Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

4 மண்டலங்களுடன் மாநகராட்சி 60 வார்டுகளாக பிரிப்பு

Print PDF

தினகரன் 09.06.2010

4 மண்டலங்களுடன் மாநகராட்சி 60 வார்டுகளாக பிரிப்பு

ஈரோடு, ஜூன் 9: ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளாக பிரிக்கப்படுகிறது. வார்டுகளில் இடம்பெறும் பகுதிகள் குறித்த பட்டியல், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நகராட்சியாக இருந்த ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட் டது. ஏற்கனவே நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகள் மட்டுமே மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. அருகாமையில் உள்ள சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், பெரியசேமூர் மூன் றாம் நிலை நகராட்சிகள், பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், முத்தம்பாளையம், வில்லரசம்பட்டி, கங்காபுரம் ஆகிய 3 ஊராட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வார்டிலும் 10 ஆயிரம் மக்கள்தொகை இருக்கும் வகை யில் வார்டுகளாக பிரிக்கும் பணி துவங்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாநகராட்சியில் தனித்தனியே வார்டுகளாக பிரிப்பதற்கென ஆய்வு நடந் தது. இதன்படி ஈரோடு மாநகராட்சியை 4 மண்டலங்க ளாக பிரித்து அதில் 60 வார்டு கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக பிரிக்கப்பட்டுள்ள புதிய மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதி களை, மாநகராட்சி நிர்வாகம் பட்டியலாக தயாரித்துள்ளது.

இதன் விவரம்:

முதலாம் மண்டலம்:

மாநகராட்சி 1வது வார்டில் தற் போதைய பி.பெ.அக்ரஹாரம் வார்டு எண் 8,9,11,12,13 மற்றும் 14.

2வது வார்டு:

பி.பெ.அக்ரஹாரம் பேரூராட்சி வார்டு எண் 1,2,15,16,17,18.

3வது வார்டு:

பி.பெ.அக்ரஹாரம் பேரூராட்சி வார்டு எண் 3,4,5,6,7 மற்றும் வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 1வது வார்டு.

4வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 2,3.

5வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 4,5.

6வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 1, 2.

7வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 3, 4.

8வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 5, 7.

9வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 6, 8.

10வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி

15ம் பக்கம் பார்க்க

அரசு ஒப்புதலுக்கு பட்டியல் அனுப்பப்பட்டது

வார்டு எண் 9, 10.

11வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 11, 17.

12வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 16, 18.

13வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 19, 20.

14வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 21, 32.

15வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 29, 30, 31

இரண்டாம் மண்டலம்:

16வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 33, 34, 35.

17வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 36, 43, 44.

18வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 41, 42, 45.

19வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 37, 38.

20வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 26, 39, 40.

21வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 27, 28.

22வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 13, 24, 25.

23வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 14, 15, 23.

24வது வார்டு:

ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 12, 22.

25வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 6, 7, 10.

26வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 8, 9, 12.

27வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 11, 12, 14.

28வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 15, 17, 18.

29வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 16, 19.

30வது வார்டு:

வீரப்பன்சத்திரம் நகராட்சி வார்டு எண் 20, 21

மூன்றாம் மண்டலம்:

31வது வார்டு:

சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 18, 1.

32வது வார்டு:

சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 2, 3, 4.

33வது வார்டு:

சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 5, 6, 8, 9.

34வது வார்டு:

சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 7, 10, 11.

35வது வார்டு:

சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 12, 13, 14.

36வது வார்டு:

சூரம்பட்டி நகராட்சி வார்டு எண் 15, 16, 17.

37வது வார்டு:

காசிபாளை யம் நகராட்சி வார்டு எண் 1, 2, 3.

38வது வார்டு:

காசிபாளை யம் நகராட்சி வார்டு எண் 5, 6, 7.

39வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 8, 9, 10.

40வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 11, 12.

41வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 13, 14.

42வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 15, 16.

43வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 17, 18.

44வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 4, 20.

