Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மாநகராட்சியின் பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் கூட்டம்

Print PDF

தினமணி 31.12.2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மாநகராட்சியின் பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் கூட்டம்

கோவை, டிச.29: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் துரிதப்படுத்த சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மன்றக் கூட்டத்தில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுத் தலைவர்கள் பேசியது:

வெ..உதயகுமார்: மாநகரப் பகுதியில் இருக்கும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்த வேண்டும். மாநாடு நடைபெறும் நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காந்திபுரத்தில் இருந்து கணபதி வரையிலும், பூ மார்க்கெட்டில் இருந்து தடாகம் சாலையில் மாநகர எல்லை வரையும் சாலையின் இருபகுதியிலும் நடைபாதை அமைக்க வேண்டும்.

மாநகராட்சியின் சார்பில் ஏராளமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சியின் பணிகளைக் கண்காணிப்பதற்குத் தனிக் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

பி.ராஜ்குமார் (அதிமுக): தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த பிரச்னையில் மன்ற உறுப்பினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட கட்சியின் பிரச்னையாக இருந்தாலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்துள்ளதால் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தி சாலையில் கணபதி பஸ் நிலையம் முதல் சரவணம்பட்டி காவல் நிலையம் வரை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறி வருகிறது. சாலை ஓரங்களில் தேங்கும் மணலை அப்புறப்படுத்துவதில்லை. இதனால் இரு சக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுகின்றன.மாநகரப் பகுதி முழுவதும் கொசுத் தொல்லை அதிகரித்துவிட்டது. வீரியம் மிகுந்த கொசு மருந்து அடிக்க வேண்டும்.

சி.பத்மநாபன் (சிபிஎம்): செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் 150 நாள்கள் தான் உள்ளன. அதற்குள் எந்தெந்த பணிகளைச் செய்ய முடியும், எந்த பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய மாநகராட்சி மன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். விதிமீறிய கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர வேண்டும். இதற்கு முந்தைய காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை துண்டு துண்டாக நின்று போய்விட்டன. வரும் காலங்களில் அதுபோன்று ஏற்படாமல் தவிர்க்க, அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.திருமுருகம் (காங்கிரஸ்): செம்மொழி மாநாட்டுக்காக மேற்கொள்ள இருக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். மன்றக் கூட்டத்தில் அனுமதி பெற்று பணிகளைத் துவங்குவது தாமதத்தை ஏற்படுத்தும். அவசர அவசியம் கருதி செய்ய வேண்டிய பணிகளை விரைவில் துவக்கலாம் என்றார்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:29
 

சென்னை பெருநகர மாநகராட்சி

Print PDF

தினகரன் 30.12.2009

சென்னை பெருநகர மாநகராட்சி

Swine Flu
சென்னை : காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, பெருநகர மாநகராட்சி உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 .கி.மீட்டராக விரிவடையும்.சென்னை மாநகராட்சி இப்போது 174 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட எல்லை இது. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அவற்றின் தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியுள்ளன. அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் வழங்கிவரும் சேவைகள் போதுமானதாக இல்லை.எனவே, சென்னைக்கு அருகில் மற்றும் தொடர்ச்சியாக அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, சென்னை மாநகராட்சியை விரிவாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, சென்னையை சுற்றி இரண்டு புதிய மாநகராட்சிகளை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதாகவும் அரசுக்கு தெரிவித்தது. எல்லா தரப்புகளையும் கலந்தாலோசித்து இரண்டு செயல்திட்டங்களை அரசின் இறுதி முடிவுக்கு இக்குழு பரிந்துரைத்தது.

ர் சென்னை பெருநகர் பகுதியின் 800 சதுர கி.மீ. பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சியின் பரப்பளவை விரிவாக்கலாம். அதை சென்னை பெருநகர மாநகராட்சி’ (கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்) என்று அழைக்கலாம் என்பது முதல் பரிந்துரை.ர் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மற்றும் ஆலந்தூர் நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி சென்னை மாநகராட்சி பரப்பளவை 426 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் செய்யலாம். ஆவடி (168 .கி.மீ.) மற்றும் தாம்பரம் (218 .கி.மீ.) ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என்பது இரண்டாவது பரிந்துரை.

