Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

தமிழக நகராட்சி,மாநகராட்சி தொழிற்சங்களுடன் ஸ்வீடன் நாட்டு குழுவினர் நெல்லையில் கலந்துரையாடல்

Print PDF

தினமலர் 17.04.2010

தமிழக நகராட்சி,மாநகராட்சி தொழிற்சங்களுடன் ஸ்வீடன் நாட்டு குழுவினர் நெல்லையில் கலந்துரையாடல்

திருநெல்வேலி:நெல்லையில், நகராட்சி, மாநகராட்சி தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன், ஸ்வீடன் நாட்டு குழுவினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.ஸ்வீடன் நாட்டில் நகராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களை உறுப்பினராக கொண்டு 'கம்யூனல்' என்ற தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து, கம்யூனல் உதவி இன்டர்நேஷனல் செயலாளர் கிறிஸ்டினா ஓல்சன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.மாலையில், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஸ்வீடன் நாட்டு குழுவினருக்கு நெல்லை ஜங்ஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், தமிழக மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர் சங்கங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி, மாநகராட்சி கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார். மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் சண்முகம் வரவேற்றார்.தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து கிறிஸ்டீனா ஓல்சன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் வெங்கட்ராமன், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் சுடலைமுத்து, நெல்லை மாவட்ட நகராட்சி கூட்டமைப்பின் தலைவர் நாகூர் மீரான், நெல்லை கூட்டமைப்பின் செயலாளர் விவேகானந்தன், மாநில அமைப்பு செயலாளர் முத்துதுரை, நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.முருகானந்தம் நன்றி கூறினார்

Last Updated on Saturday, 17 April 2010 06:44
 

போளூரில்வளர்ச்சிப்பணி உதவி இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 16.04.2010

போளூரில்வளர்ச்சிப்பணி உதவி இயக்குனர் ஆய்வு

போளூர்: போளூர் பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். போளூர் பேரூராட்சியில் 2010-11ம் ஆண்டுக்கு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள பல பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அப்துல்கலீல் ஆய்வு செய்தார். இதில், போளூர் பஸ்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகம், நிழற்குடை பணிகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், டைவர்ஷன் ரோடு, காய்கறிமார்க்கெட், வீரப்பன் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செயல் அலுவலர் வாசுதேவன், உதவி பொறியாளர்கள் சேகர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்..

Last Updated on Friday, 16 April 2010 06:57
 

ராஜாஜி சிறுவர் பூங்கா சீரமைக்க நடவடிக்கை : தினமலர் செய்தி எதிரொலி

Print PDF

தினமலர் 16.04.2010

ராஜாஜி சிறுவர் பூங்கா சீரமைக்க நடவடிக்கை : தினமலர் செய்தி எதிரொலி

மதுரை : மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில், சேதமடைந்த விளையாட்டு சாதனங் களை சீரமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.கோடை விடுமுறையில் ராஜாஜி பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், விளையாட முடியாத நிலையில், பல விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, தினமலர் இதழில், கடந்த வாரம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ராஜாஜி பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு சாதனங்களை ஆய்வு செய்தனர். ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டு சாதனங்களை பயன்படுத்த, அனுமதிக்க வேண்டாம், என பூங்கா குத்தகைதாரர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சேதமடைந்த விளையாட்டு சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 16 April 2010 06:34
 


Page 102 of 160