Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ.25 லட்சம் செலவில் செம்மொழி பூங்கா திறப்பு

Print PDF

தினகரன் 29.06.2010

ரூ.25 லட்சம் செலவில் செம்மொழி பூங்கா திறப்பு

கோவை, ஜூன் 29: கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி குனியமுத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் சுமார் 1.75 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா ரூ.25 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது.

குழந்தைகள் விளையாட்டு கருவிகள், முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, தண்ணீர் ஊற்று என நவீன முறையில் இப்பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நகராட்சி தலைவர் துளிசிமணி செல்வராஜ் தலைமையில் நடந்தது.

13வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி முத்துசாமி இப்பூங்காவை திறந்துவைத்தார். 12வது வார்டு கவுன்சிலர் உமாமகேஸ்வரி முரளி மின்விளக்குகளை இயக்கிவைத்தார். விழாவில், கவுன்சிலர்கள் பாப்பாமணி, வெற்றிச்செல்வன், ராஜ்குமார், ராஜேந்திரன், குனியமுத்தூர் நகராட்சி தலைவர் கே.பி.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

நகராட்சி அலுவலகத்தில் ரூ.11லட்சத்தில் புதிய பூங்கா

Print PDF

தினகரன் 28.06.2010

நகராட்சி அலுவலகத்தில் ரூ.11லட்சத்தில் புதிய பூங்கா

திண்டுக்கல், ஜூன் 28: திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.11லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்றுடன் கூடிய புதிய பூங்கா அமைக்கப்படுகிறது. இதற் கான பூமிபூஜை விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் நடராஜன், நகராட்சி தலைமை பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் பழனியப்பன், உதவிபொறியாளர் அன்னலெட்சுமி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

 

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.74.50லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்

Print PDF

தினகரன் 22.06.2010

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.74.50லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள்

பழநி, ஜூன் 22: பழநி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் ரூ.74.50 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஸ்தபா தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது: பழநி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 2010&11ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொழுமம் சாலை முதல் பஜனை கோயில் வரை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வடிகாலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடக்க உள்ளது.

ரூ.5லட்சம் மதிப்பீட்டில் 5வது வார்டு பகுதியில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பாரதிநகர் பகுதியில் வணிக வளாகம் அமைக்கும் பணி, ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனி, ஆட்டடி சாலை, குயவர் தெரு மற்றும் 7வது வார்டு பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் லட்சுமி கோயில் பகுதி, 6வது வார்டு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, 2010&11 பிற்பட்ட பகுதி மானிய நிதியின் கீழ் சிமெண்ட் தளம், வடிகால் அமைத்தல், சிறுபாலம் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.74.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டெண்டர் விடப்பட உள்ள நிலையில் விரைவில் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 74 of 160