Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மதுரையில் வளர்ச்சிப் பணிகள்: மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 29.09.2009

மதுரையில் வளர்ச்சிப் பணிகள்: மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு

மதுரை, செப். 28: மதுரையில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு..அழகிரி திங்கள்கிழமை திடீர் ஆய்வுசெய்தார்.

மதுரை பெரியார் பேருந்துநிலையப் பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுவரும் நவீன கழிப்பறைக்கான கட்டுமானப் பணியை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து நேதாஜி சாலைக்கு சென்று அங்கிருந்த போக்குவரத்துக் காவலரை அழைத்து, தீபாவளி நெரிசலைக் கருத்தில்கொண்டு இப்பகுதியில் போக்குவரத்தை சீராக வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

பின்னர், தெற்குமாசி வழியாக விளக்குத்தூண் வந்து அப்பகுதியில் போக்குவரத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, வெங்கலக்கடைத் தெரு வந்து நகைக்கடை பஜார் வழியாக மாநகரக் காவல்துறை ஆணையர் அலுலகத்துக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையைப் பார்வையிட்டார்.

அப்போது அங்குள்ள காவல்துறை அதிகாரிகளை அழைத்து இப்பாதை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக உள்ளதா என்று கேட்டறிந்தார்.

மேலும்,புதுமண்டபம் சென்று அங்குள்ள குன்னத்தூர் சத்திரத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள வணிக வளாகம் குறித்து பொறியாளர் அரசிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கு வந்து அங்கு கட்டப்படவுள்ள நவீன வாகன நிறுத்துமிடத்தை ஆய்வுசெய்தார்.

கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்தை ஆய்வுசெய்த பின்னர், மாட்டுத்தாவணி அருகே புதிய சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்படும் பணியை பார்வையிட்டார்.

அப்போது அங்குள்ள பொறியாளரிடம் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Last Updated on Tuesday, 29 September 2009 06:22
 

'அண்ணா நூற்றாண்டு விழா: "காஞ்சிக்கு ரூ.6.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்'

Print PDF
தினமணி 25.09.2009

'அண்ணா நூற்றாண்டு விழா: "காஞ்சிக்கு ரூ.6.5 கோடியில் வளர்ச்சிப் பணிகள்'

காஞ்சிபுரம்,செப்.24: காஞ்சிபுரம் நகராட்சியில் ரூ. 6.50 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ராவிடம் வியாழக்கிழமை ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவர் பிறந்து, வாழ்ந்த இடமான காஞ்சிபுரத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்தேன். நகராட்சியில் உத்தேசமாக ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

வளர்ச்சிப் பணிகளாக, காந்தி சாலை அழகுபடுத்தப்படும்; வரதராஜ பெருமாள் கோயிலில் நவீன சிமென்ட் தரை அமைக்கப்படும்; ரங்கசாமி குளம், சர்வ தீர்த்த குளம் ஆகியவை மேம்படுத்தப்படும்; எல்லப்ப நகர், கேஎம்பி நகர் பூங்காக்கள் மேம்படுத்தப்படும்; ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் மேம்படுத்தப்படும்.

மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.அவை முதல்வரிடம் எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Last Updated on Friday, 25 September 2009 06:18
 

கருமத்தம்பட்டி பேரூராட்சில் வளர்ச்சி பணிகள்

Print PDF

தினமலர் 24.09.2009

 


Page 146 of 160