Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் திருச்சியை சேர்க்க வேண்டும்; டெல்லி மேல்-சபையில் பாலகங்கா எம்.பி. பேச்சு

Print PDF

மாலை மலர் 04.05.2010

நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் திருச்சியை சேர்க்க வேண்டும்; டெல்லி மேல்-சபையில் பாலகங்கா எம்.பி. பேச்சு

சென்னை, மே.4-

நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில்      திருச்சியை சேர்க்க வேண்டும்;        டெல்லி மேல்-சபையில்      பாலகங்கா எம்.பி. பேச்சு

டெல்லி மேல்-சபையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்புத்துறையின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.. எம்.பி. பாலகங்கா பேசியதாவது:-

மக்கள் பெருக்கத்தின் காரண மாகவும், வேகமான தொழிற் மையம் உண்டாகுவதாலும், நகரங்கள் தோன்றுவதாலும், வீடுகளின் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

மத்திய அரசு ஜவஹர்லால் நேரு தேசிய நகரபுணர மைப்பு திட்டத்தின் கீழ் பல மாநிலங்களுக்கு நன்மை புரிந்து வருவதை பாராட்டுகிறேன். மாந கரங்களில் அடிப்படி வசதி களை செய்ய வேண்டி 65 மாநகராட்சிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அவற்றில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் அடங்கும். தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிராப்பள்ளியையும் இத்திட்டத்தில் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.

சென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் என்ற நிறுவனம் தமிழ்நாடு மாநில அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கட்டிட வரைவுகளை ஒழுங்குபடுத்தி மேற்பார்வையிட்டு, மற்றும் ஒப்புதல் அளிக்கும் நிறுவன மாகும் இந்த நிர்வாகம் தற்போதைய விதிகளின்படி 3000-10000 .. கட்டிட நிலப்பரப்பில் கட்டுமான பணிகள் மேற்கொண்டால் 10-ல் ஒரு பங்கு இடத்தை அரசுக்கு இனாமாக கொடுக்க வேண்டும். அல்லது அப்பகுதிக்கான தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும்.

அதுவே 10000 .. நிலப்பரப்பில் கட்டிட பணிகளை செய்யும் போது கண்டிப்பாக 10-ல் ஒரு பங்கு இடத்தை அரசுக்கு இனாமாக கொடுக்க வேண்டும். இப்படி ஒதுக்கப்படும் நிலத்தை ஒப்பன் ஸ்பேஸ் ரிசர்வ் என்பார்கள் இப்படி இருக்கையில் புதிதாக மாநகராட்சியின் விதிகளை திருத்தி ஏழைகளுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கவேண்டுமென கட்டுமானம் மேற் கொள்ளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வற்புறுத்தப்பட்டால் புதிய பிரச்சினைகளை அரசு எதிர்க்கொள்ள வேண்டிய வரும்.

மத்திய அரசு தன்னு டைய திட்டங்கள் மூலம் மாநில அரசுக்கு ஏராளாமான நிதியை ஒதுக்கி தருகிறது. இத்திட்டங்கள் முதல்- அமைச்சரின் தலைமையில் பார்வையிட ஒரு குழுவும் மத்திய அரசு உயர்மட்ட அதிகாரிகள் தலைமையிலும் குழுவும் இயங்கி வருகிறது. ஆனால் இக்குழுக்காளால் எந்த பயனுமில்லை. உதாரனமாக தமிழ் நாட்டில், கோயம்புத்தூரில் அம்மன் கோவில் பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் கட்டப்பட்டு இறுதிநிலையுள்ளது. இந்த பகுதிகட்டுமான பணிகளை மேற்கொள்ள தகுதியற்ற நிலமாகும். இதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டியது. வேலைகள் முடிவுறும் நிலையில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

விதிமுறைகளை மீறி திட்டங்களை நிறைவேற்றி மத்திய அரசு வழங்கும் நிதியை வீணடிக்கிறவர்களை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Last Updated on Tuesday, 04 May 2010 11:29
 

இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியைப் பெற்றுத் தருவோம்

Print PDF

தினமணி 03.05.2010

இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியைப் பெற்றுத் தருவோம்

கரூர், மே 2: கரூர் இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியை பெற்றுத் தருவோம் என்றார் கரூர் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை.

கரூரில் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரையும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலருமான வி. செந்தில்பாலாஜியும் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.

