Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நேப்பியர் பாலம் விளக்கு அலங்காரம் துணை முதல்வர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 29.07.2010

நேப்பியர் பாலம் விளக்கு அலங்காரம் துணை முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில், பார்வையாளர்களை கவரும் வகையில், நேப்பியர் பாலத்திற்கு சிறப்பு அலங்கார மின் விளக்குகளால் ஒளியூட்டும் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சிங்காரச் சென்னையின் ஒரு திட்டமாக நேப்பியர் பாலம், 464 சிறப்பு வகை மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, தேவைக்கேற்ப ஒளியின் தன்மையை கட்டுப்படுத்தும் கருவிகளுடன் ஒளியூட்டப்பட்டுள்ளது.நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3 கி.மீ., நீளத்திற்கு, 26 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் அழகுபடுத்தப்பட்டது. இதை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன், நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் அசோக் வர்தன் ஷெட்டி, கமிஷனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

திருப்பரங்குன்றத்தில் ரூ.3.87 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 28.07.2010

திருப்பரங்குன்றத்தில் ரூ.3.87 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகள் துவக்கம்

நிதி ரூ. 3.87 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது.

மலைக்குப்பின்புறம் தென்பரங் குன்றம் கல்வெட்டு குகைகோயில் பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்குமுன், சுற்றுலாதுறை சார்பில் அறுபடை வீடுகள் மேம்பாட்டு திட்டத்தில், ரூ. 25 லட்சத்தில் சிறுவர், அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நுழைவுக்கட்டணமாக, நான்கு லட்சம் ரூபாய் கோயிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.

புதிய பூங்கா: அந்த பூங்காவை ஒட்டி புதிய பூங்கா அமைக்க 3.87 கோடி ரூபாய், சுற்றுலாதுறை ஒதுக்கியது. அங்கு 36.20 லட்சத்தில் குளம், சுற்றுச்சுவர், நடன நீருற்று. 47.29 லட்சத்தில் திறந்தவெளி கலை அரங்கம், செயற்கை புல் தரைகள், கார்பார்க்கிங் வசதி. 54.29 லட்சத்தில் ரோஸ் கார்டன். 44.61 லட்சத்தில் பேவர்பிளாக் தளம், மயில்கள் தண்ணீர் குடிக்க வசதியாக குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்க உள்ளன.

 

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவக்கம்: மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமணி 27.07.2010

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவக்கம்: மாநகராட்சி கமிஷனர்

மதுரை, ஜூலை 26: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது என, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

மாநகரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடத்தில் புதிய வாகன நிறுத்துமிடம், வரவேற்பு மையம், பொருள்கள் வைப்பறை போன்ற பணிகளுக்காக ரு.5.62 கோடியிலும், புதுமண்டபம் வியாபாரிகளுக்காக குன்னத்தூர் சத்திரத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரு.2.32 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வண்ண விளக்குகள் அமைப்பதற்கு ரூ.42 லட்சமும், மீனாட்சி பூங்கா ரு.35.24 லட்சத்திலும் வரலாற்று சிறப்பு மிக்க விளக்குத்தூணை அழகுபடுத்தும் பணிக்கு ரு.28.85 லட்சமும், மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக நீர் தேக்கி, புல்வெளி அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தலுக்கு ரூ.2.60 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நகரில் சுற்றுலா இடங்களை தெரிந்துகொள்ளும் வகையில் வண்ண விளக்குகள், விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு ரூ.19 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தற்போதுள்ள தெற்கு மண்டலத்தின் கோட்டைச் சுவர் புனரமைப்புப் பணிக்கு ரு.75 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு..அழகிரி தலைமையில் விரைவில் நடத்தப்படவுள்ளது எனக் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்

கோவை காந்திபார்க் ஏ.கே.எஸ் நகரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர்.

 


Page 70 of 160