Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அடுத்த ஆண்டு விரிவாக்கம் சென்னை மாநகராட்சியுடன் இணையும் பகுதிகள் விவரம்

Print PDF

தினகரன் 22.06.2010

அடுத்த ஆண்டு விரிவாக்கம் சென்னை மாநகராட்சியுடன் இணையும் பகுதிகள் விவரம்

சென்னை, ஜூன் 22: அடுத்த ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.

இதில் கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம், புழுதிவாக்கம் நகராட்சிகளும், சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய பேரூராட்சிகளும், இடையன்சாவடி, சடையன்குப்பம், காட்டுப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகிய ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட உள்ள பகுதிகளை மாநகராட்சியின் பழைய வரைபடத்துடன் இணைத்து டிஜிட்டல் வரைபடத்தை தயாரிக்க திட்டக்கமிஷன் முடிவு செய்துள்ளது. சிறந்த மேலாண்மை, திட்டமிடுதல், நிர்வகித்தல், முடிவு எடுத்தல், சொத்து வரிகள் மூலம் வருவாயை பெருக்குதல் ஆகியவற்றுக்காக புதிதாக இணைக்கப்படவுள்ள பகுதிகளின் புள்ளிவிவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்படவுள்ள பகுதிகளில் குடிநீர், மின்சாரம், கழிவுநீர், போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் புள்ளிவிவரங்களை பல அடுக்குகளாக டிஜிட்டல் வரைபடத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்’’ என்றார். சம்பந்தப்பட்ட துறையினரின் உதவியுடன் புள்ளிவிவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

 

மதுக்கூர் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 22.06.2010

மதுக்கூர் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

பட்டுக்கோட்டை,ஜூன்22: பட்டுக்கோட்டை எம்.எல்.. ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுக்கூர் காவல்நிலையம் அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை புறவழிச்சாலை அமைக்க ரூ. 7 லட்சம் , மதுக்கூரில் உள்ள இஸ்லாமியர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு மண்டபம் அமைக்க ரூ. 3 லட்சம், மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நாற்காலிகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.3.50 லட்சம், இடையகாடு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.1.60 லட்சம் என மொத்தம் ரூ 15.10 லட்சம் நிதி மதுக்கூர் பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எம்எல்ஏ ரங்கராஜன் தெரிவித்துள் ளார்.

 

முசிறி பேரூராட்சியில் ரூ.64 லட்சத்தில் பணி

Print PDF

தினகரன் 22.06.2010

முசிறி பேரூராட்சியில் ரூ.64 லட்சத்தில் பணி

தா.பேட்டை, ஜூன் 22: முசிறி பேரூராட்சியில் ரூ.64 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முசிறி தேர்வுநிலை பேரூராட்சி கூட்ட மன்றத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அழகாப்பட்டி சாலை, கூட்டுறவு வங்கி முதல், பேரூராட்சி எல்லை வரை தார் சாலையாக மாற்றுதல், தெருவிளக்கு, ரூ.13.50 லட்சத்தில் அமைப்பது, வடுகப்பட்டியில் ரூ.10 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டுவது, புது கள்ளர் தெருவில் ரூ.5 லட்சத்தில் புதிய கழிவறை கட்டுதல், பார்வதிபுரம் 6வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5.50 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்தல்.

முசிறி உழவர் சந்தை கீழ்புறம் ரூ.10 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுதல், காவிரிக்கரையில் உள்ள பொது மயானத்தில் போர்வெல் மற்றும் தார்ச்சாலை ரூ.5 லட்சம் செலவில் அமைப்பது, குஞ்சாநாயக்கன்பாளையம் வாய்க்கால் மீது ரூ.7 லட்சத்தில் பாலம் கட்டுதல், காவிரி ஆற்றில் மெயின் குடிநீர் குழாயில் ரூ.1.80 லட்சத்தில் ஆங்கில் பொருத்துதல் மற்றும் குடிநீர் விஸ்தரிப்பு உள் ளிட்ட பணிகள் மொத்தம் ரூ.64.25 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி உறுப்பினர்கள், மன்ற அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 


Page 75 of 160