Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அரியலூரில் ரூ.14.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 05.02.2010

அரியலூரில் ரூ.14.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்

அரியலூர்:பெரம்பலூர், அரியலூரில் நேற்று நடந்த அரசு விழாக்களில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ. 332 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல், பல்வேறு புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெல்லா வரவேற்றார். பின்னர் ரூ.71 கோடியே 3 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.94 கோடியே 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 95 கட்டடங்களை திறந்து வைத்தும், ஆயிரத்து 600 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14 கோடியே 21 லட்சம் மதிப்பில் சுழல்நிதி மற்றும் ரூ.180 கோடியே 97 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:ஜாதி, மதங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கருணாநிதி இந்த சமத்துவபுர திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். அவரது கருத்தினை போல நாம் ஒற்றுமையுடனும், ஜாதி, மத பாகுபாடின்றியும், சமத்துவபுர திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி, சமூகத்தில் ஒற்றுமையுடனும், தோழமையுடனும் வாழ வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பேசுகையில், அரியலூர், பெரம்பலூர் பகுதிக்கும் 3 ஜி சேவையை விரைவில் மத்திய அமைச்சர் ராஜா செயல்படுத்த வேண்டும் என்றார்.மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், நாம் என்ன கேட்கப் போகிறோம் என்பதை அறிந்து கேட்கும் முன்பே வழங்குவார் முதல்வர் கருணாநிதி. பக்தனின் கோரிக்கையை இறைவன் எப்படி உயர்ந்து அருள்பாலிக்கிறாரோ அதேபோல் கருணாநிதி இறைவனாக இருந்து திட்டங்களை வழங்குகிறார். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 3 ஜி சேவை தொடங்கப்படும் என்றார்.வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசுகையில், தமிழக முன்னேற்றத்திற்கும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் பாடுபடும் திமுக அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.ஆண்டிமடம் எம்.எல்.. சிவசங்கர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தை துவக்கி வைத்த துணை முதல்வர் இந்த மாவட்ட காப்பாளராக செயல்படுவார். அரியலூர் மாவட்டத்திற்கான காவல்துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்றார்.

அரியலூர் எம்.எல்.. அமரமூர்த்தி பேசுகையில், துணை முதல்வர் மத்திய அரசிடம் பேசி அரியலூர்- தஞ்சைக்கு ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.விழாவில் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.. ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவி கொடியரசி, தா.பழூர் ஒன்றிய சேர்மன் கண்ணன், டிஆர்ஓ பிச்சை, தேளூர் ஊராட்சி தலைவர் காமராஜ், முன்னாள் எம்.பி. சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் திட்ட இயக்குநர் வசந்தி நன்றி கூறினார்.

Last Updated on Friday, 05 February 2010 06:24
 

மாநகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 04.02.2010

மாநகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

திருநெல்வேலி, பிப். 3: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

மாநகராட்சிப் பகுதியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி தொடக்கிவைக்கப்பட்ட பணிகள் விவரம்: தச்சநல்லூர் மண்டலத்துக்கு உள்பட்ட வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் முதல் கொக்கிரகுளம் ரோஸ் மகால் வரை ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார். மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன், மண்டலத் தலைவர்கள் பி. சுப்பிரமணியன், எஸ்.எஸ். முகம்து மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலப்பாளையம் மண்டலத்தில் அழகிரிபுரத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

காட்டு செக்கடித் தெருவில் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டிலும், ஆசூரா மேலத்தெருவில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டிலும் வடிகால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

புதிய பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க அடிகுழாய் அமைக்கும் இடத்தை மேயர் பார்வையிட்டார்.

மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், மாநகரப் பொறியாளர் கொ. பொ. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணன் நாயர் ஆகியோர் கலந்துகொண்டனர்

Last Updated on Thursday, 04 February 2010 11:08
 

ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்

Print PDF

தினமலர் 04.02.2010

ரூ.2 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்

செங்கல்பட்டு : இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்ள, செங்கல்பட்டு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. �ங்கல்பட்டு நகராட்சிக் கூட்டம், தலைவர் ஜெயா தலைமையில் நடந்தது. கடந்த 8 மாதங்களாக, நகராட்சிக் கூட்டம் நடக்காததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேறவில் லை.

அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கவுன்சிலர்கள், ஒற்றுமையாக கூட் டம் நடத்தி, ஒட்டுமொத்தமாக கிடப்பிலிருந்த, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர

Last Updated on Thursday, 04 February 2010 06:24
 


Page 119 of 160