Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திருவண்ணாமலை நகராட்சியோடு 6 கிராம பஞ்., இணைப்பு

Print PDF
தினமலர் 31.12.2009

திருவண்ணாமலை நகராட்சியோடு 6 கிராம பஞ்., இணைப்பு

திருவண்ணாமலை : தி.மலை நகராட்சியோடு வேங்கிகால் உட்பட 6 கிராம பஞ்., இணைக்கப்படுகிறது. சட்டசபை தொகுதி சீரமைப்பால் உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்து ஒரு யூனியனை சேர்ந்த அனைத்து கிராம பஞ்.,களும் ஒரே சட்டசபை தொகுதிக்கு உட்பட்டதாக இருக்கும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தி.மலை நகராட்சியோடு வேங்கிகால், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், மேலத்திகான், நல்லவன்பாளையம் ஆகிய 6 கிராம பஞ்.,களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், வேங்கிகால் பஞ்., நகராட்சியோடு இணைக்க கூடாது என்று பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவின்படி வேங்கிகால், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், மேலத்திகான், நல்லவன்பாளையம் ஆகிய 6 கிராம பஞ்.,களையும் தி.மலை நகராட்சியோடு இணைக்கலாம் என்று கலெக்டரிடமிருந்து தி.மலை நகராட்சிக்கு இப்போது கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி கவுன்சில்கூட்டத்தின் அடிப் படையில் முடிவு செய்ய வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 31 December 2009 06:56
 

கும்பகோணம் நகராட்சி பகுதியில் ரூ.40 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமலர் 31.12.2009

கும்பகோணம் நகராட்சி பகுதியில் ரூ.40 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

கும்பகோணம் : கும்பகோணம் நகராட்சி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்நகராட்சியின் கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந் தது. ஆணையர் பூங்கொடி, நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்: நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட மானியத்துடன் கூடிய விகிதத்தில் கடன் வழங்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதனடிப்படையில் வீடு கட்ட கடன் வேண்டுவோர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலக்காவேரி காமராஜர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள பழைய சிதலமான கூரை கட்டிடத்தை ஏலம் விட்டு இடித்து அப்புறப்படுத்தப்படும். அதில் புதிய கட்டிடம், சைக்கிள் நிறுத்தும் கூடாரம், சுற்றுச்சுவர் உயர்த்துதல், சிறுநீர் கழிப்பி டம் கட்டும் பணி மற்றும் மராமத்து பணிகள் ரூ.24 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் செய்யப்படும். பெருமாண்டி சுடுகாட் டின் உட்புறத்தில் ரூ.4.50 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைக்கப்படும். காந்தியடிகள் சாலையில் அமைந்து உள்ள மார்னிங் ஸ்டார் பள்ளி அருகே மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் ரூ.85 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். முத்துக்கிருஷ்ணன் நகர், நாதன் நகர், ஆனைக்காரன் பாளையம் பகுதிகளில் தொடர் மழையால் பாதிக் கப்படுகிறது. எனவே மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் அமைப்பதென்ற தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறாக மொத்தம் ரூ.40 லட்சத்தில் நகரில் வளர்ச்சிப் பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி வரையிலான மெயின் லைனில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டுமென மத்திய அரசுக்கு நகராட்சி சார்பில் தீர்மானம் இயற்றி அனுப்ப வேண்டு மென கவுன்சிலர் லெட்சுமி நாராயணன் கொடுத்த கோரிக்கை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Last Updated on Thursday, 31 December 2009 06:45
 

ஊட்டியில் சுற்றுலா திட்டங்களுக்கு முன்னுரிமை: ஸ்டாலின் உத்தரவு

Print PDF

தினமலர் 31.12.2009

ஊட்டியில் சுற்றுலா திட்டங்களுக்கு முன்னுரிமை: ஸ்டாலின் உத்தரவு

ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டாலின் நேற்று காலை 10.30 மணிக்கு ஊட்டி தமிழகம் வழியாக காந்தல் பகுதிக்கு வந்தபோது, அப்பகுதி மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி சார்பில் ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தின் ஒரு பகுதியாக, காந்தல் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் நிறைவு பெற்றுள்ளது. அந்த திட்டம் குறித்து ஊட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரனிடம் கேட்டறிந்தார்.

பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்ததை அறிந்து, எவ்வித அறிவிப்பும், விழாவும் இல்லாமல் உடனடியாக காந்தல் பகுதிக்கு வந்து திறப்பு விழா நடத்தினார் ஸ்டாலின். குடிசை மாற்று திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து ஆலோசனை நடத்தனார். காந்தல் குருசடி காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 500க்கும் மேற்பட்ட புதிய வீடுகளை நேரடியாக ஆய்வு செய்தார். ஊட்டியில் அமைக்கப்பட வேண்டிய கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திட்டம் குறித்தும், அதற்காக தேர்வு செய்யப்பட்டு இடம் குறித்தும் நகர்மன்ற பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சுற்றுலா திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் அவர் ஆலோசனை வழங்கினார்

Last Updated on Thursday, 31 December 2009 06:43
 


Page 129 of 160