Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

80 சதவீதம் வளர்ச்சிப் பணிகள் முடிவு: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் பேட்டி

Print PDF

தினமலர் 23.02.2010

80 சதவீதம் வளர்ச்சிப் பணிகள் முடிவு: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் பேட்டி

திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7வது வார்டில் 80 சதவீதம் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றியிருப்ப தாக வார்டு கவுன்சிலர் குமாரகுருசுவாமி தெரிவித்தார்.திருக்கழுக்குன்றம் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு வேதகிரீஸ் வரர் மற்றும் ருத்திரகோட்டிஸ் வரர் கோவில் அமைந்துள்ளது.திருக்கழுக்குன்றம் பேரூராட் சிக்குட்பட்ட 7வது வார்டில் மங்கலம், வடக்குபட்டு கிராமம், வடக்குப்பட்டு காலனி ஆகியவை அமைந் துள்ளன. வார்டு கவுன்சிலராக குமாரகுருசுவாமி உள்ளார். செங்கல்பட்டு சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.., தமிழ்மணி வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகிறார். வார்டில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர் கூறியதாவது:

எனது வார்டைச் சேர்ந்த ஏழைகள் 134 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா பெற்று தந்துள்ளேன். வடக்குப்பட்டு காலனி பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் அங்கன் வாடி கட்டப்பட்டுள்ளது.மங்கலம் தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், இலவச சேவையாக பகுதி நேர ஆசிரியர் நியமிக்கப் பட்டுள்ளர். எனது சொந்த செலவில் தாங்கல் ஏரி வரத்து வாய்கால்வாய் சீரமைக்கப்பட் டுள்ளது.அன்னை தெரசா கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஐந்து தெருக்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டு, பேரூராட்சி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றப் படுகின்றன.பெரியார் வீதி, திருவள்ளுவர் வீதி, புதுத் தெரு, விநாயகர்கோவில் தெரு, சூரப்பன் சாலை ஆகிய இடங் களில் கிணறு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு ஓராண்டில் 200 நாட்கள் வருமானம் கிடைக்கும் வகையில் எம்பிராய்டரி தொழில் துவக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி யில் மற்ற வார்டுகளை விட அதிக எண்ணிக்கையில் இலவச எரிவாயு அடுப்பு, இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டுள்ளது.முதியோர் உதவித் தொகை 25 பேருக்கு பெற்றுத் தரப் பட்டுள்ளது. வார்டு முழுவதும் சிமென்ட் சாலை, தார் சாலை அமைக்கப்பட்டுள்ளன.மத்திய அரசு நிதியுதவியுடன் 37 குடிசை வீடுகள் கான் கிரிட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. தெரு விளக்குகள் பொறுத்தப் பட்டுள்ளன. சொட்டு நீர் பாசனம் செய்ய 120 பேருக்கு தலா 4,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுதரப்பட் டுள்ளது.மணல் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை லாரி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவி யருக்கு மாலை தினமும் 2 மணிநேரம் இலவசக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இது வரை 80 சதவீதம் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டடம், நூலகம், மங்கலம் சுடுகாட்டுப் பாதை சீரமைப்பு, மங்கலம் பஸ் நிறுத்ததில் நிழற் குடை அமைப்பது உட்பட பல்வேறு பணிகளை செய்ய வேண்டும்.வார்டில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் பேரூராட்சி தலைவர் ஜீவரேகாதுரை, துணைத் தலைவர் செந்தமிழ்செல்வி ஒத்துழைப் புடன் செய்யப்படுகிறது.இவ்வாறு குமாரகுருசுவாமி தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:17
 

கொடுமுடி பகுதியில் ரூ.15 லட்சத்தில் பணிகள்

Print PDF

தினமணி 20.02.2010

கொடுமுடி பகுதியில் ரூ.15 லட்சத்தில் பணிகள்

கொடுமுடி, பிப்.19: வெங்கம்பூர் மற்றும் கொடுமுடி பேரூராட்சிகளில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியின் கீழ், ரூ.15.15 லட்சம் மதிப்பீட்டில் 5 திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கரட்டாம்பாளையத்தில் ரூ.55 ஆயிரம் மதிப்பீட்டில் நிழற்குடை, விருப்பம்பாளையத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பிக்கவும் பூஜை நடைபெற்றது. வெங்கம்பூர் வரதராஜப் பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கே.எஸ்.ஆர்.பெரியசாமி, பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, செயல் அலுவலர் எஸ்.எம்.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொடுமுடி பேரூராட்சிக்கு உட்பட்ட நகப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க நடைபெற்ற பூஜையில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சி.பெரியசாமி, துணைத் தலைவர் ஜி.என்.மணி, பொருளாளர் எம்.எஸ்.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கணபதிபாளையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள், தளுவம்பாளையத்தில் ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர்த் தொட்டி கட்டவும் பூமிபூஜை நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் வி.எஸ்.கோபாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் எஸ்.ராஜேஸ்வரி, தங்கவேல், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Last Updated on Saturday, 20 February 2010 10:46
 

திருச்சி சாலையில் பூங்கா பணி துவக்கம்

Print PDF

தினமணி 19.02.2010

திருச்சி சாலையில் பூங்கா பணி துவக்கம்

கோவை, பிப்.18: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி திருச்சி சாலையில் பூங்கா, நிரூற்றுகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை துவக்கப்பட்டது.

திருச்சி சாலை, புறவழிச்சாலை சந்திப்பு சுங்கம் பகுதியில் இப்பணியை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பைந்தமிழ் பாரி துவக்கிவைத்தார். மலர்ச் செடிகள், நீரூற்றுகள், புல்வெளி, தெரகோட்டா பொம்மைகள், கண்கவரும் அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல ஆணையர் லட்சுமணன்,செயற்பொறியாளர் கணேஷ்வரன், நகரமைப்புக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 113 of 160