Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

காஞ்சிபுரத்தில் ரூ.185 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி 23.04.2010

காஞ்சிபுரத்தில் ரூ.185 கோடியில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம், ஏப். 22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.185 கோடியில் உயர்மட்ட பாலங்கள், பல்வேறு சாலைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

÷காஞ்சிபுரம் பகுதியில் ரூ.4.11 கோடிக்கு புக்கத்துறை-உத்திரமேரூர் சாலை, பாத்தூர்-தண்டலம் சாலை உள்பட பல்வேறு இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் திறப்பு விழா மற்றும் காஞ்சிபுரம் புறவழிச் சாலை, சென்னை-பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் நான்கு வழிச் சாலை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா, பல்வேறு பாலங்கள் அடிக்கல் நாட்டு விழா உள்பட ரூ.185 கோடிக்கு பல்வேறு பணிகளுக்கான விழா நடைபெற்றது.

÷இவ் விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

÷இந் நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், எம்எல்ஏக்கள் பி.கமலாம்பாள், கே.சுந்தர், காயத்ரி தேவி, டி.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.÷இந்நிகழ்ச்சியில் ரூ. 4.11 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் திறக்கப்பட்டன. ரூ.44.18 கோடியில் பல்வேறு சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் ரூ.137.29 கோடிக்கு பாலங்கள் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.விழாவில் மஞ்சள் மயம்: இவ் விழாவில் திறக்கப்படும் கல்வெட்டுகள் மூடப்பட்ட துணி மஞ்சள் நிறத்தில் இருந்தது. மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த பதாகை, அலங்கார பூக்களில், விழா விருந்தினர்கள் அணிந்திருந்த பேட்ஜுக்கு நடுவில் என பல்வேறு இடங்களில் மஞ்சள் மயம் காணப்பட்டது.

Last Updated on Friday, 23 April 2010 10:28
 

நேரு பூங்காவை பராமரிக்கும் விவகாரத்தில்...எழுதி தர எதிர்பார்ப்பு!: நடவடிக்கை எடுத்தால் பொலிவாகும் பூங்கா

Print PDF

தினமலர் 23.04.2010

நேரு பூங்காவை பராமரிக்கும் விவகாரத்தில்...எழுதி தர எதிர்பார்ப்பு!: நடவடிக்கை எடுத்தால் பொலிவாகும் பூங்கா

கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்காவை, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், எழுத்துப் பூர்வமாக தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைத்தால் மட்டுமே, மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், குன்னூர் சிம்ஸ்பார்க் உட்பட சுற்றுலா ஸ்தலங்களை காணும் சுற்றுலாப் பயணிகள் பலர், கோத்தகிரி கோடநாடு, நேரு பூங்காவை காணத் தவறுவதில்லை. கோத்தகிரியில் இதமான காலநிலை நிலவுவதால், இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை காண வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. நகரின் மையப்பகுதியில் 3 ஏக்கர் பரப்பில் உள்ள நேரு பூங்கா, கோத்தகிரி பேரூராட்சியின் பராமரிப்பில் இருந்து வந்தது. நிதி நெருக்கடி உட்பட பல காரணங்களால், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பூங்காவை சரிவர பராமரிக்க முடியாத நிலையில், முட்புதர் சூழ்ந்து, சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியது. கடந்த காலங்களில் இப்பூங்காவில், 10க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூங்காவை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், 1996ம் ஆண்டு, தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பொலிவிழந்து காட்சியளித்த நேரு பூங்காவுக்கு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மற்றும் தோட்டக்கலைத் துறை உட்பட பல திட்டங்களின் கீழ் போதிய நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், அலங்கார நுழைவு வாயில் மற்றும் வேலி, 'இன்டர்லாக் பிளாக்' நடைபாதை, நிழற்குடை, இருக்கைகள், ரோஜா மேடை என பல வகைகளில், பூங்கா சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சி நடத்துவது போல, கோத்தகிரி நேரு பூங்காவுக்கும் சிறப்பு அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக 'காய்கறி கண்காட்சி' நடத்தி அமர்க்களப்படுத்தியது தோட்டக்கலைத் துறை. கண்காட்சி நாட்களில், உள்ளூர் மக்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். நடப்பாண்டு மே 29, 30ம் தேதிகளில் மூன்றாவது காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது. பூங்காவை மேலும் மெருகூட்ட தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் வாய்மொழியாக மட்டுமே, தோட்டக்கலைத் துறையிடம் பூங்காவை ஒப்படைத்துள்ளதால், பூங்காவை மேலும் மேம்படுத்தும் தோட்டக்கலைத் துறையின் முயற்சிக்கு, அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி தடைபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நேரு பூங்காவை மேம்படுத்த, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், எழுத்துப் பூர்வமாக, தோட்டக்கலைத் துறை வசம் ஒப்படைத்தால் மட்டுமே, போதிய நிதி பெற முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Last Updated on Friday, 23 April 2010 06:54
 

வளர்ச்சிப்பணிகள் : கலெக்டர் ஆய்வு

Print PDF

தினமலர் 23.04.2010

வளர்ச்சிப்பணிகள் : கலெக்டர் ஆய்வு

அரியலூர்:அரியலூர் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆபிரகாம் ஆய்வு மேற் கொண்டார்.அரியலூர் எம்.எல்.. மேம்பாட்டு நிதியிலிருந்து நகராட்சி சார்பில் ரூ.ஒரு லட்சத்தில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடையை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்பு சடையப்பன் தெரு, சேர்வைத் தெருவில் பெட்டிக்கடை, பூக்கடை நடத்தி வருபவர்களிடம் நகராட்சி அனுமதி பெறாவிட்டால் அனுமதி பெற்று கடை நடத்துமாறு அறிவுறுத்தினார். கல்லக்குடி தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெண்கள் பொது கழி வறையை ஆய்வு மேற் கொண்டார். பின்பு அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் நோயாளிகள் தங்கும் படுக்கை பகுதியை ஆய்வு மேற்கொண்டு மருத்துவ வசதி, உணவு வசதி குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வின் போது தலைமை மருத்துவர் சிவக் குமார், நகராட்சி செயல் அலுவலர் சமயசந்திரன், பொதுப்பணித்துறை மேற் பார்வையாளர் பாண்டு, பொறியாளர் நிலேஷ்வரன், டாக்டர் அன்புகனி உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 23 April 2010 06:09
 


Page 100 of 160