Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ராமநாதபுரத்தில் ரூ.50 லட்சத்தில் "வாக்கர்ஸ்' பூங்கா : நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர்         31.08.2012

ராமநாதபுரத்தில் ரூ.50 லட்சத்தில் "வாக்கர்ஸ்' பூங்கா : நகராட்சி தலைவர் தகவல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் தினமலர் நகர் அருகே சிதம்பரம்பிள்ளை ஊரணியில் 50 லட்ச ரூபாயில் "வாக்கர்ஸ் பார்க்' அமைக்கப்பட உள்ளது. இதில் சிறுவர் பூங்கா, நடைபயிற்சி பாதை, அலங்கார விளக்குகள், டூவீலர் ஸ்டாண்ட், கழிப்பறை உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பாதாள சாக்கடை திட்டத்திற்கு, வீடுகள் தோறும் மனித இறங்கு குழிகளிலிருந்து வீட்டிற்கு செல்லும் இணைப்பு தொட்டிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மனித இறங்கும் குழிகளில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டு, இணைப்பு தொட்டிகள் அமைக்கும் பணிமுழுமையடைந்தவுடன், திட்டம் செயல்பட துவங்கிவிடும், என நகராட்சி தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் தெரிவித்தார்.
 

வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துங்கள்:மாநகராட்சிக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

Print PDF

தினமலர்         29.08.2012

வளர்ச்சி பணியில் கவனம் செலுத்துங்கள்:மாநகராட்சிக்கு எம்.எல்.ஏ., அறிவுரை

திருப்பூர்:""மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. நிர்வாகம், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேலு தெரிவித்தார்.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., தங்கவேலு, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இலவச பட்டா கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. அதுதவிர, எம்.எல்.ஏ., நிதி, மாநகராட்சி, மின் வாரியம், குடிமைப்பொருள் வழங்கல் துறை, போக்குவரத்து துறை, சுகாதார துறை, வீட்டு வசதி வாரியம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தன. அதிகபட்சமாக, அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து பெற்ற 85 மனுக்கள் மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்பட்டன.தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்கள், கட்டடங்களின் மீது செல்லும் உயரழுத்த ஒயர்கள், மோசமான நிலையில் உள்ள மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் பழுது போன்ற புகார் மின்வாரிய அலுவலரிடம் அளிக்கப்பட்டது. மினி பஸ், ரேஷன் கடைபிரிப்பு, பொருட்கள் முறையாக வழங்காமை என ஏராளமான மனுக்கள், துறை வாரியாக எம்.எல்.ஏ., நேரடியாகச் சென்று உரிய அதிகாரிகளிடம் வழங்கினார். வருவாய்த்துறை குறித்த மனுக்கள், தாசில்தார் பாலனிடம் நேற்று அளிக்கப்பட்டன.

எம்.எல்.ஏ., தங்கவேலு கூறியதாவது:பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு, வரிசை எண் அளித்து, துறை அலுவலர் மற்றும் துறை தலைவர் மற்றும் எனக்கு ஒரு பிரதி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளும் பணிகள் தேர்வு செய்ய வழி கிடைத்தது.வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதியை பொறுத்தவரை மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் குடிநீர் சப்ளையில் இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டும். நிதியுதவி திட்டங்களில் வறுமைக்கோடு எண் வழங்க வேண்டும், என்றார்.
Last Updated on Thursday, 30 August 2012 09:53
 

வடக்கு டெல்லி மாநகராட்சி வார்டு மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடியாக உயர்வு

Print PDF

தினகரன்                      25.08.2012

வடக்கு டெல்லி மாநகராட்சி வார்டு மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடியாக உயர்வு


புதுடெல்லி: வடக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த தகவலை நிலைக் குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்தார். டெல்லி மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு டெல்லி மாநகராட்சிகளாக இப்போது 3 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. தெற்கு மற்றும் வடக்கு மாநகராட்சிகளில் தலா 104 வார்டுகளும் கிழக்கு டெல்லி மாநகராட்சியில் 64 வார்டுகளும் உள்ளன.   புதிய மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்று 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.இந்த நிலையில் வடக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நேற்று அந்த மாநகராட்சியின் திருத்தப்பட்ட பட்ஜெட்டை வெளியிட்டார்.

 அப்போது அவர் கூறியதாவது:ஒரே மாநகராட்சியாக இருந்தபோது செலவு செய்த தொகை, 3 மாநகராட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனால் வார்டுகளுக்கு ஒரே அளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் இந்த மாநாகராட்சியின் நிதியினை பெருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் மக்கள் மீது புதிதாக வரி விதிக்கவும் இந்த மாநகராட்சி விரும்பவில்லை. வடக்கு டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 104 வார்டுகளுக்கும் இப்போது வார்டு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இந்த நிதியை உயர்த்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1.05 கோடியாக உயர்த்தப்படுகிறது.

இதன்மூலம் இனிமேல் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் வார்டு மேம்பாட்டு பணிக்காக இனிமேல் ரூ.1.05 கோடி செலவு செய்ய சிபாரிசு செய்யலாம். அதேபோல இந்த மாநகராட்சியில் இருக்கும் தெரு விளக்குகளை சீரமைக்க ஒவ்வொரு வார்டுக்கும் ரூ.5 லட்சம் அனுமதிக்கப்படுகிறது.இதுவரை இந்த மாநகராட்சியில் 700 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.  இந்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படுகிறது. சாத் பூஜைக்காக இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.இவ்வாறு யோகேந்தர் சந்தாலியா கூறினார். இந்த திருத்தப்பட்ட பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் கோயல் (காங்கிரஸ்) கூறுகையில், ‘பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. மக்களுக்கு உதவாத பட்ஜெட். ஓய்வூதியம் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. தேர்தலை மனதில் கொண்டு போடப்பட்டுள்ள பட்ஜெட் இது’ என்றார்.
 


Page 25 of 160