Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பாதாள சாக்கடைத் திட்டம்: தரமான குழாய்களைப் பயன்படுத்த வலியுறுத்தல்

Print PDF
தினமணி 22.06.2010

பாதாள சாக்கடைத் திட்டம்: தரமான குழாய்களைப் பயன்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 21: ஈரோட்டில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு தரமான, பெரிய அளவிலான குழாய்களைப் பயன்படுத்த வேண்டுமென ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநகராட்சி கவுன்சிலர் ராதாமணிபாரதி, சங்கத் தலைவர் டி..வெங்கடாசலம், துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியம், பொருளாளர் ஆர்.நல்லசாமி மற்றும் நிர்வாகிகள், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மாயகிருஷ்ணனை திங்கள்கிழமை சந்தித்தனர்.

உடைந்த குழாய்களைக் கொண்டு வந்திருந்த அவர்கள், வருவாய் அலுவலரிடம் அளித்த மனு விவரம்:

ஈரோடு சுத்தானந்தன் நகர், சங்கு நகர், பெரியசேமூர் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக தரமற்ற, சிறிய குழாய்கள் பதிக்கப்படுகின்றன. மண்ணால் செய்யப்பட்ட இக்குழாய்கள் விரைவில் உடைந்துவிடும் தன்மை கொண்டவை.

சூரம்பட்டி, சுத்தானந்தன் நகர் பகுதிகளில் சுமார் 8 அங்குலம் கொண்ட குழாய் பதித்தபோது, அதை முறையாகச் செய்யவில்லை. மேலும் தாமதமாக நடைபெற்ற குழாய் பணியால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். பெரியசேமூர் பகுதியில் குழிகள் தோண்ட வெடி வைக்கப்படுவதால் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.

எனவே பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்கு பெரிய அளவிலான, தரமான குழாய்களைப் பயன்படுத்த வேண்டும்.

இத்திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை மாநகராட்சி கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் முழு மானியத் தொகையில் மட்டுமே இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

ஈரோட்டின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, திட்டப்பணிகளை நிறைவேற்றுவதே சிறந்தது என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Last Updated on Tuesday, 22 June 2010 07:44
 

அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா

Print PDF

தினமணி 21.06.2010

அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா

திருப்பரங்குன்றம், ஜூன் 20: திருப்பரங்குன்றத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா, இலவசக் கழிப்பறை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சித் தலைவி இரா.காந்திமதி தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் எம்.அக்கினிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலர் பி.மூர்த்தி எம்எல்ஏ, மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட துணைச் செயலர் எம்.எல்.ராஜ் ஆகியோர் நகராட்சி பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையப் பயணிகள் நிழல் குடை, பாலாஜி நகரில் ரூ.15 லட்சத்தில் நவீன சிறுவர் பூங்கா, ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட அலுவலகக் கட்டடம், மூலக்கரை பகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி, எஸ்.ஆர்.வி நகர் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் மழைநீர் வடிகால், சிறுபாலம் ஆகியவையும், பொது நிதி ரூ.10 லட்சம் செலவில் கோயில் எதிரே கழிப்பறை, பஸ் நிலையத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் மூலம் சுமார் ரூ.11 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.

 

கூவம் சீரமைப்பு முதல்கட்டப் பணி முடிந்தது துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நிறுவன அதிகாரி சந்திப்பு 2ம் கட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்

Print PDF

தினகரன் 18.06.2010

கூவம் சீரமைப்பு முதல்கட்டப் பணி முடிந்தது துணை முதல்வர் மு..ஸ்டாலினுடன் சிங்கப்பூர் நிறுவன அதிகாரி சந்திப்பு 2ம் கட்டப் பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை, ஜூன் 18: கூவம் நதியை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலினை, சிங்கப்பூர் நிறுவன தலைமை அதிகாரி அல்போன்சஸ் சியா சந்தித்து பேசினார். அப்போது, இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

கூவம் நதியை சீரமைப்பதற்காக சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. சீரமைப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமை தாங்கினார். தலைமை செயலர் ஸ்ரீபதி, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவன தலைமை செயல் அதிகாரி அல்போன்சஸ் சியா, சிங்கப்பூர் வாரிய அதிகாரி ராஜிவ் தீட்சித், துணைத் தலைவர் வினோத் சிங், வெளியுறவு அதிகாரி அன்னாநங், தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக செயலர் நிரஞ்சன் மார்டி, வீட்டு வசதி துறை செயலர் அசோக் டோங்ரே, நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை செயலர் பணீந்திர ரெட்டி, குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாக இயக்குனர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், சிங்கப்பூர் நிறுவன தலைமை செயல் அதிகாரி அல்போன்சஸ் சியா கூறியதாவது: கூவம் நதியை சீரமைக்கும் பணிகள் பற்றி துணை முதல்வருடன் விவாதித்தோம். கூவம் நதியை சீரமைக்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து விட்டன. இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டப் பணிகள் முழுமையாக முடிந்து கூவம் நதி சீரமைக்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அளவை நிர்ணயிக்க முடியாது. சிங்கப்பூரில் சீரமைப்பு பணிகள் முடிய 10 ஆண்டுகள் ஆனது. கூவம் நதி நீண்ட தூரம் கொண்டது. எனவே, எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு அல்போன்சஸ் சியா கூறினார்.

 


Page 76 of 160