Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வளர்ச்சிப் பணிகள்: மாநகர மேயர் ஆய்வு

Print PDF

தினமணி             25.08.2012

வளர்ச்சிப் பணிகள்: மாநகர மேயர் ஆய்வு

திருச்சி, ஆக. 24: திருச்சி மாநகராட்சி அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரியமங்கலம் கோட்டம் 26-வது வார்டு காஜாபேட்டை தொடக்கப் பள்ளிக் கட்டடம் பழுதுநீக்கம் செய்ய வேண்டிய பணிகள், சங்கிலியாண்டபுரம் முக்கிய சாலை சந்திப்பில் மேற்கொள்ள வேண்டிய சாக்கடை வடிகால் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

பொன்மலைக் கோட்டம் 43-வது வார்டு செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு வளாகத்தில் சமுதாயக்கூடம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்காக ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை, காஜா நகரில் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், 42-வது வார்டு சுந்தர்நகரில் நடைபெற்ற ரூ. 4 லட்சத்தில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணி, கிருஷ்ணமூர்த்தி நகரில் சாலை, மழைநீர் வடிகால் மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.கோ-அபிஷேகபுரம் கோட்டம் 54-வது வார்டில் ராமலிங்கநகர் 1-வது சாலை மற்றும் சாக்கடை நீர் வடிகால் மேம்பாடு செய்தல், நெசவாளர் காலனி, களத்துமேடு பகுதிகளில் சாலை மேம்பாடு செய்தல் ஆகியவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.இந்த ஆய்வின்போது துணை மேயர் ம. ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் ஜெ. சீனிவாசன், என். மனோகரன், ஆர். ஞானசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Saturday, 25 August 2012 10:35
 

விழுப்புரம் நகராட்சியில் முதல்வர் ஜெ., உத்தரவுபடி வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமலர்              24.08.2012

விழுப்புரம் நகராட்சியில் முதல்வர் ஜெ., உத்தரவுபடி வளர்ச்சிப் பணிகள்

விழுப்புரம்:முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளவாறு விழுப்புரம் நகராட்சியில் மக்களின் தேவையறிந்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் பாஸ்கரன் பேசினார்.விழுப்புரம் நகராட்சியின் சாதாரனக் கூட்டம் சேர்மன் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.

நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன், பொறியாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு விழுப்புரம் நகர வளர்ச்சிப் பணிக்கு ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டம் 2012-13ம் ஆண்டிற்காக 3 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெ., விற்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் பின் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராமதாஸ், செந்தில், ஷாகுல் அமீது, செந்தில்குமார், ராஜா, மணவாளன், நாராயணசாமி, சேகர், ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் வார்டு பகுதிகளில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகள், குடிநீர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் பஸ் நிலையத்தில் கட்டணம் வசூல் செய்தல், நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக சேர்மன் பாஸ்கரன் பேசியதாவது:கவுன்சிலர்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சியுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 வார்டுகளுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்படும்.

மக்களின் தேவையறிந்து அரசு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் குறைகளை தீர்க்க வேண்டும் என முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப விழுப்புரம் நகராட்சி சிறப்பாக செயல் படும். இவ்வாறு சேர்மன் பாஸ்கரன் பேசினார்.

 

மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு

Print PDF

தினமலர்     23.08.2012

மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு

மதுரை:மதுரை மாநகராட்சி மூலம், ரூ.2.13 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்களை, அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்து, போட்டோ கண்காட்சியை பார்வையிட்டார்.மத்திய, மாநில சுற்றுலாத்துறை நிதி உதவியுடன், பெரியார் பஸ் ஸ்டாண்ட் கோட்டைச்சுவர் பூங்கா, மீனாட்சி பூங்கா, திருமலை நாயக்கர் மகால் பூங்காக்கள், புதுப்பிக்கப்பட்டன. இவற்றின் திறப்பு விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கமிஷனர் நந்தகோபால், துணை மேயர் கோபாலகிருஷ்ணன், மண்டலத்தலைவர் சாலைமுத்து, வேலைக்குழுத் தலைவர் கண்ணகி, நகர் பொறியாளர் மதுரம், நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 26 of 160