Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மத்திய அமைச்சர் தகவல் நகர புனரமைப்பு திட்டம் 28 நகரங்களுக்கு விரிவாக்கம்

Print PDF

தினகரன் 17.06.2010

மத்திய அமைச்சர் தகவல் நகர புனரமைப்பு திட்டம் 28 நகரங்களுக்கு விரிவாக்கம்

 

பெங்களூர், ஜூன் 17:ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேலும் 28 நகரங்களை இணைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று மத்திய நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கர்நாடகாவில் ஹூப்ளி உள்பட 28 நகரங்களை ஜவகர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி ஹூப்ளியில் 5 லட்சம் மக்கள் தொகை உள்ளது. தற்போது 65 நகரங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவருகிறது. நகர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை இந்தியாவில் 800 மில்லியனுக்கு மேல் செல்ல அடுத்த 25 ஆண்டுகளில் வாய்ப்புள்ளது.

தற்போது 300 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. பெங்களூர் ஐ.டி. துறையால் வளர்ச்சி பெற்றிருந்தாலும், இதே காரணத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகள், நவீன தொழில்நுட்பம்,கல்வி நிலையங்களில் இயற்கையான வளர்ச்சி ஏற்படும் போது போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பது சகஜம். எனவே பெங்களூர் போக்குவரத்து நெரிசலிலும் புகழ் பெற்றுவருகிறது. இதர நகரங்களை விட பெங்களூருக்கு மெட்ரோ போக்குவரத்து அவசரம். பெங்களூர் மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். இவ்வாறு மத்திய நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறினார்.

 

மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் புதிய திட்டம் 725 ச.கி.மீ. பரிந்துரையை 150 ஆக குறைத்து அமலாக்க பரிசீலனை

Print PDF

தினகரன் 15.06.2010

மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் புதிய திட்டம் 725 .கி.மீ. பரிந்துரையை 150 ஆக குறைத்து அமலாக்க பரிசீலனை

மதுரை, ஜூன் 15: மதுரை மாநகராட்சி எல்கை விரிவாக்கத்திற்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட 725 சதுர கி.மீ. பரப்பளவை 150 சதுர கி.மீ. ஆக குறைத்து விரிவாக்கம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்களை மதுரை மாநகராட்சி தயாரிக்கிறது.

தமிழகத்தில் சென் னைக்கு அடுத்து 2&வதாக 1971&ல் மதுரை, மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது இதன் எல்கை 22 சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. 1974&ல் சுற்றிலும் இருந்த 13 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 52 சதுர கி.மீ ஆக விரிவடைந்தது. அதன் பிறகு 36 ஆண்டுகளாகியும் எல்கை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் நகரம் நெருக்கடி அதிகரித்து ஒரு சதுர கி.மீ.க்கு 23 ஆயிரம் பேர் வாழ்வதாக மாநகராட்சி கணக்கிட்டுள்ளது.

குறைந்த பரப்பளவுள்ள பகுதியே மாநகராட்சியாக உள்ளது. இதற்காக நகரை சுற்றியுள்ள உள்ளூர் திட்டக்குழும பகுதி முழுவதும் அதாவது 725 சதுர கிமீ பரப்பளவுக்கு மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து, ஆணையிட அரசை கேட்டு மாநகராட்சி ஏற்க னவே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளது.

இதன்படி திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஆனையூர் ஆகிய 4 நகராட்சி, 3 பேரூராட்சி, 21 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பும், ஆனையூர் நகராட்சி இணைய ஆதரவும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளன. திருநகர், ஆர்வி.பட்டி, விளாங்குடி பேரூராட்சிகள் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளன.

ஊராட்சிகளில் மேல மடை, சிந்தாமணி, நிலையூர் பிட்&2, பெருங்குடி ஆகிய 4 ஊராட்சிகள் இணைய வேண்டும் என்றும், வண்டியூர், உத்தங்குடி, நாகனாகுளம், திருப்பாலை, கண்ணனேந்தல், விளாச்சேரி, புதுக்குளம் பிட்&1, புதுக்குளம் பிட்&2, சின்ன அனுப்பானடி, தியாகராஜர் காலனி, தோப்பூர், நிலையூர் பிட்&1, கப்பலூர், உச்சப்பட்டி ஆகிய 14 ஊராட்சிகள் இணைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளன. நாகமலை புதுக்கோட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரி உள்ளது.

இந்த நிலையில் மாநகராட்சி எல்கை விரிவாக்கத்தில் சிக்கலை தீர்க்க புதிய திட்டம் உருவாகிறது. ஆய்வு நடத்தி பரிந்துரைக்கப்பட்டுள்ள 725 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யாமல் 150 சதுர கி.மீ. ஆக குறைத்து அமலாக்க பரிசீலனை நடக்கிறது. அந்த அடிப்படையில் ஆவணங்களை மதுரை மாநகராட்சியில் உள்ளாட்சி துறை கேட்டுள்ளது. விரைவில் அனுப்ப மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஐகோர்ட் கிளை அமைந்துள்ள பகுதி மற்றும் நகரை ஒட்டிய பகுதிகள் மாநகராட்சியில் இணைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் மற்றும் தூரத்திலுள்ள பகுதிகள் மாநகராட்சியில் இணைய வாய்ப்பில்லை

 

வந்தவாசி நகராட்சியில் வீணாகும் குப்பை அள்ளும் வண்டிகள்

Print PDF

தினகரன் 15.06.2010

வந்தவாசி நகராட்சியில் வீணாகும் குப்பை அள்ளும் வண்டிகள்

வந்தவாசி, ஜூன்15: வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இந்த 24 வார்டுகளில் 250க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. நகராட்சியில் 100க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் 35 துப்புரவு பணியாளார்களே மட்டும் உள்ளனர். இதனால் 8 வார்டுகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளனார். மீதம் உள்ள வா£¢டுகளுக்கு துப்புரவு பணியை நகராட்சி பணியாளா¢கள் மேற்கொண்டுள்ளனார்

வா£¢டுக்கு 2 பேரை நியமித்து தினந்தோறும் தெருக்களில் சேரும் குப்பைகளை மூன்று சக்கர தள்ளுவண்டிகளில் பிளாஸ்டிக் டப்பா மூலம் சேகரித்து குப்பை சேமிப்பு பகுதியில் கொட்ட வேண்டும்.

அங்கிருந்து லா£¤ மூலம் குப்பைகளை அகற்ற திட்டமிட்டு அதற்காக கடந்த 4 மாதத்திற்கு முன்னர்ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான தொகையில் 13 மூன்று சக்கர வண்டி மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்கள் வாங்கப்பட்டது. இவை பயன் படுத்தப் படாமல் கடந்த நான்கு மாதங்களாக அச்சரப்பாக்கம் சாலையில் உள்ள மேநீர் தேக்கத்தொட்டி வளாகத்தில் வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

நகர மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் பயனற்று போவதற்கு முன்பு குப்பைகளை அகற்ற பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 


Page 78 of 160