Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

தினமலர் செய்தி எதிரொலி: கடலூர் கலெக்டர் அதிரடி

Print PDF

தினமலர் 09.03.2010

தினமலர் செய்தி எதிரொலி: கடலூர் கலெக்டர் அதிரடி

கடலூர் : தினமலர் செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் பஸ் நிலையம், மீன்கள் அருங்காட்சியகத்தை கடலூர் கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2008ம் ஆண்டு நவ. 22ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது கடலூர் அடுத்த பெரியகங்கணாங் குப்பத்தில் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலா ளர்களுக்கு கூலி வழங்குவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக் கப்பட்ட ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார். கடலூர் நகராட்சி பூங்காவில் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அரிய வகை மீன்கள் அருங்காட்சியகத்தையும், நெல்லிக் குப்பத்தில் ஒரு கோடி செலவில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தையும் அவர் திறந்த வைத்தார். துணை முதல்வர் திறந்து வைத்த இவை மூன்றும் ஓரிரு மாதங்களில் முடங் கின. இதுகுறித்து நேற் றைய தினமலர் "டீ கடை பெஞ்ச்' பகுதியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.., ஜெயக்குமார், சேர்மன் கெய்க்வாட்பாபு மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் கூறுகையில்,"சில நாட்களில் போலீஸ் நிழற்குடை, சிக்னல், ஹைமாஸ் லைட் வைக்கப்படும். அனைத்து பஸ்களும் உள்ளே செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்திற்குள் வராத டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய் யப்படும். பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண் டும்' என்றார்.

இரவு 7.15 மணிக்கு கடலூர் நகராட்சி பூங்கா வளா கத்தில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட்டார். அரிய வகை மீன்கள் இல்லாததைக் கண்ட கலெக்டர், அருங் காட்சியகத்தை பராமரித்து வரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கடல் உயிரின உயராய்வு மைய போராசியர்கள் ராமமூர்த்தி, சங்கர் மற்றும் கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் ஆகியோரிடம் மீன் அருங்காட் சியகம் உரிய முறையில் இயங்க நடவடிக்கை எடுக் குமாறு உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்கள் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கையேடு தயாரித்து வழங்க உத்தரவிட்டார்.மீன் அருங்காட்சியகம் பெயர் பலகையை பெரிய அளவில் வைக்கவும், பூங்கா சுவற்றில் கடல் அமைப்பை வரைந்து, கடல் வாழ் உயிரினங் களை பற்றிய குறிப்புகளை எழுதிட உத்தரவிட்டார்.

Last Updated on Tuesday, 09 March 2010 06:36
 

அழகப்பபுரம் பேரூராட்சியில் ரூ. 26.60 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 03.03.2010

அழகப்பபுரம் பேரூராட்சியில் ரூ. 26.60 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

நாகர்கோவில், மார்ச் 2:அழகப்பபுரம் பேரூராட்சியில் ரூ. 26.60 லட்சத்தில் திட்டப் பணிகளை, அமைச்சர் என். சுரேஷ்ராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

இப் பேரூராட்சி அலுவலகக் கட்டடம், தினசரி சந்தை மேம்பாடு, நியாயவிலைக் கடை, உயர்கோபுர மின்விளக்கு, பயணிகள் நிழற்குடை உள்ளிட்டவற்றை அமைச்சர் திறந்துவைத்தார். மேலும் 2-ம் கட்டமாக இலவச டிவிக்கள் வழங்கும் நிகழ்ச்சி அழகப்பபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 887 பேருக்கு டிவிக்களை வழங்கி அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டால் கிராம பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றபின் அழகப்பபுரம் பேரூராட்சியில் மட்டும் இதுவரை ரூ. 3 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன. இப்பேரூராட்சியில் முதற்கட்டமாக 1,614 பேருக்கு இலவச டிவி வழங்கப்பட்டது என்றார் அமைச்சர்.

அழகப்பபுரம் அருகேயுள்ள நிலப்பாறை வழியாக தடம் எண் 3 பி.வி. பஸ் நாகர்கோவிலில் இருந்து காலை 6.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்பட்டு வந்தது.

இந்த பஸ்ûஸ காலை 8.30 மணிக்கும், மாலை 4.15 மணிக்கும் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் வழித்தடத்தையும் அமைச்சர் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் டேவிட் வரவேற்றார். தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் தாமரைபாரதி வாழ்த்திப் பேசினார். செயல் அலுவலர் அகஸ்திலிங்கம் நன்றி கூறினார்.

 

அரசு திட்டப்பணிகள் கரூரில் ஆய்வு கூட்டம்

Print PDF

தினமலர் 26.02.2010

அரசு திட்டப்பணிகள் கரூரில் ஆய்வு கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சத்யகோபால் தலைமை, அரசுத் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அரசின் திட்டப்பணிகளை எவ்வித தவறுமின்றி, விரைவாகவும், முறையாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட கண்காணிப்பாளர் சத்யகோபால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டி.ஆர்.., முனிரத்தினம், டி.ஆர்.டி.., திட்ட அதிகாரி கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 


Page 112 of 160