Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

விரிவாகும் கூடலூர் நீரோடை ரூ.2 லட்சத்தில் துவங்கியது பணி

Print PDF

தினமலர்    17.05.2010

விரிவாகும் கூடலூர் நீரோடை ரூ.2 லட்சத்தில் துவங்கியது பணி

கூடலூர் : கூடலூர் நகரை ஒட்டியுள்ள நீரோடையை தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடலூர், பந்தலூர் பகுதிகளிலுள்ள பெரும்பாலான ஆறு, நீரோடைகள் போதிய பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பு உள்ளதாலும் மழை காலத்தின் போது, நகருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவது வழக்கமாக உள்ளது. நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வார வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தியும், சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை.

கடந்த ஜூலை மாதம் பெய்த மழையில், கூடலூர் தேவர்சோலை சாலை முதல் மைல், இரண்டாவது மைல், பாடந்துரை, தொரப்பள்ளி, புத்தூர்வயல், அத்திப்பாலி, புளியாம்பாறை, பந்தலூர் சேரம்பாடி, எருமாடு உட்பட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நீராதாரங்களில் தூர் வார வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

தற்போது, மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, பல பகுதிகளில் தூர் வாரப்பட்டு வருகின்றன. கூடலூர் நகரை ஒட்டியுள்ள நீரோடைகளை தூர் வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கூடலூர் நகராட்சியின் பொது நிதியிலிருந்து 2 லட்சம் ஒதுக்கி, துப்புகுட்டிபேட்டை கல்குவாரி முதல் காசிம்வயல் வரை உள்ள நீரோடை தூர் வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது.

கவுன்சிலர் உஸ்மான் கூறுகையில், ''மழையின் போது இப்பகுதி பாதிக்காமல் இருக்க, நீரோடையில் குறிப்பிட்ட பகுதி, நகராட்சி மூலம் தூர் வாரப்படுகிறது. கோக்கால் பகுதியில் உற்பத்தியாகி நகர் வழியாக செல்லும் நீரோடையை சர்வே செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி முழுமையாக சீரமைத்தால் தான், வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்,'' என்றார்.

 

பெங்களூரில் நடப்பாண்டு 340 பூங்காக்கள்: பி.எஸ். எடியூரப்பா

Print PDF

தினமணி          14.05.2010

பெங்களூரில் நடப்பாண்டு 340 பூங்காக்கள்: பி.எஸ். எடியூரப்பா

பெங்களூர், மே 13: பெங்களூரில் நடப்பு நிதியாண்டில் சுமார் 340 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

பெருநகர பெங்களூர் மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 198 வார்டுகளின் கவுன்சிலர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை துவங்கியது.

இந்த முகாமை முதல்வர் எடியூரப்பா குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாநகராட்சி மேயர் எஸ்.கே. நடராஜ், துணை மேயர் தயானந்த், அமைச்சர்கள் ராமச்சந்திர கெüடா, அசோக், மும்தாஜ் அலிகான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்வர் பேசியது: உங்களுக்கான (கவுன்சிலர்கள்) பயிற்சி முகாமை துவக்கி வைக்கும்போது எனக்கு பழைய காலம் நினைவுக்கு வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நான் ஷிமோகா மாவட்டத்தில் ஷிகாரிபுரம் நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தேன். எனது கடுமையான உழைப்பால் நகர சபைத் தலைவரானேன்.

அப்போது தினமும் அதிகாலை எழுந்தவுடன் 2 மணி நேரம் நகரைச் சுற்றி வருவேன். அப்போது, அனைத்து தரப்பு மக்களின் குறைகளையும் நேரில் கேட்டு அறிந்துகொள்வேன். குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். அதேபோல நீங்களும் பெங்களூரில் உங்களது வார்டுகளில் காலை நேரம் மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களது பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்கள்தான் நமக்கு முதலாளிகள். அவர்களுக்குக் கஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. உண்மையான கட்சித் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் என்றைக்கும் மறக்க வேண்டாம். அவர்களுடன் எப்போதும் தொடர்போடு இருங்கள்.

நகரில் இதுவரை 654 பூங்காக்கள்: கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு பெங்களூரில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 654 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மேலும் 340 பூங்காக்கள் அமைக்கப்படும்.

÷நகரில் இன்னும் 3 ஆண்டுகளில் சுமார் ரூ.22 ஆயிரம் கோடி செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மெட்ரோ ரயில், மோனோ ரயில், புறநகர் ரயில், அதிவேக ரயில், சிக்னல் இல்லா சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவது போன்ற முக்கிய திட்டங்கள் அதில் அடங்கும். இந்த திட்டங்களை செயல்படுத்த அனைத்து கவுன்சிலர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டத்தில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். அடுத்த கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களது வார்டு பிரச்னைகளை அறிந்துகொள்கிறேன் என்றார் அவர்.

 

திண்டிவனம் நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 12.05.2010

திண்டிவனம் நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

திண்டிவனம், மே 11: திண்டிவனம் நகராட்சியின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர மன்ற தலைவர் பூபாலன் தலைமையில் (படம்) நடைபெற்றது.

÷கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் முருகேசன், சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவரச கூட்டத்தில் மொத்தம் உள்ள 33 நகர மன்ற உறுப்பினர்களில் 17 பேர் கலந்து கொண்டனர்.

÷கூட்டத்தில் 6 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் சார்பில் நகர மன்ற தலைவரிடம் திண்டிவனம் நகரை மாவட்ட தலைநகரமாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்த மன்ற கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுமென நகர மன்ற தலைவர் பூபாலன் பதிலளித்தார். நகரில் உள்ள 33 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக மொத்தம் ரூ.5,13,829 நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 92 of 160