Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

சென்னை நதிகள் சீரமைப்பு: தமிழக-சிங்கப்பூர்அதிகாரிகள் கூவத்தில் இன்று கள ஆய்வு

Print PDF

தினமணி 19.03.2010

சென்னை நதிகள் சீரமைப்பு: தமிழக-சிங்கப்பூர்அதிகாரிகள் கூவத்தில் இன்று கள ஆய்வு

சென்னை, மார்ச் 18:சென்னை நதிகளை சீரமைக்கும் பணியின் ஒருபகுதியாக, கூவத்தை தமிழக}சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கூட்டாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கின்றனர்.

கூவம் சீரமைப்புப் பணிகளின் முதல்கட்டமாக, கூவம் ஆறு மற்றும் சென்னையின் பிற நீர்நிலைகளைச் சீரமைக்கும் நோக்கத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் "சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை' உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை நீர்நிலைகளின் சீரமைப்புத் திட்டங்களை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல், நிதி ஆதாரம், மேற்பார்வை ஆகியவற்றுக்காக இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. இந்த முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையில் உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டது.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் "சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனம்' ஆகியவற்றுக்கு இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்காக, சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அல்போன்சஸ் சியா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதுகுறித்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது:

கூவம் சீரமைப்புத் தொடர்பாக குடிசை மாற்று வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக மற்றும் சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூவம் ஓரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை களஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் அடிப்படையில், முதல் கட்ட அறிக்கையை அவர்கள் அளிப்பார்கள்.

Last Updated on Friday, 19 March 2010 10:58
 

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமலர் 19.03.2010

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

சிதம்பரம்: அண்ணாமலைநகர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட் டம் சேர்மன் கீதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன், துணைத் தலைவர் முன் னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பேரூராட்சி பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு, பூங்கா, பொது கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடைகள், பேரூராட்சிக் குட்பட்ட வெள்ளக்குளத் தில் நவீன கழிப்பிடத் திற்கு புதிய மின்மோட்டார் மற்றும் கொத்தன்குடிதோப்பில் நவீன கழிப்பிடத்திற்கு புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் வாங்க முடிவு செய்யப்பட்டது.

Last Updated on Friday, 19 March 2010 06:22
 

அவிநாசி ரோட்டில் மின் விளக்கு ரூ.3 கோடியில் அமைக்க திட்டம்

Print PDF

தினமலர் 16.03.2010

அவிநாசி ரோட்டில் மின் விளக்கு ரூ.3 கோடியில் அமைக்க திட்டம்

கோவை: கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டையொட்டி, அவிநாசி ரோடு மேம்பாலத்திலிருந்து, விமானநிலையம் வரை மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மின் விளக்குகளை கோவை மாநகராட்சி அமைக்கிறது. அவிநாசி ரோடு மேம்பாலம், நஞ்சப்பா ரோடு சந்திப்பு இணையும் பகுதியிலிருந்து மின்விளக்கு பொருத்தும் பணியை மேயர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். இந்த ரோட்டில் இருபக்கமும் வெளிச்சம் தெரியும் வகையில் ஒரு மின் கம்பத்திற்கு இரு மின்விளக்குகள் வீதம், 275 மின் கம்பங்கள் அமைக்கப்படுகிறது; இதில் 550 மின் விளக்குகள் பொருத்தப்படுகிறது.

அவிநாசிரோட்டில் உப்பிலிபாளையம், எல்..சி., அண்ணாசிலை, நவஇந்தியா, ஜி.ஆர்.ஜி., ஹோப்காலேஜ், சித்ரா ஆகிய எட்டு பகுதிகளில் 16 மீ., உயரத்திற்கு உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்படும். எட்டு விளக்குகள் 400 வாட்ஸ் திறனில் ஒளி வீசும். திருச்சி ரோட்டில், ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடத்தின் முன்பிருந்து ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை 5.40.கி.மீ.தூரத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் மின்விளக்குகள் பொருத்தப்படு கிறது. இதில் 151 மின்கம்பம் அமைக்கப்படும்;250 வாட்ஸ் திறனுள்ள 302 மின்விளக்குகள் பொருத் தப்படும். திருச்சி ரோடு சீரமைப்பு பணிகள் முடிந்த பின், மின்கம்பம் அமைக்கும் பணி நடக்கும். அவிநாசிரோட்டில் மின் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.

Last Updated on Tuesday, 16 March 2010 09:21
 


Page 108 of 160