Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நல்லூர் நகராட்சி கூட்டத்தில் ரூ.1.83 கோடியில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல்

Print PDF

தினமலர் 08.01.2010

நல்லூர் நகராட்சி கூட்டத்தில் ரூ.1.83 கோடியில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல்

திருப்பூர் : நல்லூர் நகராட்சியின் சாதா ரண கூட்டத்தில், 1.83 கோடி மதிப்பிலான அடிப்படை வசதி களை மேம்படுத்த புதிய திட் டங்களுக்கும், ஒப்பந்தப்புள்ளி அறிவித்த திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு தீர் மானம் நிறைவேறியது. நல்லூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் பல் வேறு வளர்ச்சி திட்டங்கள் முன் மொழியப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களின் விபரம்: சென்னிமலைபாளையத்தில் 60 ஆயிரம் லிட்டரில் மேல் நிலைத் தொட்டி கட்ட 4.65 லட்சம் ரூபாய்; ஆர்.கே.கார்டன் மற்றும் நல்லூரில் ரேஷன் கடை கட்ட ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. எம்.பி., நிதியில் ஐந்து லட்சம் ரூபாயில், விஜயாபுரத்தில் இருந்து முதலிபாளையம் சிட்கோ வரை உள்ள ரோட்டினை புதுப் பிக்க அனுமதி வழங்கப்பட்டது. நகராட்சி எல்லைக்குள் காங் கயம் ரோட்டில் 70 தெருவிளக்கு கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அரசு மானியமாக 75 சதம் 37.50 லட்சமும், நகராட்சி பொது நிதியில் இருந்து 25 சதம் 12.50 லட்சமும் அனுமதிக்க தீர்மானம் நிறைவேறியது. ஆர்.வி.., நகரில் வடிகால் மற்றும் ரோடு வசதி மேம்படுத்த மூன்று லட்சம் ரூபாய்; ஏழாவது வார்டு கணபதிபாளையத்தில் 2.20 லட்சம்; 15வது வார்டு வி.ஜி.வி., கார்டனில் 5.90 லட் சம்; சந்திராபுரம் கிழக்கு வடக்கு வீதியில் 6.50 லட்சம்; 10வது வார்டு என்.பி., நகரில் ஐந்து லட்சம்; 12வது வார்டு காளி யப்பா நகர் இரண்டாவது வீதி யில் 4.10 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஏழாவது வார்டு அமர்ஜோதி பட்டத்தரசியம்மன் கார்டன் எட்டாவது வார்டு இந்திரா நகர், ராஜீவ்காந்தி நகர், 10வது வார்டு பாரதி நகர், பி..பி., நகர், பத்மினி கார்டன் பகுதிகளில் குடிநீர் குழாய் திட்டத்தை விரிவு படுத்த 2.65 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டது. செரங்காடு மூன்றா வது வீதியில் 7.50 லட்சம்; 13வது வார்டு ஜெய்நகர், ஐந்தாவது குறுக்கு வீதியில் 4.70 லட்சம் மதிப்பில் வடிகால் வசதி, ஆறா வது வார்டு மாரியம்மன் கோவில் வீதியில் தார்ரோடு அமைக்க 9.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மணியகாரம்பாளையம் பள் ளிக்கு அருகில் உள்ள கிணற் றுக்கு மண் கொட்டி நிரப்ப 1.50 லட்சம்; 13வது வார்டு எம்.சி., நகரில் கிணற்று நீர் குழாய் விரிவுபடுத்த 75ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

Last Updated on Friday, 08 January 2010 07:52
 

அரச்சலூர் பேரூராட்சியில் ரூ.4.30 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 07.01.2010

அரச்சலூர் பேரூராட்சியில் ரூ.4.30 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்கம்

ஈரோடு, ஜன. 6:ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சிப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.4.30 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரச்சலூர் நவரசம் கல்லூரி முன் ரூ.2 லட்சத்தில் வடிகால் வசதி, நல்லமங்காபாளையத்தில் ரூ.80 ஆயிரத்தில் நெடுங்கிணறு தடுப்புச் சுவர், மீனாட்சிபுரத்தில் ரூ.1.50 லட்சத்தில் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி ஆகியவை கட்டப்படுகிறது. இப்பணிகளை மொடக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி துவக்கி வைத்தார். அரச்சலூர் பேரூராட்சித் தலைவர் சுலோசனா சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் குணசேகரன், காங்கிரஸ் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், பேரூர் தலைவர் சூர்யாவடிவேல், காங். நிர்வாகிகள் சீதாபதி, பாலசுப்ரமணியம், ஞானசேகரன், பேரூராட்சி துணைத் தலைவர் குழந்தைசாமி, செயல் அலுவலர் தங்கவேல், கவுன்சிலர்கள் குப்புசாமி, கோமதி, ஆனந்தன், திமுக பேரூர் செயலர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 08 January 2010 07:53
 

மகாபலிபுரத்தை மேம்படுத்த ரூ.13 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 07.01.2010

மகாபலிபுரத்தை மேம்படுத்த ரூ.13 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி, ஜன.6:தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மகாபலிபுரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகம் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் 29 இடங்களை கண்டறிந்து அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அதன் மேம்பாட்டுக்காக பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மேம்பாட்டுக்காக சுற்றுலா அமைச்சகம் ரூ.13.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் சுற்றுலாத் திட்டங்களை மேற்கொள்வதற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் மெகா திட்டங்கள் உள்பட 106 திட்டங்களுக்கு ரூ.398.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 07 January 2010 10:40
 


Page 126 of 160