Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

'வந்தவாசி பூமாது செட்டிக்குளம் ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்படும்'

Print PDF

தினமணி 02.06.2010

'வந்தவாசி பூமாது செட்டிக்குளம் ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்படும்'

வந்தவாசி, ஜூன் 1: வந்தவாசி பூமாது செட்டிக்குளம் ரூ.40 லட்சம் செலவில் அழகுப்படுத்தப்படும் என்று வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

வந்தவாசி காமராஜர் நகர் அருகே ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய பஸ் நிலைய கட்டடப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியது:

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி சார்பில் செய்யாற்றில் ரூ.10 லட்சம் செலவில் புதிய கிணறு தோண்டப்பட்டு வருகிறது.

வந்தவாசியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆடு அறுக்கும் தொட்டியில் ஆடுகளை அறுக்காமல் சாலையோர கடைகளில் ஆடு அறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வந்தவாசி புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு சாலை அமைக்க தனியாரிடம் நிலம் வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மண்டல பொறியாளர் தனபால், நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன், நகராட்சி ஆணையர் எஸ்.சசிகலா, பொறியாளர் மகாதேவன், இளநிலை பொறியாளர் அமுதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

உடுமலை நகராட்சியின் மாயமான நிலங்களின் மதிப்பு ரூ.100 கோடி

Print PDF

தினமலர் 02.06.2010

உடுமலை நகராட்சியின் மாயமான நிலங்களின் மதிப்பு ரூ.100 கோடி

உடுமலை : உடுமலை நகராட்சிக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் மாயமாகியுள்ளது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவற்றை மீட்க அதிகாரிகள் களம் இறங்கியுள்ளர்.

உடுமலை நகராட்சி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட "லே-அவுட்' கள் உள்ளன. 1992ம் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டவையில், பொது உபயோகம், ரோடு, மைதானம், பூங்கா, திறவிடம் ஆகிய பயன்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளதோடு, மற்ற நகராட்சிக்கு சொந்தமான இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பூங்கா , விளையாடும் இடம் மற்றும் திறவிடம் பாதுகாத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1959ன் படி, இது குறித்து முறையாக ஆய்வு செய்து, மீட்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், நகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆறு மாதமாக "மாயமான' நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், 61 மனை பிரிவுகளில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டவையில், பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அண்ணா பூங்கா உட்பட ஒரு சில மட்டும் நகராட்சி வசம் உள்ளது. 30க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகளில் விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும், பத்துக்கும் மேற்பட்ட திறவிடங்களுக்கு ஒதுக்கபட்ட இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளன.40க்கும் மேற்பட்ட லே - அவுட்களில் பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளாகவும், கல்யாண மண்டபங்களாவும் மாறியுள்ளன.நகராட்சியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்கீம் ரோடு, இணைப்பு சாலைகள், பொது வழித்தடங்கள் என நூற்றுக்கணக்கான வழிகள் அடைக்கப்பட்டு, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகராட்சி நூலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் "சூதாட்ட கிளப்' ஆக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு நகராட்சிக்கு சொந்தமான, 75 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகளாவும், வணிக வளாகங்களாகவும், தொழிற்சாலைகளாவும் மாறியுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் ஒரு சென்ட் நிலம் மூன்று லட்சம் முதல் 15 லட்சம் வரை விற்று வருகிறது. மேலும், பல மனைப்பிரிவுகளின் ஆவணங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முழுமையாக ஆய்வு செய்தால், மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் மாயமானது தெரியவரும்.பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட இது மாதிரியான இடங்களை வாங்கக்கூடாது என தெரிந்தும், தெரியாமல் பலரும் வாங்கியுள்ளனர். அதில், நகராட்சியில் பணியாற்றிய பல அதிகாரிகளே இதுமாதிரியான இடங்களை ஆக்கிரமித்துள்ளதும், நகராட்சி அதிகாரிகளை ஒரு சிலர் பொது உபயோகத்திற்கான இடங்களை விற்பனை செய்வதற்கு துணை போயுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.நேற்று முன்தினம் நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் வைக்கப்பட்டது.

இது குறித்து நகரமைப்பு அலுவலர் இளங்கோவன் கூறியதாவது: நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், ஒப்படை செய்யப்படாத இடங்கள், பொது வழித்தடங்கள், சாலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டதில், நகரின் மத்தியில் அமைந்துள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 75 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

ரூ.3.1 கோடியில் தெப்பக்குளத்தை அழகுபடுத்த மத்திய அரசு அனுமதி

Print PDF

தினமலர் 02.06.2010

ரூ.3.1 கோடியில் தெப்பக்குளத்தை அழகுபடுத்த மத்திய அரசு அனுமதி

மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக் குளத்தைச் சுற்றி, 5 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த முதலில் மாநகராட்சி திட்டமிடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் தெப்பக்குளத்தைச் சுற்றி புற்கள், செடிகள், நடைபாதை, சுற்றுலா பயணிகள் அமர பெஞ்ச், அலங்கார விளக்குகள், சிமென்ட் பிளாக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு மட்டும் 3.1 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, வைகை ஆற்றுப் படுகையில் 20 ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு ஆகும் செலவை மத்திய அரசின் சுற்றலா வளர்ச்சி நிதியில் கீழ் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆய்வுகக் கூட்டத்தில் முதல்கட்டமாக, 3.1 கோடி ரூபாய் செலவில் செய்யப்படும் அழகுபடுத்தும் பணிக்கான முழு நிதியையும் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆழ்துளை கிணறுகளுக்கான ஒப்புதல் பின்னர் கிடைக்கும் என கருதப்படுகிறது.

 


Page 86 of 160