Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நெல்லை மாவட்டத்தில் ரூ.100 கோடி திட்டப்பணிகள் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

Print PDF

தினகரன் 20.07.2010

நெல்லை மாவட்டத்தில் ரூ.100 கோடி திட்டப்பணிகள் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

நெல்லை, ஜூலை 20: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் ஆக.6, 7ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ரூ.100 கோடி மதிப்பிலான திட்டப் பணி களை துவக்கி வைக்கிறார் என்று நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்ப சாமி பாண்டியன் எம்எல்ஏ கூறினார்.

இதுகுறித்து அவர் நிரு பர்களிடம் கூறியதாவது: தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ஆக.5ம் தேதி மாலை நெல்லை வருகிறார். 6ம் தேதி காலை 9 மணிக்கு நெல்லை வண்ணார் பேட்டை புதிய மேம்பாலத் தை திறந்து வைக்கிறார். பின்னர் டக்கரம்மாள்புரத் தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் அம்பை. ஆறுமுகம் இல்லத்தை திறந்து வைக்கிறார். காலை 10 மணிக்கு வீரவநல்லூரில் தசை சிதைவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய அமைச்சர் நெப்போலியன் புதிதாக கட்டியுள்ள மருத் துவமனையை துணை முதல்வர் திறந்து வைக்கி றார்.

கல்லிடைக்குறிச்சி பேரூ ராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் துணை முதல்வர் காலை 10.30 மணிக்கு அம்பை. தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று 1500 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியும் வழங்குகிறார். கடையநல்லூரில் மாலை 4.30 மணிக்கு நடக்கும் விழாவில் ரூ.28 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணி களை துவக்கி வைக்கிறார். விழாவில் செங்கோட்டை யில் அமையஉள்ள வாஞ்சி நாதன் மணி மண்டபத்திற் கும் அடிக்கல் நாட்டுகிறார். அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.

7ம்தேதி காலை 9மணிக்கு சங்கரன்கோவில் யூனியன் வடக்கு அரியநாயகி புரத்தில் ரூ.2 கோடியே 4 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சமத் துவபுரத்தை திறந¢து வைக்கி றார். பின்னர் நடக்கும் விழாவில் சங்கரன் கோவில் தாலுகா அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அப்போது 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து அன்று மாலை 4 மணிக்கு நெல்லை அண்ணா பல்க லைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். நெல்லை மாவட்டத்திற்கு வரும் துணை முதல்வர் ஸ்டாலின் வருவது தொடர்பாக ஆலோ சனை நடத்துவதற் காக ஜூலை 24ம் தேதி காலை 10 மணிக்கு பாளை. பிபிஎல் திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நிர்வாகி கள், சிறப்பு அழைப்பாளர்கள் 700 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் துரை, நமச்சி வாயம், பாரா வெங்க டேசன், மாவட்ட துணைச் செயலா ளர் நவநீதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்திலும் குலவணிகர்புரம் ரயில்வே கேட் மேம்பாலத்திற்கு அடிக் கல் உட்பட ரூ.100 கோடிக்கும் மேல் திட்டப் பணிகளை துணை முதல்வர் துவக்கி வைக்கிறார்.

 

புதிய பூ மார்க்கெட் விரைவில் திறப்பு

Print PDF

தினகரன் 20.07.2010

புதிய பூ மார்க்கெட் விரைவில் திறப்பு

கோவை, ஜூலை 20: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூமார்க்கெட் வளாகம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. பூமார்க்கெட் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது.

கோவை மாநகராட்சி 48வது வார்டு மேட்டுப்பாளையம் ரோட்டில் பூமார்க்கெட் இயங்கி வருகிறது. பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதல் கடை கட்ட மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதனையடுத்து தற்போதுள்ள கடைகளுக்கு எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கடை கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நவீன பூமார்க்கெட் வளாகத்தில் பூக்களை பதப்படுத்தி வைப்பதற்காக குளிரூட்டப்பட்ட நவீன அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன பூமார்க்கெட் ஒரு வளாகத்தில் 18 கடை களும், மற்றொரு வளாகத்தில் 27 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 100 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன பூமார்க்கெட் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இங்குள்ள கடைகள் ஏலம் விடப்பட்டு விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

 

வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு

Print PDF

தினமணி 30.06.2010ச்

வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு

வேலூர், ஜூன் 29: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் மின்கோபுர விளக்கு நிறுவ நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் வி.சிவாஜிகணேசன் தலைமை வகித்தார். ஆணையர் எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளிக்கு 4 கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்ட ரூ.10 லட்சத்தில் பணி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பெரியபேட்டை கோட்டை, சென்னாம்பேட்டை சந்திப்பில் ரூ.11 லட்சத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. காந்திநகர் நகராட்சிப் பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கட்ட ரூ.10 லட்சம் ஒதுக்கீடு, நகரில் உள்ள நகராட்சிப் பள்ளிகள் 4-க்கு தலா ரூ.3 லட்சத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினர் ஆர்.விஜயகுமார் பேசும்போது, "சுப்பிரமணியம் கோயில் தெருவில் கடந்த 100 ஆண்டுகளாக வசிக்கும் பர்மா அகதிகள் 60 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை' என்றார்.

இதற்குப் பதிலளித்த தலைவர் சிவாஜிகணேசன், "இதுபற்றி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்

 


Page 73 of 160