இந்த பரிந்துரைகள் குறித்து அரசு மட்டத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் இரண்டாவது பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காரணம், பெரியதொரு மாநகராட்சியை அமைப்பதால், நன்மைகள் அதிகம் என்று அரசு கருதுகிறது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்க உள்ள பகுதிகள் சென்னைஎன்ற அடையாளத்தை பெறும். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவும். கட்டமைப்பு வசதிகளை ஒட்டுமொத்தமாக திட்டமிட முடியும். நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சரியான அளவில் பயன்படுத்தி வளர்ச்சியை திட்டமிடலாம். இந்தியாவில், மக்கள் தொகை அடிப்படையில் நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தரவரிசைப்படுத்துதல், நிதி முதலீடுகளை ஈர்ப்பதற்கு முக்கியம் என்று அரசு கருதுவதால், முதல் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை ஆவடி, சென்னை தாம்பரம் என்ற புதிய மாநகராட்சிகள் முடிவை தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படாத வகையில் பின்னர் அறிவிப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இப்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு முடிவடைந்தவுடன், புதிய மாநகராட்சிகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

விரிவுபடுத்தப்பட உள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிக்கப்படும். இப்போதைய வார்டுகளும் மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். வார்டுகள், மண்டலங்கள் பிரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரி நியமிக்கப்படவும், ஆறு மாதத்திற்குள் அவர் அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.இப்போதுள்ள சென்னை மாநகராட்சியுடன் இணையும் நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகள் விவரம்: கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம்&புழுதிவாக்கம் ஆகிய 9 நகராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைகிறது. சின்ன சேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய 8 பேரூராட்சிகள். இடையஞ்சாவடி (மீஞ்சூர் ஒன்றியம்), சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம் (புழல் ஒன்றியம்), நொளம்பூர், காரம்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம் (வில்லிவாக்கம் ஒன்றியம்), முகலிவாக்கம், மணப்பாக்கம் (குன்றத்தூர் ஒன்றியம்), கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி (செயின்ட் தாமஸ் மவுன்ட் ஒன்றியம்) ஆகிய 25 ஊராட்சிகள்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:54
 

செம்மொழி மாநாடுக்கு ரூ.112 கோடியில் பணிகள் : கோவை மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 30.12.2009

செம்மொழி மாநாடுக்கு ரூ.112 கோடியில் பணிகள் : கோவை மாநகராட்சி திட்டம்

கோவை : உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ரூ.112 கோடியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலரும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை நகரில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படும் பணிகள் பற்றி, விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கும் கூட்டத்துக்குப் பின்பே, விளக்கம் தர முடியும் என்று மேயர் வெங்கடாசலம் பதிலளித்தார். ஆனால், நேற்று மாலையில் கவுன்சில் கூட்டம் முடிவதற்கு முன், அந்த கூட்டத்தின் கடைசி தீர்மானமாக செம்மொழி மாநாட்டுப் பணிகள் தொடர்பான தீர்மானத்தை கவுன்சிலர்களுக்குத் தரப்பட்டு, அதற்கு அனுமதியும் பெறப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள பணிகள் விபரம்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சி மூலமாக 112 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்படவுள்ளது. பள்ளி கட்டடங்கள், நிர்வாக கட்டடங்கள், மத்திய, நகர பஸ் ஸ்டாண்ட்களை மேம்படுத்துதல், புதிய பூங்காக்கள் அமைத்தல், புதிய தெரு விளக்கு கம்பங்கள் அமைத்தல், உயர் மட்ட கோபுர விளக்குகள் அமைத்தல், மாநாடு மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் குடிநீர் வசதிகள் செய்ய, மாநகராட்சி பொது நிதியில் 23 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது.சாலைகள் புதுப்பிப்பு: பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள், மாநகராட்சி திருமண மண்டபங்களை மேம்படுத்துதல், தற்காலிக துப்புரவுப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், புதிதாக நடமாடும் கழிவறை வாகனங்கள் வாங்குதல், பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்துதல், பிரதான ரோடுகளில் இருந்து மாநாடு நடக்கும் இடத்துக்கு செல்லும் இணைப்பு மற்றும் அணுகு சாலைகளைப் புதுப்பிக்க 33 கோடியே 17 லட்ச ரூபாய் செலவிடப்படும்.இந்த பணிகள் அனைத்தும் அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

தனியார் பங்களிப்பு: போக்குவரத்து திடல்கள் அமைத்தல், புதுப்பித்தல், மேட்டுப்பாளையம் ரோடு, அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோடுகளில் பாதசாரி நடைபாதைகள் அமைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் கட்டண முறைக் கழிப்பிட மேம்பாட்டுப் பணிகள், 56கோடியே 6 லட்ச ரூபாய் செலவில், பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.அவினாசி ரோட்டில் தனியார் பங்களிப்புடன் 30 கோடியே 65லட்ச ரூபாய் மதிப்பில் நடைபாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. கால அவகாசம் குறைவாக இருப்பதால், தனியார் பங்களிப்பைத் தவிர்த்து மாநகராட்சி பொது நிதியில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன், ரேஸ்கோர்ஸ்சில் நடைபாதை பூங்காவுடன் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தேசமாக 2 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தவும் மன்றத்தின் ஒப்புதல் கேட்கப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொண்டு, அதன்பின், அரசிடமிருந்து மானியமாக கேட்டுப் பெறலாம் என்று கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.

 


Page 131 of 160