Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

காஸ் இணைப்பு இல்லாத புதிய ரேஷன்கார்டு தாரருக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

Print PDF

தினமணி 10.03.2010

காஸ் இணைப்பு இல்லாத புதிய ரேஷன்கார்டு தாரருக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

கோவை, மார்ச் 9: சமையல் காஸ் இணைப்பு இல்லாத புதிதாக ரேஷன்கார்டு பெற்றவர்களுக்கு மார்ச் மாதத்துக்கு மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

÷மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சிப் பகுதியை உள்ளடக்கிய நகரப்புறங்களில் வசிக்கும் காஸ் இணைப்பு இல்லாத அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கும் 3 லிட்டருடன், கூடுதலாக 2 லிட்டர் அதிகரித்து வழங்கப்படும்.

÷நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் உள்ள அட்டைதாரர்கள், கிராமங்களில் காஸ் இணைப்பு இல்லாதவர்கள், ஒரு சிலிண்டர் உள்ள அட்டைதாரர்களுக்கு தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.

÷மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 10 March 2010 09:27
 

விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 10.03.2010

விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி துவக்கம்

சென்னை : விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், மிகவும் பழமை வாய்ந்த விக்டோரியா பப்ளிக் ஹால் உள்ளது. இதை, மூன்று கோடியே ஆறு லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.விக்டோரியா பப்ளிக் ஹால், 38 சதுர நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பழைமை வாய்ந்த கட்டடத்தில், மரத்தினாலான மேற்கூரையின் சில பகுதிகள் பழுதடைந்துள்ளன.அவற்றை, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், தரைத்தளம், முதல் தளம் சீரமைக்கும் பணியும், சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணிகளும், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த புனரமைப்பு பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்.தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நேற்று நேரில் வந்து புதுப்பிப்பு பணிகளை ஆய்வு செய்தார். குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, மாநகராட்சி கமிஷனர் ரஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Last Updated on Wednesday, 10 March 2010 06:22
 

கொடைக்கானல் நகராட்சி படகு குழாமில் கூடுதல் படகு இயக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

Print PDF

தினமணி 09.03.2010

கொடைக்கானல் நகராட்சி படகு குழாமில் கூடுதல் படகு இயக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல், மார்ச் 8: கொடைக்கானல் நகராட்சி சார்பில் கே.ஆர்.ஆர். கலையரங்கம்அருகில் உள்ள ஏரிப் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சிப் படகு குழாம் ஆரம்பிக்கப்பட்டது.

படகு குழாமில் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் படகுகள் இருந்தன. இதுவரை கூடுதல் படகுகள் இயக்கப்படவில்லை. விடுமுறை நாள்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் நேரங்களில் நீண்ட நேரம் அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

மேலும் கொடைக்கானல் ஏரியில் தனியார் படகு குழாம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை படகு குழாம் உள்ளது. அவற்றில் கூடுதலான படகுகள் மற்றும் நவீன படகுகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் தனியார் படகு குழாமிற்குச் செல்கின்றனர். எனவே நகராட்சி படகு குழாமில் கூடுதலான மற்றும் நவீன படகுகள் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கொடைக்கானல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது 6 படகுகளும், சிக்கார படகு ஒன்றும் உள்ளது. மேலும் படகு குழாமை நவீனப்படுத்தவும், தனியார் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை படகு குழாம்களில் உள்ளது போல நவீன மற்றும் சிக்கார படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் சீசனுக்குள் நகர்மன்றத்தின் அனுமதி பெற்று புதுப்பொலிவுடன் நகராட்சிப் படகு குழாம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 09 March 2010 10:23
 


Page 111 of 160