Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

செம்பாக்கம் பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, பூங்கா அமைச்சர் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்   28.06.2010

செம்பாக்கம் பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, பூங்கா அமைச்சர் திறந்து வைத்தார்

தாம்பரம், மே 28: செம்பாக்கம் பேரூராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் ராதே ஷியாம் அவென்யூவில் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா, சாந்தி நகரில் ரூ.2 லட்சத்த 60,000 செலவில் சிறுவர் பூங்கா, திருமலை நகர், கணேஷ் நகர், 2வது வார்டு அம்பேத்கர் தெரு ஆகிய இடங்களில் ரூ.7 லட்சத்து 30,000 செலவில் 3 ரேஷன் கடைகள், வி.ஜி.பி. சரவணா நகரில் ரூ.7 லட்சத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.

செம்பாக்கம் பேரூராட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பரசன், 525 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி, புதிய பூங்கா மற்றும் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

தாம்பரம் எம்எல்ஏ ராஜா, பரங்கிமலை ஒன்றிய தலைவர் ஏழுமலை, ஆர்.டி.. சவுரிராஜன், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அம்பத்தூர் பகுதியில் மக்கள் நல பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்   28.06.2010

அம்பத்தூர் பகுதியில் மக்கள் நல பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

ஆவடி, மே 28: அம்பத்தூர் பகுதியில் பூங்கா, சிறுபாலம், மழைநீர் வடிகால்வாய், பள்ளிக்கூடம் சீரமைப்பு உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் கே.என்.சேகர் தெரிவித்தார்.

அம்பத்தூர் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கே.என்.சேகர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கே.நீலகண்டன், ஆணையர் ஆசிஷ்குமார், பொறியாளர் ரவி, நகரமைப்பு அதிகாரி பாஸ்கரன், சுகாதார அதிகாரி மணிமாறன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பாலகுமரன் (திமுக), கோவிந்தராஜ் (பாமக), மதி (திமுக),மைக்கேல்ராஜ் (அதிமுக), வித்யா லட்சுமி (அதிமுக), தேவேந்திரகுமார் (அதிமுக) ஆகியோர் தெருவிளக்கு, சாலை பிரச்னைகள் குறித்து விவாதம் செய்தனர்.

இதற்கு பதிலளித்து தலைவர் கே.என்.சேகர் பேசியதாவது: அம்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பூங்காக்களை மேம்படுத்த ரூ.1.21 கோடி, தெரு விளக்குகளை பராமரிக்க ரூ.40 லட்சம், சிறு பாலங்கள் அமைக்க ரூ.1 கோடி மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.70 லட்சம், வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய சாலைகள் அமைக்க ரூ.14 லட்சம், பள்ளிக்கூடங்களை சீரமைக்க ரூ.15 லட்சம், கொரட்டூர் பஸ் நிலையத்தில் நிழற்குடை, கழிப்பிடம் கட்ட ரூ.20 லட்சம் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு சேகர் தெரிவித்தார். நகராட்சி தலைவர் தகவல்

 

போக்குவரத்தில் மாறுதல் ஓசூர் சாலையில் சுரங்க நடைபாதை பணி

Print PDF

தினகரன்    25.05.2010

போக்குவரத்தில் மாறுதல் ஓசூர் சாலையில் சுரங்க நடைபாதை பணி

பெங்களூர், மே 25:சுரங்க நடைபாதை அமைக்கும் பணி நடப்பதால், ஒசூர் ரோட்டில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர்&ஒசூர் ரோட்டில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை பெங்களூர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி விரைவில் துவங்க உள்ளது. இப்பணி இன்னும் மூன்று மாதங்களில் நிறைவடையும் என தெரிகிறது.

இதனை முன்னிட்டு ஒசூர் ரோட்டில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மடிவாளா சுங்கச்சாவடியில் இருந்து நேராக மேம்பாலம் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக மடிவாளா சுங்கச்சாவடி சர்க்கிளில் இருந்து செயின்ட் ஜான்ஸ்ரோடு மற்றும் மடிவாளா மார்க்கெட் பக்கம் திரும்பி, மேம்பாலத்தை அடையலாம். எலெக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, எச்.எஸ்.ஆர்.லேஅவுட் மற்றும் பி.டி.எம்.லேஅவுட்டில் இருந்து மெஜஸ்டிக், ஆடுகோடி மற்றும் எம்.ஜி.ரோடு செல்லும் வாகனங்கள் இடதுபக்கம் திரும்பி டோட்டல் மால் வழியாக செல்லலாம்.

கிருபாநிதி ஜங்ஷனில் இடதுபக்கம் திரும்பி, கோரமங்களா வாட்டார் டேங்க் ஜங்ஷன் மற்றும் சர்ஜாபூர் ஜங்ஷன் வழியாக செல்லலாம். சில்க் போர்ட் வழியாக கோரமங்களா பிடிஏ காம்ப்ளெக்ஸ், கோரமங்களா 80 அடி சாலை மற்றும் நீலசந்திரா செல்லும் வாகனங்கள், கோரமங்களா வாட்டர்டேங்க் ஜங்ஷனில் இடதுபக்கம் திரும்ப வேண்டும். சித்தார்தா காலனி, மாருதி நகர் செல்லும் வாகனங்கள், கோரமங்களா வாட்டர்டேங்க் ஜங்ஷனில் இடதுபக்கம் திரும்பி, கேந்திரியசதன் ரோடு மற்றும் மடிவாளா மெயின்ரோடு செல்லலாம். இந்திராநகர், தொம்ளூர், ஈஜிபுரா வழியாக மாருதிநகர், தாவரெகெரே மற்றும் மடிவாளா சுங்கச்சாவடி செல்லும் வாகனங்கள், கோரமங்களா வாட்டர்டேங்க் ஜங்ஷனில் இருந்து நேராக சென்று, கேந்தியசதனுக்கு பிறகு இடதுபக்கம் திரும்ப வேண்டுமென போக்குவரத்து போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


Page 88 of 160