Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

தர்மபுரி மாவட்டத்தில் இன்று வளர்ச்சிப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல்

Print PDF

தினமலர் 19.01.2010

தர்மபுரி மாவட்டத்தில் இன்று வளர்ச்சிப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடக்கும் அரசு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பல லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, பென்னாகரத்தில் அரசு திட்ட துவக்க விழா இன்று ஜன., 19ல் நடக்கிறது. அதற்காக சென்னையில் இருந்து வரும் துணை முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 9 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 55 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மற்றும் மாணவர் தங்கும் விடுதியை திறந்து வைக்கிறார். 43 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 4 மணிக்கு பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளி முள்ளுவாடி அண்ணாதுரை திடலில் நடக்கும் விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் கனகசபை வரவேற்கிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலர் சுப்புராஜ் திட்ட விளக்கவுரை அளிக்கிறார். கலெக்டர் அமுதா முன்னிலை வகிக்கிறார். பென்னாகரம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியும், மகளிர் குழுவினருக்கு கடன் உதவி வழங்கியும், புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் பேசுகிறார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அரசு நலத்திட்ட உதவி வழங்குகிறார். "108' ஆம்புலன்ஸ் சேவையையும் அவர் துவக்கி வைக்கிறார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கான நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். ஒகேனக்கல்லில் அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வு கூட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஸ்டாலின் வருகையொட்டி தர்மபுரி மற்றும் பென்னாகரம் பகுதியில் எஸ்.பி., சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி.,க்கள் பஞ்சவர்ணம் (பென்னாகரம்), சாகுல்ஹமீது (தர்மபுரி) உள்ளிட்ட மூன்று டி.எஸ்.பி.,க்கள் 25 இன்ஸ்பெக்டர்கள் 60 எஸ்..,க்கள், 470 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ள முக்கிய சந்திப்பு சாலைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 19 January 2010 06:48
 

குறு, சிறு தொழில்கள் மூலம் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர்

Print PDF

தினமணி 11.01.2010

குறு, சிறு தொழில்கள் மூலம் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர்

விருதுநகர், ஜன. 10: நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மூலம் சுமார் 6 கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மத்திய இணையமைச்சர் தின்ஷா ஜே. படேல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே ராமசாமிபுரத்தில் தீப்பெட்டிக் குழுமத்தின் பொதுப் பயன்பாட்டு மையத்தை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்துப் பேசியபோது, அமைச்சர் இதைத் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி மத்திய இணையமைச்சர் பேசியதாவது: நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிப்பதில் இரண்டாம் இடம் வகிக்கின்றன. இந்தத் துறையில் உள்ள 2.60 லட்சம் நிறுவனங்கள் மூலம் 6 கோடி பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

இந்தத் துறை கிராமப்புறம் மற்றும் சிறு நகர்ப்புறங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பை அளிப்பதுடன், இப் பகுதியில் பொருளாதாரம் மேம்பட ஒரு கருவியாக விளங்குகிறது. குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்களில் வளர்ச்சிக்காக தாராளமயம் மற்றும் உலகமயமாதல் ஆகியவற்றை மனதில் கொண்டு மத்திய அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியைச் சமாளிக்க தேசிய உற்பத்தி போட்டி திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

உலகச் சந்தையில் போட்டியைச் சமாளிக்க 11-வது ஜந்தாண்டுத் திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 தீப்பெட்டி குழுமப் பகுதிகளான குடியாத்தம், சாத்தூர், விருதுநகர், கழுகுமலை, கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் பொதுப் பயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பொதுப் பயன்பாட்டு மையத்துக்கும் ரூ. 1.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறு, சிறு நிறுவனங்கள் குழும வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப் பயன்பாட்டு மையம் அமைக்க 11 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அளிக்கப்பட்டுள்ள 11 திட்டங்களில் விருதுநகர் பொதுப் பயன்பாட்டு மையம் முதலில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதம் உள்ளவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் 3,537 தீப்பெட்டி உற்பத்தி மையங்கள் உள்ளன. மொத்த உற்பத்தியில் கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உற்பத்தி மட்டும் 39 சதவீதம். கையால் தீப்பெட்டி செய்யும் தொழில் மூலம் சுமார் 2 லட்சம் ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் என்றார் படேல்.

Last Updated on Monday, 11 January 2010 06:58
 

கொடைக்கானலை நவீனப்படுத்த ரூ.3.41 கோடியில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமலர் 08.01.2010

கொடைக்கானலை நவீனப்படுத்த ரூ.3.41 கோடியில் வளர்ச்சி பணிகள்

திண்டுக்கல் : கொடைக்கானலில் 3.41 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது.
மத்திய அரசு,சுற்றுலாத்துறை இணைந்து கொடைக்கானலில் சுற்றுலாவை வளர்க்க வசதியாக அடிப்படை வசதிகள் செய்ய மூன்று கோடியே 41 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள் ளன. நகராட்சி மூலம் 2 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா அமைத்தல், பிரையண்ட் பார்க் நடைபாதையில் டைல்ஸ் அமைத்தல், கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல், அண்ணாசாலை நடைபாதை திடல் அமைத்தல், நியான் விளக்குகள் அமைத்தல், கம்பி தடுப்புகள் அமைத் தல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

தோட்டக்கலைத்துறை மூலம் பிரையண்ட் பார்க் கில் கண்ணாடி மாளிகை அமைத்தல், ரோஜா தோட் டம் அமைத்தல், அண் ணாத்துரை சிலையை சுற்றி அல்லிதடாகம் அமைத் தல், தோட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுத்தல் பணிகள் நடக்கின்றன. வனத் துறை மூலம் குப்பை தொட்டி அமைத்தல்,குடிநீர் வசதி செய்தல், அபாய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைத்தல், சுற்றுச்சூழல் கையேடுகள் பயணிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

மஞ்சளாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் பேரிபால்ஸ் நீர்வீழ்ச்சி மேம்படுத்துதல், சிறிய நீர் வழிந்தோடிகள், பாலங் கள் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத் துள்ளதால் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.

Last Updated on Friday, 08 January 2010 08:02
 


Page 125 of 160