Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டடங்களுக்கு வரி உயர்வு: கருத்து கேட்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி 07.09.2010

கட்டடங்களுக்கு வரி உயர்வு: கருத்து கேட்க வலியுறுத்தல்

கொடுமுடி, செப். 6: கொடுமுடி பேரூராட்சியில் ஏற்கனவே வரி விதிப்பு செய்யப்பட்டிருக்கும் கட்டடங்களுக்கு, இனி சொத்துவரி செலுத்துவேர் சங்கத்தை கூட்டி கருத்துக் கேட்ட பின்னர் வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொடுமுடி நகர சொத்துவரி செலுத்துவோர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் தலைவர் கே.முத்துச்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளர் ஆ.ராஜசுப்ரமணியன், பொருளாளர் ஜெ.இளங்கோ முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் டி.ரங்கசாமி வரவேற்றார்.

கொடுமுடி பேரூராட்சியில் 1998-ம் ஆண்டு முதல் சொத்தின் மதிப்பில் 5.5 சதவீதம் என்று காலியிட வரி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். பேரூராட்சி முழுவதும் 15 வார்டுகளிலும் உள்ள வரிவிதிப்பு இல்லாத கட்டடங்களுக்கு வரிவிதிப்பு செய்ய வேண்டும்.

சேலத்தில் உள்ள நகர ஊரமைப்புத் துறை அலுவலகத்திற்கு கொடுமுடியில் கடை கட்டுவோர் 1 சதுர மீட்டருக்கு | 125 கட்ட வேண்டும் என்று உள்ள அரசாணையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

அனைத்து வார்டு பகுதிகளிலும் துப்புறவுப் பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு சுகாதாரம் பேணப்பட வேண்டும். கொசு மருந்து அடிக்கப்பட வேண்டும். தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன