Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்

Print PDF

தினமணி 20.07.2010

நெல்லையில் நாளை முதல் தீவிர வரிவசூல் முகாம்

திருநெல்வேலி, ஜூலை 19: திருநெல்வேலி மாநகர் பகுதியில் புதன்கிழமை (ஜூலை 21) முதல் 31 ஆம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம், நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் மூலம் வார்டு வாரியாக வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிஇனங்களையும் செலுத்தலாம். இந்த வரிவசூல் வாகனம் தெருக்களுக்கே சென்று வரிவசூல் செய்யும்.

எனவே பொதுமக்கள் தங்களுடைய நடப்பு வரி மற்றும் நிலுவை வரிகளை, நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி, குடிநீர் துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரிவசூல் வாகனம் வரும் இடம், தேதி, நேரம் வருமாறு: 21 ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை 18-வது வார்டு ஆரோக்கிநாதபுரம், நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 20-வது வார்டு செயின்ட் பால்ஸ் ரோடு பகுதி, 22 ஆம் தேதி 19-வது வார்டு மின்சாரவாரிய அலுவலகம், பெருமாள்புரம் பகுதி.

23 ஆம் தேதி காலை 42-வது வார்டு வாகையடிமுக்கு பகுதி, மாலை 45-வது வார்டு பேட்டை செக்கடித் தெரு பகுதி, 24 ஆம் தேதி காலை 54-வது வார்டு அக்கசாலை விநாயகர் கோயில் தெரு,

மாலை 55-வது வார்டு புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு, 26 ஆம் தேதி 23-வது வார்டு பெருமாள்மேல ரதவீதி பகுதி, கிருஷ்ணன் கோயில் கீழத் தெரு. 27 ஆம் தேதி 27-வது வார்டு என்.ஜி.. ஏ காலனி பஜார் பகுதி, ஜெபாகார்டன் பகுதி, 28 ஆம் தேதி காலை 42-வது வார்டு பெருமாள் சன்னதித் தெரு பகுதி, மாலை 52- வது வார்டு திருநெல்வேலி நகரம் உழவர்சந்தைப் பகுதி, 29 ஆம் தேதி 2 மற்றும் 3-வது வார்டு செல்வ விக்னேஷ்நகர், நன்மெய்யப்பன் தெரு பகுதி, பாலாஜி அவின்யூ, மதுரை ரோடு பகுதி.

30 ஆம் தேதி 25-வது வார்டு திருவனந்தபுரம் ரோடு பகுதி, புதுப்பேட்டை தெரு பகுதி, 31 ஆம் தேதி 36-வது வார்டு காயிதேமில்லத் பள்ளிவாசல் பகுதி, மேலப்பாளையம் பஜார் திடல் பகுதி ஆகிய இடங்களுக்கு நடமாடும் வரிவசூல் வாகனம் வரும் என் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது