Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: டவுன் பஞ்.,

Print PDF

தினமலர் 02.08.2010

சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: டவுன் பஞ்.,

தர்மபுரி: "பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் சொத்துவரி செலுத்த தவறினால் சட்டப்படி ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என செயல் அலுவலர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.பாலக்கோடு டவுன் பஞ்சாயத்தில் வசிப்பவர்கள் டவுன் பஞ்சாயத்துக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதுபோன்ற நடவடிக்கைகளை வரி விதிப்புதாரர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 1920ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நகராட்சி சட்டம் 36வது பிரிவின்படி முதல் அரையாண்டின் சொத்துவரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2வது அரையாண்டின் சொத்துவரியை அக்டோபர் 30ம் தேதிக்குள் செலுத்த வேணடும்.

அவ்வாறு செலுத்தாதவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 2010-2011 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்தும் காலவரையறை கடந்த ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது.இதன் பின்னரும் பலர் சொத்துவரியை செலுத்தவில்லை. அவ்வாறு வரி செலுத்தாத கட்டிட உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்போர், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கான சொத்துவரியை அக்டோபர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.சொத்துவரியை செலுத்த தவறுபவர்கள் மீது ஜப்தி நடடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான அறிவிப்பு கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வீட்டின் உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பொருந்தும்.