Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

நகர்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.750 கோடி : ஜெ. அறிவிப்பு

Print PDF

தினகரன்   08.08.2012

நகர்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.750 கோடி : ஜெ. அறிவிப்பு


 
சென்னை: ஒருங்கிணைந்த   நகர்புற   வளர்ச்சி   திட்ட   பணிகளுக்கு,   ரூ.750 கோடி நிதி ஒதுக்கி முதல்வர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.   சென்னையை   தவிர   மற்ற  மாநகராட்சி  மற்றும் நகராட்சிகளுக்கு,  ரூ.500  கோடி  ஒதுக்கப்படும்  என்று  ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.  மேலும் பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு, ரூ.250 கோடி ஒதுக்கப்டும்   என்றும்  அறிவித்துள்ளார். 15 பேரூராட்சிகளுக்கு அலுவலக கட்டிடம் கட்ட, தலா 40 லட்சம் ரூபாய் வீதம்  ரூ.6 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளதாகவும், ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 

ஸ்ரீபெரும்புதூரை துணை நகரமாக மாற்றும் திட்டத்திற்கு டெண்டர் : ரூ.101.37 கோடியில் பணிகள்

Print PDF

தினமலர்                    07.08.2012

ஸ்ரீபெரும்புதூரை துணை நகரமாக மாற்றும் திட்டத்திற்கு டெண்டர் : ரூ.101.37 கோடியில் பணிகள்

ஸ்ரீபெரும்புதூர் :  ஸ்ரீபெரும்புதூரை,   சென்னைக்கு  துணை நகரமாக  மாற்றும் வகையில், 101.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டு உள்ளது.ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1944ம் ஆண்டு முதல் முதல்நிலை பேரூராட்சியாக இருந்தது. தேர்வு நிலை பேரூராட்சியாக, 1968ம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. தற்போது, பேரூராட்சிக்கு உட்பட்ட 19.39 சதுர கி.மீ., பரப்பளவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

அசுர வளர்ச்சி ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள, 450 தொழிற்சாலைகளில், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.இதனால், தங்கும் விடுதிகள் முளைத்து உள்ளன. தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தற்காலிகமாகவும், நூற்றுக்கணக்கானோர் நிரந்தரமாகவும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.குடியிருப்புகள் அதிகரித்து உள்ளதால், குடிநீர் வழங்கல் போதுமானதாக இல்லை. புதிதாக உருவான குடியிருப்புகளில், சாலை, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.இதனால், குடிநீர் ஆதாரமாக விளங்கிய நரசிங்ககுளம், இளநீர்குளம், தெப்பக்குளம் ஆகியவை கழிவுநீர் குளங்களாக மாறி விட்டன.இதை தடுக்கவும, சுகாதாரத்தை பாதுகாக்கவும், பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, பாதுகாக்கப் பட்ட குடிநீர், திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப் பட்டது.ஐந்தில் ஒன்றுமத்திய அரசு, நாட்டில் உள்ள பேரூராட்சிகளில், ஐந்து பேரூராட்சிகளை தேர்வு செய்து, அவற்றை துணை நகரமாக மாற்ற முடிவு செய்து, அவற்றின் வளர்ச்சி திட்டங்களுக்காக, 500 கோடி ரூபாயை ஒதுக்கியது.

இவற்றில் ஒன்றாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு, அங்கு நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் செய்ய, கடந்த 2009ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப் பட்டது.இதையடுத்து, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்களை செயல்படுத்த, 101.37 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட வரைபடம் தயாரிக்கப் பட்டது.இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், மதிப்பீட்டில் 80 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் மாநில அரசு, 10 சதவீதம் பேரூராட்சி வழங்கும் என, முடிவாகி உள்ளது.நிதி ஒதுக்கீடுமுதல்கட்டமாக, 10 சதவீதம் தொகையை, மத்திய அரசு வழங்கி உள்ளது. சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் மூலம், பணிகள் செய்ய டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி அளிக்க, அடுத்த மாதம் 4ம் தேதி வரை, கால அவகாசம் அளிக்கப் பட்டு உள்ளது.இது குறித்து, பேரூராட்சி செயல் அலுவலர், சம்பத் கூறுகையில்,""பேரூராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மேற்கொள்ள, அரசு ஒப்புதல் கிடைத்து உள்ளது. பாதாள சாக்கடை, குடிநீர் பணியை, சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் செயல்படுத்த உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம், பேரூராட்சி மூலம் செயல்படுத்தப் படும்,'' என்றார்.

 

"மெகா சிட்டி' இரண்டாம் கட்ட பணிக்கு தயாராகுது மாநகராட்சி :கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும்

Print PDF

தினமலர்                     06.08.2012       

"மெகா சிட்டி' இரண்டாம் கட்ட பணிக்கு தயாராகுது மாநகராட்சி :கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும்

சென்னை : சென்னை விரிவாக்கப் பகுதிகளை மேம்படுத்தும் வகையில், பெருநகர வளர்ச்சித் திட்டத்தின்படி (மெகா சிட்டி), இரண்டாம் கட்ட பணிக்கு மாநகராட்சி தயாராகி வருகிறது. மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு கூடுதல் நிதி கிடைக்கும் என தெரிகிறது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட எட்டு மண்டலங்களிலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், "சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம்' (மெகா சிட்டி) ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விரிவாக்க பகுதிகளில், சாலை, மழை நீர் கால்வாய், தெரு விளக்கு, நடை பாதை, பஸ் நிழற்குடைகள், வழி காட்டும் பெயர் பலகைகள் அனைத்தும், ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ளவும் மாநகராட்சிக்கு வலியுறுத்தியது. கூடுதல் நிதி கடந்த ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், மாநில அரசு, 500 கோடி ரூபாயை ஒதுக்கியது.இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கும், 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அரசாணை சென்னைக் குடி நீர் வாரியம், திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருவதால், கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த தொகையை விட, குறைவானதே போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு, இத்திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டிற்கு, கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ""மெகா சிட்டி திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி கிடைக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே, மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில், ஒருங்கிணைந்த பணிகளை துவக்கியுள்ளது. அதன் இணைப்பாக, இரண்டாம் கட்ட பணிக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு, தாமதமின்றி பணிகளை துவக்க மாநகராட்சி தயாராகி வருகிறது,'' என்றார்.

Last Updated on Tuesday, 07 August 2012 06:13
 


Page 28 of 160