Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கொளத்தூரில் மழை, வெள்ள தடுப்பு பணி

Print PDF

தினமலர் 29.04.2010

கொளத்தூரில் மழை, வெள்ள தடுப்பு பணி

சென்னை : ''மழைக் காலத்தில் கொளத்தூர் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் கொளத்தூர் ஏரியின் உபரி நீர் மாதவரம் ஏரியில் சேர்க்கும் வகையில், 19 கோடி ரூபாய் மதிப்பில், இணைப்பு கால்வாய் கட்டப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் கூறினார்.ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கொளத்தூர் பகுதியில், 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணியை மேயர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்து கூறியதாவது:கொளத்தூர் பகுதியில் ஏற்கனவே 10 கோடியே ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டது.

மேலும், இந்த பகுதியில் வேலவன் நகர், அஞ்சுகம் நகர், ஜி.கே.எம். காலனி, திருப்பதி நகர், சீனிவாசன் நகர், திருமலை நகர் போன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் 20.30 கிலோ மீட்டர் நீளத் திற்கு, 25 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் புதிய மழைநீர் வடிகால் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.பிரதான சாலைகள், உட்புற சாலைகளில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுவதோடு, ஏழு கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் சேகரிப்பு கால்வாயும் கட்டப்படும். இந்த பகுதியில் மழை காலத்தில் கொளத்தூர் ஏரியின் உபரி நீர் தான், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தேங்கும். அதை தடுக்கும் வகையில், கொளத் தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை மாதவரம் ஏரியில் சேர்க்கும் வகையில், மூன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு 19 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை இணைப்பு கால்வாய் கட்ட திட்டமிட் டுள்ளது. கொளத்தூர் பகுதிக்கு மட்டும் மாநகராட்சியும் பொதுப் பணித்துறையும் இணைந்து, 44 கோடி ரூபாய் மதிப்பில் மழை வெள்ள தடுப்பு பணிகளை தற்போது மேற்கொண்டுள்ளது.

Last Updated on Thursday, 29 April 2010 05:57
 

புதிய இடத்திற்கு சென்ட்ரல் மார்க்கெட் மாறும் எப்போது: டெபாசிட் தொகையில் ஏற்பட்டது உடன்பாடு

Print PDF

தினமலர் 28.04.2010

புதிய இடத்திற்கு சென்ட்ரல் மார்க்கெட் மாறும் எப்போது: டெபாசிட் தொகையில் ஏற்பட்டது உடன்பாடு

மதுரை: டெபாசிட் தொகையை நிர்ணயிப்பதில் மாநகராட்சி - வியாபாரிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், புதிய இடத்திற்கு சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாறுவது உறுதியாகி உள்ளது.மதுரை நகரின் அழகைக் கெடுத்து, சுகாதார கேட்டை ஏற்படுத்தி, போக்குவரத்துக்கும் நெருக்கடியைத் தரும் சென்ட்ரல் மார்க்கெட்டை இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்தது. ஒரு வழியாக இப்பிரச் னையை தீர்க்கும் வகையில், மாட்டுத்தாவணிக்கு சென்ட்ரல் மார்க்கெட், இடம் மாற்றப்படஉள்ளது. சென்ட்ரல் மார்க்கெட் டில் உள்ள கடைகளின் ஏல காலம் முடிந்து, தற்போது மாநகராட்சியே வாடகையை வசூலிக்கிறது. இப்போது சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு, அளவைப் பொறுத்து, மாதம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

புதிய இடத்திற்கு டெபாசிட் மற்றும் மாத வாடகை தொகை அதிகம் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பலமுறை இத்தொகை மாற்றி அமைக்கப்பட்டது. கடைசியாக கிடைத்த தகவலின்படி, பெரிய கடைகளுக்கு 60 ஆயிரம் ரூபாய், சிறு கடைகளுக்கு 40 ஆயிரம் ரூபாய், தரை கடைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகை என முடிவாகி உள்ளது. இத்தொகையை வியாபாரிகள் பெயரளவிற்கு ஏற்று உள்ளனர். கடையின் அளவைப் பொறுத்து, மாத வாடகை, 2500, 2000, 1500, 1000 ரூபாய் என முடிவாகி உள்ளது.

80 சதவீத பணி: மாட்டுத்தாவணியில் உருவாகும் புதிய காய்கறி மார்க்கெட்டில் 80 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தற்போது சாலை, உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. 8 கோடி ரூபாய் மதிப் பீட்டில் சென்ற ஆண்டு துவங்கிய இப்பணிகள் சென்ற ஜனவரியில் முடியும் என எதிர்பார்க்கப்பட் டது. இப்பணிகள் முடியாமல் நீடித்ததால் செலவு 12 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெபாசிட் தொகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அடுத்த மாதம் இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் புதிய மார்க்கெட் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Wednesday, 28 April 2010 06:19
 

சிவகாசி நகராட்சியில் ரூ.93 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 27.04.2010

சிவகாசி நகராட்சியில் ரூ.93 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

சிவகாசி, ஏப். 26: சிவகாசி நகராட்சியில் ரூ. 93.55 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு, மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிவகாசி நகர்மன்றக் கூட்டம், வெள்ளிக்கிழமை நகர்மன்றத் தலைவர் ராதிகாதேவி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், சிவகாசி-திருத்தங்கல் சாலையில் பாலம் அமைக்க ரூ. 18 லட்சம், அண்ணாநகரில் கழிப்பட வசதி செய்ய ரூ. 9.25 லட்சம், உசேன் காலனியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ரூ 7.60 லட்சம், பாரதிநகர் 6-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ. 4 லட்சம், பஸ் நிலையம் முன்பு கல் தளமும், தார் தளமும் அமைக்க ரூ. 9.50 லட்சம், சேர்மன் சண்முகம் சாலையில் கழிப்பிடம் கட்ட ரூ. 7.60 லட்சம்,

ரயில்வே பீடர் சாலையில் கல் தளம் அமைத்து சாலையை அகலப்படுத்த ரூ. 3.50 லட்சம், பராசக்தி காலனி மற்றும் முஸ்லிம் நடுத் தெருவும் சந்திக்கும் இடத்தில் சிமென்ட் சாலை அமைக்க ரூ. 5.50 லட்சம், நேஷனல் காலனியில் சாலை சீரமைக்க ரூ. 3.10 லட்சம், சாமிபுரம் காலனியில் வாருகால் அமைக்க ரூ. 6.25 லட்சம் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்வது உள்பட பல்வேறு பணிகளுக்கென ரூ. 93.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மன்றக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி. அசோகன், பொறியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 


Page 98 of 160