Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் நீச்சல் குளம்

Print PDF

தினமணி 08.04.2010

காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியில் நீச்சல் குளம்

காஞ்சிபுரம், ஏப். 7: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திடலில் ரூ.1 கோடி செலவில் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளை அழகுபடுத்தும் திட்டத்தில் தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந் நிதியைக் கொண்டு சாலை அமைத்தல், நடைபாதைகள் அமைத்தல், குளங்களை தூர்வாருதல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்ட விளையாட்டு திடலில் ரூ.1 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந் நீச்சல் குளத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா அடிக்கல் நாட்டினார்.

பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தாமஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:40
 

பெரியார் மேம்பாலம் அருகில் புதிய பூங்கா திறப்பு

Print PDF

தினமணி 01.04.2010

பெரியார் மேம்பாலம் அருகில் புதிய பூங்கா திறப்பு

சேலம், மார்ச் 31: சேலம் பெரியார் மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்காவை மேயர் ரேகா பிரியதர்ஷிணி புதன்கிழமை திறந்து வைத்தார்.

காந்தி விளையாட்டு மைதானத்துக்கு எதிரில் மேம்பாலத்தையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் காலியாக இருந்தது. இதில், சேலம் சிவில் என்ஜினீயர்கள் சங்கத்தினர் ரூ.10 லட்சம் செலவில் பூங்கா அமைக்க முன்வந்தனர்.

இதையடுத்து இரும்பு வேலி அமைக்கப்பட்டு மரக்கன்றுகள், புல் நாற்றுகள் நடப்பட்டு புதிய பூங்கா உருவாக்கப்பட்டது.

மேயர் ரேகா பிரியதர்ஷிணி இதைத் திறந்து வைத்தார். அவர் பேசும்போது, இந்தப் பூங்காவை மாநகர பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் பல இடங்களிலும் பூங்காக்கள் அமைக்க தனியார் முன் வர வேண்டும் என்றார். மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, துணை மேயர் பன்னீர்செல்வம், என்ஜினீயர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், திட்டக் குழுத் தலைவர் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Last Updated on Thursday, 01 April 2010 10:34
 

கோபாலசமுத்திரம் கண்மாய் ரூ.10 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினமலர் 01.04.2010

கோபாலசமுத்திரம் கண்மாய் ரூ.10 லட்சத்தில் சீரமைப்பு

திண்டுக்கல் : கோபாலசமுத்திரம் கண்மாய் 10 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது.திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் கண்மாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நகராட்சி சார்பில் இந்த கண்மாய் கரை உடைக்கப்பட்டு கழிவுநீரை வெளியேற்றி, தூரெடுத்து புதிய கரை அமைத்து மழைநீரை சேமிக்கவும், வாக்கிங் செல்ல வசதியாக கரையினை அகலப்படுத்த 10 லட்சம் ரூபாயில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் கண்மாய் புதுப்பொலிவு பெறும் என நகராட்சி தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 01 April 2010 07:10
 


Page 106 of 160