Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அண்ணா மறு மலர்ச்சி திட்ட பணி: 7 டவுன் பஞ்., தேர்வு

Print PDF

தினமலர் 09.06.2010

அண்ணா மறு மலர்ச்சி திட்ட பணி: 7 டவுன் பஞ்., தேர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கு ஏழு டவுன் பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்தும் தேர்வு செய்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நெமிலி, காந்திநகர், நாட்டறாம்பள்ளி, ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, செங்கம், போளூர் ஆகிய ஏழு டவுன் பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்துக்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மண்டல துணை இயக்குனர் (டவுன் பஞ்., )அப்துல் கலில் கூறியதாவது: இந்தாண்டு சேர்க்கப்பட்ட ஒடுக்கத்தூர் டவுன் பஞ்சாயத்தில் 11 பணிகள் செய்ய 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், காந்தி நகரில் 7 பணிகளுக்கு 56 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும், பள்ளி கொண்டாவில் 13 பணிகளுக்கு 63 லட்ச ரூபாயும், நெமிலியில் 22 பணிகளுக்கு 61 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், நாட்டறாம்பள்ளியில் 11 பணிகளுக்கு 65 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், செங்கத்தில் 12 பணிகளுக்கு 65 லட்ச ரூபாயும், போளூரில் 14 பணிகளுக்கு 51 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது

 

மாவட்டத் திட்டப் பணிகள்: ப.சிதம்பரம் ஆய்வு

Print PDF

தினமணி 08.06.2010

மாவட்டத் திட்டப் பணிகள்: .சிதம்பரம் ஆய்வு

சிவகங்கை, ஜூன் 7: சிவகங்கை மாவட்ட திட்டப் பணிகள் தொடர்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இந்திரா காந்தி நினைவு குடியிருப் புத் திட்டம், பொன் விழா கிராம சுயவேலைவாய்ப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், விரைவுபடுத்தப்பட்ட ஊரக குடிநீர்த் திட்டம், முழு சுகாதார இயக்கம், தேசிய சமூக நலத்

திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப் பதி மேலாண்மைத் திட்டம், நில உடமை ஆவணங்கள் கணினிமயமாக்கல் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார் ப.சிதம்பரம்.

பிற்பகல் 2 மணிக்குத் துவங்கி மாலை 4 மணி வரை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எம்.எல்..க்கள் சுந்தரம், சுப. மதியரசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் சேங்கை மாறன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அமானுல்லா, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியக் குழுத் தலைவர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொணடனர்.

கூட்டத்தில், சிவகங்கை மற்றும் மானாமதுரை எம்.எல்..க்கள் கலந்து கொள்ளவில்லை. ஓரத்தநாட்டில் கட்சி தொடர்பான பணிக்குச் சென்றுவிட்டதால் கலந்து கொள்ளமுடியவில்லை என்றார் சிவகங்கை இந்திய கம்யூ. எம்.எல்.. எஸ்.குணசேகரன். அரசு நிகழ்ச்சிகளில் பொதுவாகக் கலந்து கொள்வது கிடையாது என்றார் மானாமதுரை அதிமுக எம்.எல்..

 

கொசுக்களை ஒழிக்க ரூ.3 கோடியில் புகை அடிக்கும் இயந்திரங்கள் மாநகராட்சி வாங்குகிறது

Print PDF

தினகரன் 07.06.2010

கொசுக்களை ஒழிக்க ரூ.3 கோடியில் புகை அடிக்கும் இயந்திரங்கள் மாநகராட்சி வாங்குகிறது

புதுடெல்லி, ஜூன் 7: காமன்வெல்த் போட்டிகளையொட்டி, கொசு ஒழிப்பு பணிக்காக ரூ.3 கோடி செலவில் கொசு மருந்து புகையடிக்கும் இயந்திரங்களை மாநகராட்சி வாங்குகிறது.

டெல்லியில் அக்டோபர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் அதிதீவிரமாக பரவும். இந்த ஆண்டு அக்டோபர் 3ம்தேதி முதல் 14ம்தேதி வரையில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருப்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சியின் ரோகிணி, நஜப்கர் ஆகிய இரு மண்டலங்களில் கொசு மருந்து புகையடிக்கும் இயந்திரத்துடன் கூடிய வாகனங்கள் ஒன்றுகூட இல்லை. மற்ற 10 மண்டலங்களில் தலா ஒரு வாகனம் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவும் காலத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா 2 கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் தேவைப்படுகிறது. ஆகவே, கொசு மருந்து அடிக்கும் இயந்திரத்துடன் கூடிய 14 வாகனங்களை புதிதாக வாங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரோகிணி, நஜப்கர் மண்டலங்களுக்கு தலா 2 வாகனங்கள் ஒதுக்கப்படும். எஞ்சிய 10 மண்டலங்களுக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்படும். 14 கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் ரூ.1.20 கோடி செலவில் வாங்கப்படுகின்றன. 2 வருட பாதுகாப்பு உத்தரவாதம், 3 வருட பராமரிப்பு ஆகிய ஒப்பந்தங்களுடன் இந்த வாகனங்கள் வாங்கப்படுகின்றன. இதுதவிர, கையால் கொசு மருந்து அடிக்கும் 247 இயந்திரங்கள் ரூ.1.78 கோடி செலவில் வாங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 83 of 160