Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ரூ.300 கோடியில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 08.02.2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ரூ.300 கோடியில் கட்டமைப்பு பணிகள் தீவிரம்

கோவை: கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறும் கட்டமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலர் அலாவுதீன் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட இயக்குனர் பால்ராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மைப் பொறியாளர் ராஜாமணி, மின் வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு, மாவட்ட எஸ்.பி. கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பணிகளை விரைவாக முடிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், அலாவுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநாட்டையொட்டி, கோவையில் பல்வேறு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.60 கோடியில் சாலை மேம்பாடு மற்றும் விரிவாக்க பணிகள் நடக்கிறது.

மாநாடு நடைபெற உள்ள கொடிசியா வளாகத்தில் ரூ.2.25 கோடியில் மண் நிரப்பும் பணி நடைபெற உள்ளது. மாநகராட்சி சார்பில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மாநகர சாலைகள் மேம்படுத்தப்படும். கழிப்பிடம் மற்றும் சுகாதார வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.55 கோடியில் மின் வாரியம் மூலம் புதை மின்வடம் அமைக்கப்படுகிறது. அவிநாசி சாலை, திருச்சி சாலை மற்றும் காமராஜர் சாலை உயரழுத்த மின்கம்பி இல்லாத பகுதியாக மாறும்.

மாநகராட்சி நிதியில் இருந்து பூங்கா, திடல் அமைக்கப்படுகிறது. மேலும் 18 இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படுகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புப் பணிகள் ஏப்ரலில் முடிவடையும். மீதமுள்ள பணிகள் மே இறுதிக்குள் முடிக்கப்படும்
.

கோவையில் ரயில் நிலையத்தில் கூரை அமைக்கவும், ரூ.7 கோடி மதிப்பீட்டில் பயணிகள் நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.300 கோடியில் மாநாட்டு கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கட்டுரைகள் ஆய்வுப்பணி கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில் அளிக்கப்படவுள்ள கட்டுரைகளின் ஆய்வு சுருக்கங்கள், பொருள் வாரியாக பிரிக்கப்பட்டு, நுண்ணாய்வு செய்யும் பணி சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் நேற்று தொடங்கியது. ஆய்வு பணியில் 165 அறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated on Monday, 08 February 2010 11:30
 

ரூ. 8 லட்சம் செலவில் பூங்கா புனரமைப்பு

Print PDF

தினமணி 08.02.2010

ரூ. 8 லட்சம் செலவில் பூங்கா புனரமைப்பு

பழனி, பிப். 7: பழனி ராஜகோபால் பூங்கா சுமார் ரூ.8 லட்சம் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக, பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: பழனி 13-வது வார்டில் உள்ள ராஜகோபால் பூங்கா, 9.3.58ல் பேரறிஞர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இப்பூங்கா பராமரிப்பின்றி உள்ளதால், இதை ரூ.7.87 லட்சம் செலவில் புனரமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைக்கு உள்பட்ட சுற்றுலாத் துறை மூலம் பெறும் நிதியைக் கொண்டு இப்பணி நடத்தப்படவுள்ளது. மேலும் சுற்றுலாத் துறை நிதி மூலம் பழனி டவுன் காளிமுத்து நகரில் உள்ள நகராட்சி பூங்கா ரூ.10.61 லட்சம் செலவிலும், உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா ரூ.6.71 லட்சம் செலவிலும், ராஜா நகர் பூங்கா ரூ.10.61 லட்சம் செலவிலும் புனரமைக்கப்பட உள்ளது.

நகராட்சி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சுற்றுலாத் துறை மூலம் நிதி வழங்க ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 08 February 2010 09:49
 

சேலம் மாநகராட்சியில் ஒரு கோடி ரூபாயில் பணிகள் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 05.02.2010

சேலம் மாநகராட்சியில் ஒரு கோடி ரூபாயில் பணிகள் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

சேலம் : சேலம் மாநகராட்சியின் பல்வேறு கோட்டங்களில் ரூ.1கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை வீரபாண்டி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

சேலம் 2வது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மாநகராட்சியின் திட்டப் பணிகளுக்கு ரூ.1கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பல்வேறு கோட்டங்களுக்கான திட்டப்பணிகள் நேற்று துவக்கப்பட்டது.

4வது கோட்டம் நியூபேர்லேண்ட்ஸ், 5வது கோட்டம் கிரீன்வேஸ் சாலை, அர்ஜூணா நகர், கேம்எஸ் கார்டன், 7வது கோட்டம் ஆத்துக்காடு, 6வது கோட்டம் பொன்நகர், கேகே நகர், 8வது கோட்டம் குருக்கள் காலனி, 12வது கோட்டம் மணக்காடு, 14வது கோட்டம் செரிரோடு, 15வது கோட்டம் ராஜாஜிசாலை, 30வது கோட்டம் நாராயணன் தெரு, தாண்டான்தெரு உட்பட பல்வேறு இடங்களில் தார்சாலை அமைத்தல், வடி கால் அமைத்தல், ஆள்துளை கிணறு அமைத்தல் போன்ற பணிகளை வீரபாண்டி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

இதே போல் மணக்காடு காமராஜர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.16லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் போன்றவற்றையும் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஆணையாளர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர் அசோகன், கவுன்சிலர்கள் தனசேகரன், தினகரன், செயற்பொறியாளர் அசோகன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 05 February 2010 11:43
 


Page 117 of 160