Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் ரூ85 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணி

Print PDF

தினகரன்            10.12.2010

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் ரூ85 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணி

தொட்டியம், டிச. 10: தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவி சுதா தலைமை வகித்தார். துணை தலைவர் சொர்ணாம்பிகை, செயல் அலுவலர் சேகர், உதவியாளர் குணசேகரன், கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வரி மானிய திட்டத்தில் மேல தவிட்டுப்பாளையம் மயானம் சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ5 லட்சத்திற்கும், அலுவலக கட்டிட பராமரிப்பு பணிக்கும், சிறப்பு சாலை திட்டம் 2010&11 ஆண்டிற்கு 2 சிப்பம் (பேக்கேஜ்) படி ரூ80 லட்சம் செலவில் தார் சாலை, சிமென்ட் சாலை பணிகள் கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் சரசு, கோவிந்தம்மாள், சுப்பிரமணியன், முருகேசன், சந்திரசேகர், மொமலா, வேலு, மனோகரன், .சாந்தி, கு.சாந்தி, பிரகாசம், இந்திரகாந்தி, தாமோதரன் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநகரில் வீட்டு வசதி வாரியம் மூலம் துணை நகரங்கள் அமைக்கத் திட்டம் ஜனநெரிசல் கட்டுப்படுத்த நடவடிக்கை

Print PDF

தினகரன்                10.12.2010

மாநகரில் வீட்டு வசதி வாரியம் மூலம் துணை நகரங்கள் அமைக்கத் திட்டம் ஜனநெரிசல் கட்டுப்படுத்த நடவடிக்கை

ஈரோடு, டிச. 10: ஈரோடு நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றது. இருப்பினும் ஏற்கனவே இருந்த நகராட்சியில் இருந்த அதே 45 வார்டுகளுடன் மட்டுமே ஈரோடு மாநகராட்சி இயங்கி வருகிறது. ஏற்கன வே திட்டமிட்டபடி அருகாமையிலுள்ள சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் ஆகிய நகராட்சிகள், பெரியஅக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், திண்டல், எல்லப்பாளையம், கங்காபுரம், முத்தம்பாளையம், வில்லரசம்பட்டி ஆகிய ஊராட்சி களுடன் ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மாற்றியமைக்கும் வகையில் மாநகர வடிவமைப்பு திட்டத்தின் மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோட்டை சுற்றி லும் துணை நகரங்கள் அமைக்கும் வகையில் குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கையில் வீட்டுவசதி வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வளர்ந்து வரும் ஈரோடு நகரில் எதிர்காலத்தில் துணைநகரங்கள் அமைக்கும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பே சம்பத்நகர், முத்தம்பாளையம், மாணிக்கம்பாளையம், பெரியார்நகர் போன்ற பகுதிகளில் காலி இடங்களை வீட்டுவசதி வாரியம் மூலம் விலை கொடுத்து வாங்கி கையகப்படுத்தியது. தற்சமயம் இப்பகுதிகளில் மாடி குடியிருப்பு வீடுகள் அதிகளவில் கட்டி அவற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காலி வீட்டுமனைகளும் வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் சம்பத்நகர், மாணிக்கம்பாளையம், பெரியார்நகர் பகுதிகளில் வாரியம் மூலம் அனைத்து வீடுகளும், வீட்டுமனைகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டன. ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் தற்சமயம் பேஸ்& 5 வரையிலும் குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டு அவற்றை உரிய மனைதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பேஸ்& 6, பேஸ்&7 மற்றும் பேஸ்&8‘ ஆகிய மூன்று பகுதிகளிலும் வீட்டு வசதி வாரியத்திற்கு

 

ரூ7 கோடி செலவில் அமைப்பு வேளச்சேரி ஏரியில் படகு குழாம்

Print PDF

தினகரன்               10.12.2010

ரூ7 கோடி செலவில் அமைப்பு வேளச்சேரி ஏரியில் படகு குழாம்

சென்னை, டிச.10: வேளச்சேரி ஏரியை சீரமைப்பதற்காக மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர், மேயர் கூறியதாவது:

வேளச்சேரி ஏரியை அழகுபடுத்தி சுற்றுலா தலமாக உருவாக்குவதற்காக துணை முதல்வர் மு..ஸ்டாலின், மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதன்படி, இந்த ஏரியை அழகுபடுத்த தனியார் துறையிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரி 55 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதில் 6 ஏக்கரில் குடியிருப்புகள் உள்ளன. அதனை தவிர்த்து 49 ஏக்கரில் ஏரியை து£ய்மைப்படுத்தி, அழகுபடுத்தப்படும். ஏரிக்கரையில் நடைபாதை, பூங்கா, இருக்கைகள், வாகனம் நிறுத்து இடம் ஆகியவை அமைக்கப்படும். இதுதவிர சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் அமைக்கப்படும். ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலையும் அகலப்படுத்தப்படும்.

மேலும், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ராம் நகர், அரசு குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவு நீர் வேளச்சேரி ஏரியில் கலக்கிறது. இதை தடுக்க கழிவு நீர் ஏற்று நிலையம் ரூ2 கோடி செலவில் அமைக்கப்படும். ஆக

ரூ7 கோடி செலவில் சென்னை மாநகரின் படகு குழாமுடன் கூடிய சுற்றுலா மையமாக வேளச்சேரி ஏரி விளங்கும். விரைவில் திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பணி தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார். துணை ஆணையர்(பணிகள்) தரேஸ் அகமது, மண்டலக்குழு தலைவர் மு.ஜெயராமன், தலைமைப் பொறியாளர் எம். முருகேசன், மேற்பார்வை பொறியாளர் எம்.ராமமூர்த்தி, மண்டல அதிகாரி எம். கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.

 


Page 33 of 160