Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செல்போன் கோபுரங்களுக்கு உரிமம் கட்டணத்தை உயர்த்தியது ஏன்?

Print PDF

தினகரன்    21.05.2010

செல்போன் கோபுரங்களுக்கு உரிமம் கட்டணத்தை உயர்த்தியது ஏன்?

புதுடெல்லி, மே 21: செல்போன் கோபுரங்களுக்கான உரிம கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது ஏன் என்பது குறித்து 2நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செல்போன் கோபுரங்களுக்கான உரிம கட்டணம் ரூ.1 லட்சமாக இருந்தது. இதை ரூ.5 லட்சமாக உயர் த்தி கடந்த பிப்ரவரி 9ம் தேதி மாநகராட்சி உத்தரவி ட்டது. இந்த கட்டணத்தை மார்ச் மாதத்துக்குள் கட்ட வேண்டும் என்றும் செல்போன் நிறுவனங்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால், செல்போன் நிறுவனங்கள் கட்டவில்லை.

இது பற்றி மாநகராட்சி கூறுகையில்,‘டெல்லியில் மொத்தம் 5,364 செல்போன் கோபுரங்கள் உள்ளன.இதில் 2,412 கோபுரங்கள் மட்டும் உரிமம் பெற கட்டணம் கட்டியுள்ளன. மீதியுள்ள 2,952 கோபுரங்கள் அங்கிகாரம் இல்லாதவை என்று அறிவித்து, அங்கிகாரம் இல்லாத கோபுரங்களுக்கு கடந்த மாதம் 6 மாதம் சீல் வைக்க தொடங்கியது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் செல்போன் நிறுவன உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். செல்போன் கோபுரங்களு க்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதன்பின் மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் கொடுத்த மாநகரா ட்சி, அதற்குள் உரிம கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், அப்போது, பல நிறுவனங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை. இதையடுத்து, சீல் வைக்கும் பணியை மாநகராட்சி மீண்டும் தொடங்கியது.

இதை எதிர்த்தும், கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் உயர் நீதிமன்றத்தில் செல்போன் நிறுவன உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி கைலாஷ் கம்பீர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

‘செல்போன் கோபுரங்களுக்கான உரிம கட்டணத்தை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர் த்தப்பட்டதற்கான காரண த்தை 2 நாளில் மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும வரை செல்போன் கோபுரங்களுக்கு சீல் வைக்கவும் தடை விதித்தார்.