Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சத்தில் வளர்ச்சிப்பணி

Print PDF

தினமலர்     12.05.2010

திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சத்தில் வளர்ச்சிப்பணி

திருவிடைமருதூர்: திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.அதன் விவரம் வருமாறு:

12வது நிதிக்குழு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தவணை நிதி ரூ.7 லட்சத்து 14 ஆயிரம், பேரூராட்சி பொது நிதி ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் மொத்தம் ரூ.10 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் உரக்கிடங்கிற்கு சாலை அமைத்தல், குப்பைகளை தரம் பிரிக்கும் தளம் அமைத்தல் மற்றும் மழைநீர் வடிகால், தடுப்புச்சுவர், சிமெண்ட் சாலை ஆகிய பணிகள் இயக்க மற்றும் பராமரிப்பு திட்ட நிதி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மேகலா நகரில் பைப் லைன் விஸ்தரிப்பு. நபார்டு திட்ட நிதி ரூ.38 லட்சம் மதிப்பில் வி.எச்.பி. நகர் தார்சாலை, சன்னாபுரம் முஸ்லிம் தெரு முதல் சன்னாபுரம் வெள்ளாளர் தெரு வரை மற்றும் சன்னாபுரம் பணிக்கர் தெரு முதல் காரைக்கால் சாலை வரை தார் சாலை, அடிப்படை கட்டமைப்பு நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நிதி ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் உப்பிலியப்பன்கோவில் வீதிசிமெண்ட் சாலை அமைத்தல், மொத்தம் ரூ.66 லட்சம் மதிப்பில் 2009-10ம் ஆண்டிற்கு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை பேரூராட்சித் தலைவர் கணபதி, செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.இதேபோல் திருபுவனம் பேரூராட்சியில் 2009-10ம் ஆண்டிற்கு நபார்டு திட்ட நிதி ரூ.42 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் காங்கேயன்பேட்டை முதல் மெயின் சாலை வரை மற்றும் ஆற்றங்கரை வழிநடப்பு ஆகியவை தார்சாலையாக மாற்றுதல்.12வது நிதிக்குழு நிதி ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் உரக்கிடங்கு செட் அமைத்தல், தார்சாலை மற்றும் வடிகால் வசதி செய்தல், இயக்க மற்றும் பராமரிப்பு திட்ட நிதி ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் குடிநீர் மோட்டார் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகளின் மொத்த மதிப்பு ரூ.51 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். இத்தகவலை பேரூராட்சித் தலைவர் மணி, செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

 

தினமலர் செய்தி எதிரொலி பணிகளை முடிக்க கமிஷனர் உத்தரவு

Print PDF

தினமலர்      12.05.2010

தினமலர் செய்தி எதிரொலி பணிகளை முடிக்க கமிஷனர் உத்தரவு

பண்ருட்டி : பண்ருட்டியில் சுகாதார,வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த நகராட்சி கமிஷனர் உத்திரவிட் டுள்ளார்.பண்ருட்டி நகராட்சி செயல்பாடு குறித்து 10ம் தேதி தினமலரில் விரிவாக செய்தி வெளியிடப் பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி மேலாளர் ஜெயலட்சுமி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர் சுமதி செல்வி ஆகியோரிடம் பணிகள் விரைவுபடுத்த உத்திரவிட்டார். அப்போது சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் இல்லாத போது பணிகள் சிறப்பாக நடந்ததை சுட்டிக்காட்டி நகரத்தில் சுகாதாரப் பணிகளை அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இன்ஜினியர்களிடம் வளர்ச்சி பணிகளை துரிதப் படுத்துவது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

ஒட்டன்சத்திரத்தில் ரூ.34 லட்சத்தில் சோடியம் விளக்கு அமைப்பு

Print PDF

தினமலர் 06.05.2010

ஒட்டன்சத்திரத்தில் ரூ.34 லட்சத்தில் சோடியம் விளக்கு அமைப்பு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் 34 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சோடியம் விளக்குகளை கொறடா சக்கரபாணி இயக்கி வைத்தார்.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் இருந்து மார்க்கெட் பைபாஸ் ரோடு வரை இருபுறமும் எரியக்கூடிய சோடியம் விளக் குகள் ரோட்டின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் ரவுண்டானாவில் இருந்து மார்க்கெட் பைபாஸ் ரோடு வரை ரோட்டின் ஓரங்களில் சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரூராட்சி பொதுநிதியில் இருந்து 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள இவ்விளக்குகளை அரசு கொறடா சக்கரபாணி இயக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் வனிதா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயக்கொடி வரவேற்றார். தி.மு.., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், நகர செயலாளர் கதிர் வேல், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற் றனர். கவுன்சிலர் முருகேசன் நன்றி கூறினார்.

முன்னதாக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பிரிவுக்கு 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டது. தாசில்தார் பசீர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் ராமதிலகம், மாரியம்மாள்,தனிதாசில்தார் விசுவநாதன்உட்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 93 of 160