அவர்கள் தாந்தோன்றிமலை நகராட்சி, வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், பழைய ஜயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர் பேரூராட்சி, தொழில்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, அரசு காலனியில் மனுக்களைப் பெற்ற போது, கரிகாலி நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தம்பிதுரை கூறியது:

அரசு காலனி பகுதியில் சாக்கடை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கால்வாய் அமைக்க எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறுகளில் மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து நடைபெற்று வரும் மக்களவை கூட்டத் தொடரில் புதன்கிழமை பேசுவேன்.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல், கனிம வளங்கள் அள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

1998-99 ஆம் ஆண்டில் நான் மக்களவை உறுப்பினராக இருந்த போது இரட்டை வாய்க்கால் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக ஆட்சியில் இல்லாத போதும், அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை பெற்று வருகிறோம். 11 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, அப்போதெல்லாம் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டு தற்போது தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இரட்டை வாய்க்கால் பணி முழுமையாக நிறைவேற தேவையான நிதியை நானும், செந்தில்பாலாஜி எம்எல்ஏவும் பெற்றுத் தருவோம் என்றார் தம்பிதுரை.

அதைத்தொடர்ந்து, அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ. பரிந்துரைக்கும் மனுக்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் வருகிறது. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்பிதுரை கூறினார்.

தொடர்ந்து வாங்கல், செவ்வந்திப்பாளையம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி பகுதி பொதுமக்களிடம் தம்பிதுரை மனுக்களை பெற்றனர்.

கரூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக செயலர் திருவிக. பழனியப்பன், ஒன்றியச் செயலர் கே. கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அடுத்த மாதம் திறப்பு?

Print PDF

தினமணி 03.05.2010

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அடுத்த மாதம் திறப்பு?

மதுரை, மே 2: மதுரை மாட்டுத்தாவணியில் புதிய காய்கறி மார்க்கெட் பணிகள் தற்போது 90 சதம் முடிந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் 846 தரைக்கடைகளை உண்மையான வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிக்காக சிறப்பு அதிகாரிகள் குழுவை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் நியமித்துள்ளார்.

இக்குழு உண்மையான வியாபாரிகள் குறித்த அறிக்கையை இன்னும் 1 வாரத்துக்குள் சமர்ப்பிக்கவுள்ளது. இதையடுத்து, கட்டடக் கடைகள், 846 தரைக்கடைகள் உள்ளிட்டவைக்கு ஏலம் விடுவதற்கான தேதியை மாநகராட்சி அறிவிக்கும் என மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

மதுரை மையப் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த காய்கறி மார்க்கெட்டை நகரின் வெளிப்பகுதியில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சராக மு.க.அழகிரி பதவி ஏற்ற பின் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மாட்டுத்தாவணி அருகே காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக முதலாவதாக மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த இதற்கான நிதி ரூ.12 கோடி வரை உயர்ந்துள்ளது.

மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டு வரும் மார்க்கெட்டில் மொத்தம் 524 கட்டட அமைப்பிலான கடைகளும், 846 தரைக் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. இதில், சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைத்திருந்த 466 வியாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கட்டட அமைப்புக் கடைகளுக்கும், 846 தரைக்கடைகளையும் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த மார்க்கெட்டில் கேண்டீன், கழிப்பிட வசதி, பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி இதுவரை மொத்தம் 1,256 வியாபாரிகள் மாநகராட்சியில் மனு செய்துள்ளனர்.

கடைகள் மற்றும் மாத வாடகை, அட்வான்ஸ் தொகை விவரம்:

கட்டடக் கடை (8}க்கு 8): மாத வாடகை ரூ.1,000 (அட்வான்ஸ் ரூ.35,000). 13}க்கு 13 அளவு: வாடகை ரூ.2,000 (அட்வான்ஸ் ரூ.60,000).

தரைக்கடைகள்: (8}க்கு 8 அளவு) மாத வாடகை ரூ.700, (அட்வான்ஸ் ரூ.50,000). 10}க்கு 10 அளவு கடை: மாத வாடகை ரூ.1,000 (அட்வான்ஸ் ரூ.75,000). 20}க்கு 20 அளவுள்ள கடை: மாத வாடகை ரூ.4,000 (அட்வான்ஸ் ரூ.2 லட்சம்) என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் தரைக்கடைகள் வைத்து நடத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், உண்மையான வியாபாரிகள் குறித்து கணக்கெடுக்க மாநகராட்சி உதவிக் கமிஷனர் ராஜகாந்தி, பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன், உதவி நகர்நல அலுவலர் பழனிச்சாமி ஆகிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உதவிக் கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன் கூறுகையில், இந்த அதிகாரிகள் குழு உண்மையான வியாபாரிகள் குறித்த அறிக்கை சமர்ப்பித்த ஒரு வாரத்தில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு மொத்தமாக ஏலம் விடுவதற்கான தேதி அறிவிக்கப்படும்.

பின்னர் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் புதிய மார்க்கெட் செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

 


Page 95 of 160