Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

இடைக்கழிநாடு பேரூராட்சியில் ரூ.34 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

Print PDF

தினமலர் 22.04.2010

இடைக்கழிநாடு பேரூராட்சியில் ரூ.34 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

செய்யூர் : இடைக்கழிநாடு பேரூராட்சியில் 34 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.இடைக்கழிநாடு பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் விஷ்ணுவர்தன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சொர்ணஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் 8வது வார்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பது, பனையூர் சமுதாயக்கூடம் அருகில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கழிவறை கட்டுவது, பொது நிதியில் 7வது வார்டு விளம்பூர் சாலையில் ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைப்பது, நல்லூர் விநாயகர் கோவிலிலிருந்து பொன்னியம்மன் கோவில் வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்வது, வேம்பனூர் மாரியம்மன் கோவில் சாலையில், 11 லட்ச ரூபாய் மதிப்பில் தார்ச் சாலை அமைப்பது, வேம்பனூர் திடக் கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சுற்றுவேலி அமைப்பது, எம்.எல்.., தொகுதி மேம் பாட்டு நிதியில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 19வது வார்டு கெங்கதேவன்குப்பம் மேட்டுக்காலனி மாரியம்மன் கோவில் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றுவது, கோவைப்பாக்கம் காலனி சுடுகாடு சாலையை, மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையாக மாற்றுவது, கெங்கையம்மன் கோவிலிலிருந்து பாதிரிஅம்மன் கோவில் செல்லும் வழியில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பது, கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பள்ளி வாசல் செல்லும் சாலையை, இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையாக மாற்றுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 22 April 2010 06:55
 

மயிலாடுதுறை தொகுதியில் ரூ. 87 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 19.04.2010

மயிலாடுதுறை தொகுதியில் ரூ. 87 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

மயிலாடுதுறை,ஏப்.18: மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகராட்சி, ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் 2010-11 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக சுமார் ரூ. 87 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

கீழபட்டமங்கலம், வில்லியநல்லூர், மகாராஜபுரம், கொற்கை, பட்டவர்த்தி, ஆணைமேலகரம் உள்ளிட்ட 28 ஊராட்சிகளில் உள்ள 732 தொகுப்பு வீடுகளைப் பழுதுபார்க்க ரூ. 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், வரதம்பட்டு ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளி, இளந்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணக்குடி ஆதிதிராவிடர் நலப்பள்ளி, மயிலாடுதுறை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சத்துணவுக் கூடம், தலைஞாயிறு, முருகமங்கலம், மொழையூர், மறையூர், குளிச்சார், முடிகண்டநல்லூர் ஆகிய 6 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக்கழு கட்டடங்களும், தலைஞாயிறு, நீடூர், கடுவங்குடி, கிழாய், பட்டவர்த்தி ஆகிய 5 ஊராட்சிகளில் மயானக் கொட்டகையும், மயிலாடுதுறை நகர் 19- வது வார்டு பால்காரத்தெரு, புதுத்தெரு, 22- வது வார்டு தனியூர் வாணியத் தெரு, செருதியூர் ஊராட்சி எலுமிச்சம்பாத்தி காலனித் தெரு ஆகிய 4 இடங்களில் மினி பவர் பம்பும், நீடூர் ஊராட்சி காலனிதெரு, மயிலாடுதுறை திருவிழந்தூர் காமராஜர் சாலை, பல்லவராயன் பேட்டை ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை அமைப்பதற்கும் மற்றும் தலைஞாயிறு, கொற்கை ஆகிய ஊராட்சிகளில் ஈமக்கிரியை மண்டபம் அமைப்பதற்கும் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 19 April 2010 10:29
 

'மை லேடீஸ்' பூங்கா நீச்சல் குளம் 15 நாளில் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Print PDF

தினமலர் 19.04.2010

'மை லேடீஸ்' பூங்கா நீச்சல் குளம் 15 நாளில் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை : 'புதுப்பிக்கப்பட்ட, 'மை லேடீஸ்' பூங்கா நீச்சல் குளத்தை விரைவில் துணை முதல்வர் திறந்து வைப்பார்' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்ட்ரல் அருகே, 'மை லேடீஸ்' பூங்காவில், பழமையான ராயல் நீச்சல் குளம் இருந்தது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. அந்த நீச்சல் குளத்தை புனரமைக்க திட்டமிட்டு, ஒரு கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை, சென்னை மாநகராட்சி மேற்கொண் டுள்ளது. பணிகள் முடியும் நிலையில் உள்ளது. மேயர் சுப்ரமணியன், நீச்சல்குளம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பழமையான நீச்சல்குளம் புதுப்பிக்கப்பட்டு, 23 ஆயிரத்து 861 சதுர அடி பரப்பளவில் கட்டப் படுகிறது. அருகில் சிறுவர்கள் குளிக்கும் வகையில் சிறிய நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீச்சல்குளத்தில் ஒரே நேரத்தில் 60 பேர் குளிக்கலாம். ஆறு உடை மாற்றும் அறைகள், ஆறு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளத்திற்கு தனியே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.

தென்சென்னையில் மெரீனா நீச்சல் குளம் இருப்பது போல், வடசென்னை மக்கள் பயன்பெறும் வகையில், 'மை லேடீஸ்' பூங்கா நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியும் நிலையில் இருப்பதால், 15 நாட்களில் துணை முதல்வர் ஸ்டாலின் நீச்சல் குளத்தை திறந்து வைப்பார். 'மை லேடீஸ்' பூங்கா அருகில் உள்ள ஏரியில், படகு குழாம் அமைக்கும் பணிக்கான வடிவமைப்பிற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் படகு குழாம் அமைக்கப்படும். அதுபோல், தென்சென்னையில் வேளச்சேரி ஏரியில் படகு குழாம் அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன், கமிஷனர் (பொறுப்பு) ஆஷிஸ் சாட்டர்ஜி, தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 19 April 2010 06:05
 


Page 101 of 160