Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

52 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னையில் புதிய நகரம்

Print PDF

தினகரன் 10.06.2010

52 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னையில் புதிய நகரம்

வேலூர், ஜூன் 10: ‘சென்னையில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் நவீன புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்என்று வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கம் மூலம் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்த கடன்களை வசூல் செய்வதற்கான ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தொடர்ந்து மத்திய அரசின் புதிய திட்டமான பொருளாதாரத்தி பிரதாப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கடனில் ரூ.1600 கோடி வரை வசூலாகாமல் உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 82 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 18 ஆயிரத்து 344 பேர் கடன் பெற்றுள்ளனர். இதில் ரூ.138.8 கோடி வசூலாகாமல் உள்ளது. இந்த கடன்கள் அனைத்தும் இம்மாதத்துக்குள் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் வீடு கட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கிராம பகுதிகளில் உள்ள குடிசை பகுதிகளில் வீடு கட்ட ரூ.1.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் அரசு ரூ.30 ஆயிரம் வரை மானியமாக வழங்குகிறது. மீதியுள்ள வங்கிக்கடனுக்கு பெறப்படும் வட்டியிலும் 5 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தில் வீடுகள் கட்ட இதுவரையிலும் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதியுள்ளவை பரிசீலனையில் உள்ளது.

கூட்டுறவு வீட்டுவசதி வாரியம் மூலம் தாராபடவேடு, காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை போன்ற இடங்களில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது. சென்னையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் விரைவில் தொடங்கப்படும்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் வாரியத்துக்கு சொந்தமான இடம், தனியார் இடம் என 52 ஏக்கர் பரப்பளவில் புதிய நவீன நகரம் அமைக்கப்பட உள்ளது. அனைத்து வசதிகளுடன் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைய உள்ள இந்த புதிய நகரத்தில் தனியார் இடம் தவிர மீதியுள்ள இடத்தில் மட்டும் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது.

சென்னையின் மெட்ரோபாலிடன் ஏரியாவாக அந்த பகுதி மாற்றப்படும்ல் நலிந்த பிரிவினருக்கு வீடுகள் கட்ட வங்கிகள் கடன் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய சங்கங்களின் பதிவாளரும், வீட்டு வசதிவாரிய நிர்வாக இயக்குனருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு பேசினார். இதில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் தனி அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தர்மேந்திர. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

 

 

சென்னையில் ரூ.10 கோடியில் புதிய மாதிரி நகரம்

Print PDF

தினமணி 10.06.2010

சென்னையில் ரூ.10 கோடியில் புதிய மாதிரி நகரம்

வேலூர், ஜூன் 9: சென்னையில் ரூ.10 கோடியில் புதிய மாதிரி நகரம் அமைக்கப்படும் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர் தர்மேந்திரபிரதாப் யாதவ் தெரிவித்தார்.

இது குறித்து வேலூரில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானியத்துடன் கூடிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 சதவீதம் வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவு (எல்ஐஜி) வீடு கட்ட ரூ.1.60 லட்சம் வரை 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர், காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் வீடுகள் கட்டும் பணி அடுத்த 3 மாதங்களில் தொடங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1961-ல் தொடக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது 25 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கோவையில் 6 இடங்களில் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு வணிக வளாகமும் கட்டப்படும்.

சென்னையில் உள்ள பழைய அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதியதாக அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்டப்படவுள்ளன.

பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.10 கோடியில் 51 ஏக்கர் பரப்பில் புதிய மாதிரி நகரமாக குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன என்றார் தர்மேந்திரபிரதாப்.

 

2008ல் உருவாக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் புதிய பகுதிகள் சேர்ப்பு

Print PDF

தினகரன் 09.06.2010

2008ல் உருவாக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் புதிய பகுதிகள் சேர்ப்பு

ஈரோடு, ஜூன் 9: கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஈரோடு நகரா ட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே நகராட்சியில் இருந்த 45 வார்டுகள் அப்படியே மாநகராட்சி வார்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நகரத்தை ஒட்டியுள்ள சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், பெரியசேமூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிகள், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், முத்தம்பாளையம், வில்லரசம்பட்டி, கங்காபுரம் ஆகிய 3 ஊராட்சிகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வார்டிலும் 10 ஆயிரம் மக்கள்தொகை இருக்கும் வகையில் வார்டுகள் பிரிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இதன்படி, ஈரோடு மாநகராட்சி வார்டுகளை பிரிப்பதற்கான ஆய்வு நடந்தது. மாநகராட்சியை 4 மண்டலங்களாக பிரித்து, அதில் 60 வார்டுகள் ஏற்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ள 60 வார்டுகளிலும் இடம்பெறும் பகுதிகளை, மாநகராட்சி நிர்வாகம் பட்டியலாக தயாரித்துள்ளது. இது அரசு நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு அரசு ஒப்புதல் வழங்கி, அரசாணை வெளியிடப்படும். அதன்பின்னர், புதிய வார்டுகள் செயல்படத் தொடங்கும்.

 


Page 81 of 160