Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வலங்கைமான் பேரூராட்சியில் ரூ. 6 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 25.11.2009

வலங்கைமான் பேரூராட்சியில் ரூ. 6 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

நீடாமங்கலம்,நவ. 24: வலங்கைமான் பேரூராட்சியில் 12வது மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று பேரூராட்சித் தலைவர் க. குமரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியின் மூலம் வலங்கைமான் பேரூராட்சியில் செப்பளம் குளம் சமன்படுத்தும் பணி, வரதர் குளத் தெரு தார்ச் சாலை அமைக்கும் பணி, உப்புக்காரத் தெரு வடிகால் சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அவர்.

அப்போது, செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி, துணைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், 2-வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:38
 

ரூ.10 கோடியில் திட்டப் பணிகள் திறப்பு

Print PDF

தினமணி 25.11.2009

ரூ.10 கோடியில் திட்டப் பணிகள் திறப்பு

செங்கல்பட்டு, நவ. 24: செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் பகுதியில் ரூ.10 கோடியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் நிறைவுபெற்றதையடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இதற்கான விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் சசிகலா ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி, செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் கோபிகண்ணன், ரகுபதி, மீனா, அரிநாதன், பிரகாஷ், கஸ்தூரி, பன்னீர், அமுதா, ஜோதீஸ்வரி, ரவிக்குமார் உள்ளட்டோர் கலந்துகொண்டனர்.

ரூ.5.42 கோடியில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை நகர்மன்றத் தலைவர் சசிகலா ஆறுமுகம் திறந்துவைத்தார்.

ரூ.2.98 கோடியில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி திறந்துவைத்தார்.

ரூ1.7 கோடியில் அமைக்கப்பட்ட சாலையை திருக்கச்சூர் ஆறுமுகம் எம்.எல்.. திறந்துவைத்தார். இதே போல ரூ.35 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 கோபுர விளக்குகள், சாலை நடுவில் பொருத்தப்பட்டுள்ள 38மின் விளக்குகளின் சேவைகளும் தொடங்கிவைக்கப்பட்டன.

இவை மட்டுமல்லாமல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் நகர்மன்றத் தலைவி கூறினார்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:29
 

புதை சாக்கடை இணைப்புப் பணிகளை துரிதப்படுத்த புதிய நடைமுறை

Print PDF

தினமணி 23.11.2009

புதை சாக்கடை இணைப்புப் பணிகளை துரிதப்படுத்த புதிய நடைமுறை

தஞ்சாவூர், நவ. 22: தஞ்சாவூர் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், இப்பணிகளை துரிதப்படுத்த புதிய நடைமுறைகளை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவர நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நகராட்சிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், தஞ்சாவூர் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிப்பதிலும், இணைப்புகள் வழங்குவதிலும் பணிகள் மிகவும் மந்தமாக இருப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநரால் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் நகராட்சியில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் புதை சாக்கடை இணைப்பு தொடர்பான பணிகளை 100 சதம் நிறைவேற்ற காலக் கெடு நிர்ணயித்துள்ளனர். மேலும், டிசம்பர் 30-ம் தேதிக்குள் 30,000 புதை சாக்கடை இணைப்புகளுக்கு வைப்புத் தொகை மற்றும் இணைப்பு கட்டணம் வசூல் செய்து அத்தொகையிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நகராட்சி பங்கு தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புதை சாக்கடைத் திட்டத்தில் அதிகளவில் பங்கு பெறும் வகையில் தற்போதுள்ள இணைப்புக் கட்டணத்தை ரூ. 500-லிருந்து ரூ. 100-ஆக நகர்மன்ற ஒப்புதலுடன் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் அந்தந்த நகர்மன்ற உறுப்பினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வுப் பேரணி நடத்தி, அனைத்து குடியிருப்புகளுக்கும் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு நிர்வாக இயக்குநர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

டிசம்பர் மாதத்திற்குள் 100 சத இலக்கை அடைய நகராட்சியில் பணிபுரியும் அனைத்து வெளிப்புற அலுவலர்கள், பணியாளர்களையும் இப்பணிகளில் முழுமையாக ஈடுபடுத்ததவும் நிர்வாக இயக்குநர் அனுமதித்துள்ளார்.

இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து, புதை சாக்கடை இணைப்புகள் பெற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளம்பரங்கள் மேற்கொள்ளவும் ரூ. 50,000 நிதி ஒதுக்க நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், புதை சாக்கடை இணைப்புக் கட்டணததை நவம்பர் முதல் ரூ. 100 ஆக குறைக்கவும் நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெறும் நகர்மன்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவது குறித்து தெரியவரும்.

தஞ்சாவூர் நகரில் பல இடங்களில் இணைப்பு பெற்ற புதை சாக்கடைகள் முறையாக செயல்படாமல் இருப்பதும், இணைப்புக்கு கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பான புகார்களும் எழுந்துவந்த நிலையில், புதை சாக்கடை இணைப்புப் பணிகள் மந்தமாக இருப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் தஞ்சாவூர் நகராட்சியை குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பான தீர்மானங்கள் நகராட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Last Updated on Monday, 23 November 2009 06:42
 


Page 138 of 160