45வது வார்டு:

காசிபாளையம் நகராட்சி வார்டு எண் 19, 21, முத்தம்பாளையம் ஊராட்சி வார்டு எண் 1, 2.

நான்காம் மண்டலம்:

46வது வார்டு:

திண்டல் ஊராட்சி வார்டு எண்: 2, 3.

47வது வார்டு:

திண்டல் ஊரா ட்சி வார்டு எண்: 1, வில்லரசம்பட்டி ஊராட்சி வார்டு எண்: 2, 3.

48வது வார்டு:

பெரியசேமூர் நகராட்சி வார்டு எண் 13, 14, 15.

49வது வார்டு:

பெரியசேமூர் நகராட்சி வார்டு எண் 11, 12.

50வது வார்டு:

பெரியசேமூர் நகராட்சி வார்டு எண் 8, 9, 10.

51வது வார்டு:

பெரியசேமூர் நகராட்சி வார்டு எண் 5, 6, 7.

52வது வார்டு:

பெரியசேமூர் நகராட்சி வார்டு எண் 2, 3, 16.

53வது வார்டு:

பெரியசேமூர் நகராட்சி வார்டு எண் 17, 18, 1.

54வது வார்டு:

வில்லரசம்பட்டி ஊராட்சி வார்டு எண் 1, 2, 3.

55வது வார்டு:

கங்காபுரம் ஊராட்சி வார்டு எண் 1, 2, 3.

56வது வார்டு:

சூரியம்பாளையம் பேரூராட்சி வார்டு எண் 1, 2, 13.

57வது வார்டு:

சூரியம்பா ளையம் பேரூராட்சி வார்டு எண் 3, 4, 5.

58வது வார்டு:

சூரியம்பாளையம் பேரூராட்சி வார்டு எண் 7, 8, 9.

59வது வார்டு:

சூரியம்பாளையம் பேரூராட்சி வார்டு எண் 10, 11, 12.

60வது வார்டு:

சூரியம்பாளையம் பேரூராட்சி வார்டு எண் 6, 14, 15.

இது அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.

விரைவில் இதற்கு அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் கூறின.

 

முதுகுளத்து£ர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் திட்டப்பணிகள்

Print PDF

தினகரன் 09.06.2010

முதுகுளத்து£ர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் திட்டப்பணிகள்

கடலாடி, ஜூன் 9: முதுகுளத்து£ர் பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.50லட்சத்தில் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதுகுளத்து£ர் பேரூராட்சியில் 2010&2011ல் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், திடல் தெரு மற்றும் செல்வியம்மன் கோயில் தெருவில் 10லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியும், பேரூராட்சி அலுவலகம் மேல்தளம் கட்ட ரூ.10லட்சம், திடல் ஊரணியில் சுற்றுச்சுவர், படித்துறை கட்ட ரூ.5லட்சம், அம்பேத்கார் தெரு, வண்ணார்தெரு, காமராஜர் தெரு, நாராயண ஆசாரி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.9லட்சத்தில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ரூ.11லட்சத்தில், செல்வியம்மன் கோயில் தெரு வடிகால் அமைத்தல், உலகன்தோப்பு காலனியில் வடிகால் அமைத்தல், செக்கடி தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் ரூ.50லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ஷாஜகான் உடனிருந்தார்.

 

மாநகராட்சி வளர்ச்சி பணியை வேளாண் அமைச்சர் ஆய்வு

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி வளர்ச்சி பணியை வேளாண் அமைச்சர் ஆய்வு

சேலம், ஜூன் 9: சேலம் மாநகராட்சியின் வளர்ச்சி பணியை வேளாண் அமைச் சர் ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.4.2 கோடியில் திருமணிமுத்தாறு பணிகளும், ரூ.9.17 கோடியில் வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி திட்டப்பணிகளும், ரூ.1.56 கோடியில் ஆட்கொல்லி பாலம் பணியும், ரூ.3.85 கோடியில் ஆனந்தா இறக்க பாலம் பணியும், ரூ.3 கோடியில் அப்சரா பாலம் பணியும் நடந்து வருகிறது.

இந்த பணிகளை தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்து விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கலையரசி, மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஆணையாளர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் குழந்தைவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 


Page 82 of 160