Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மும்பையில் பார்க்கிங் கட்டணம் 100% அதிகரிப்பு

Print PDF

தினகரன்        26.05.2010

மும்பையில் பார்க்கிங் கட்டணம் 100% அதிகரிப்பு

மும்பை,மே 26: மும்பை மாநக ராட்சி நிர்வாகம் வாகன பார்க்கிங் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரித் துள்ளது. மும்பையில் தற்போது கார் களுக்கு முதல் இரண்டு மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது இரு சக்கரவாகனங்களுக்கு 2 ரூபாயாக இருக்கிறது.

அதோடு தற்போது 12 மணி நேரம் மட்டுமே பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரவில் வண்டிகளை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த கட்டணத்தை 100 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இதன் படி கார்களுக்கு முதல் இரண்டு மணி நேரத்திற்கு 10 ரூபாயும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் இது வரை குறைவான கட்டணம் வசூலித்து வந்தாலும் ஒப்பந்ததாரர்கள் அதிக அளவு கட்டணம் வசூலித்து வந்தனர். இதனால் மாநகராட்சி நிர் வாகம் இந்த கட்டண உயர்வை அறிமுகப்படுத்தி இருக் கிறது.

இதன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதலாக 6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த கட்டண உயர்வு உடனே அமலுக்கு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நகரில் உள்ள 18 பார்க்கிங் சென்டர்களில் மட்டும் அமல் படுத்தப்படும்.

எஞ்சிய 63 பார்க்கிங்களில் புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட பிறகு கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். ஒப்பந்ததாரர்கள் அதிக இடங் களில் விதிமுறைகளை மீறி சாலை களில் பாதி இடத்தை அடைத்து வாகனங்களை நிறுத்துவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து முறைப்படி புகார் வந்தால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி போக்குவரத்து பிரிவு இன் ஜினியர் குக்னூர் தெரிவித்துள்ளார்.