவாரிக்கு பைபர் படகு பயன்படுத்தவும், உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் உக்கடம் குளத்தை சுற்றி பார்க்கவும், வெளி நாட்டு பறவைகள் வந்து குவியும் இடங் களை பார்வையிடவும் வழிவகை செய்யப்படும். இதற்கென 1.36 கோடி ரூபாய் செலவிடப்படும். வாகனங்கள் வந்து செல்லும் வசதி, மக்கள் கூட்டம் போன்றவற்றின் அடிப்படையில் மேலும் சில குளங்களில் படகு துறை அமைக்கப்படும். குறிப்பாக முத்தண்ண குளம், சிங்காநல் லூர் குளம், வாலாங்குளத்தை படகு சவாரிக்கு பயன்படுத்தும் யோசனை இருக்கிறது.

90.10 லட்ச ரூபாய் செலவில் 8 குளங்களின் கரைகள் பலப்படுத்தப்படும். 4.86 கோடி ரூபாய் செலவில் குளங்களுக்கு பாதுகாப்பான சுற்று சுவர் அமைக்கப்படும். குளங்களில் யாரும் ஆக்கிரமிக்க முடியாது. அத்துமீறி நுழைய முடியாது. கழிவு, கட்டட இடிபாடு பொருட்களை கொட்ட முடியாது. 23.89 கோடி ரூபாய் செலவில் 8 குளங்கள் தூர் வாரப்படும். 60 ஆண்டுகளுக்கு முன் குளம் இருந்த ஆழ, அகலத்திற்கு ஏற்ப குளங்கள் உருவாக்கப்படும். குளங்களுக்கு செல்லும் மாசு கலந்த நீரை 5.96 கோடி ரூபாய் செலவில் சுத்திகரித்து மீண்டும் குளங்களில் தேக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை மா நகராட்சி பகுதியில் உள்ள சாக் கடை கழிவு மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள பேரூரா ட்சி, நகராட்சி பகுதியிலிருந்து வரும் கழிவு நீரும் குளங்களுக்கு செல்கிறது.

இந்த கழிவு நீரை சுத்திகரித்து குளங்களுக்கு விடப்படும். குளங்களில் நடைபாதை, அழகான பூங்கா, நீருற்று, மின் விளக்கு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது. குளங்களின் கரைகளை அகலமாக்குவதன் மூலம் காலை, மாலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியும். தனியார் பங்களிப்பில், குளங் களை சீரமைக்கப்படும். ஆண்டி ற்கு சுமார் 10 கோடி ரூபாய் பராமரிப்பு பணிக்கு செலவிடப்படும்.

 

குடந்தையில் ரூ. 11.40 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய முடிவு

Print PDF

தினமணி 30.07.2010

குடந்தையில் ரூ. 11.40 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய முடிவு

கும்பகோணம், ஜூலை 29: கும்பகோணம் நகரில் ரூ. 11.40 லட்சத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்ய நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கும்பகோணம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் சு.. தமிழழகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் என். தர்மபாலன், ஆணையர் பூங்கொடி அருமைக்கண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கும்பகோணம் 33-வது வார்டு திலகர் தெருவில் கழிப்பறையை ஒட்டி அமைந்துள்ள வடிகாலை உயர்த்தி அமைக்க ரூ. 2.50 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது, ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளுடன் கூடுதலாக ரூ. 2.95 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளை ரூ. 11.40 லட்சத்தில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 69 of 160